உங்களது வாட்ஸ்அப் ப்ரோபைல் புகைப்படத்தை குறிப்பிட்ட காண்டாக்ட்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?

சமீப காலங்களில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

|

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. சமீப காலங்களில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு சேர்க்கப்பட்ட அம்சங்களில் டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன், ஸ்டேட்டசை மறைப்பது, ப்ரோஃபைல் புகைப்படத்தை மறைப்பது உள்ளிட்டவை பிரபலமாகி இருக்கின்றன.

வாட்ஸ்அப் ப்ரோபைல் புகைப்படத்தை  மறைப்பது எப்படி?

எனினும், வாட்ஸ்அப் செயலியில் ப்ரோஃபைல் புகைப்படத்தை சில பயனர்களுக்கு மட்டும் கஸ்டமைஸ் செய்ய எவ்வித ஆப்ஷனும் வழங்கப்படவில்லை. சிலசமயங்களில் ப்ரோஃபைல் புகைப்படம் அல்லது ஸ்டேட்டசை சில காண்டாக்ட்களுக்கு மட்டும் மறைக்க விரும்புவர்.

இவ்வாறு காண்டாக்ட்களை செயலியில் பிளாக் செய்யாமல் ப்ரோஃபைல் புகைப்படத்தை மறைக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் ப்ரோபைல் புகைப்படத்தை  மறைப்பது எப்படி?

இந்த வழிமுறைகள் இருவிதங்களில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போனின் காண்டாக்ட்டை அழிப்பது மற்றொன்று வாட்ஸ்அப் பிரைவசி செட்டிங்ஸ் மாற்றுவது.

தேவையானவை:

வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

சீரான இணைய வசதி

வாட்ஸ்அப் ப்ரோபைல் புகைப்படத்தை  மறைப்பது எப்படி?

வழிமுறை 1:

காண்டாக்ட் அழிப்பது

- ஸ்மார்ட்போனில் காண்டாக்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

- உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை மறைக்க விரும்பும் நபரின் காண்டாக்டை தேட வேண்டும்.

- இனி காண்டாக்ட்டை ஸ்மார்ட்போனில் இருந்து அழிக்க வேண்டும்

வாட்ஸ்அப் ப்ரோபைல் புகைப்படத்தை  மறைப்பது எப்படி?

வழிமுறை 2:

வாட்ஸ்அப் பிரைவசி செட்டிங் மாற்றுவது

- ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்

- செயலியின் மேல்புறம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்

- இனி செட்டிங்ஸ் மற்றும் அக்கவுண்ட் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்

- இனி பிரைவசி செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- ப்ரோஃபைல் போட்டோ ஆப்ஷனை தேர்வு செய்து மை காண்டாக்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

வழிமுறை 1 மற்றும் 2 தேர்வு செய்து ப்ரோஃபைல் போட்டோவை தேர்வு செய்து மற்ற காண்டாக்ட்களுக்கும் இப்படி செய்யலாம்.

குறிப்பு: ஸ்மார்ட்போனின் காண்டாக்ட்டை டெலிட் செய்யாமல், ப்ரோஃபைல் புகைப்படத்தை மறைக்க விரும்பினால் ப்ரோஃபைல் புகைப்படத்தின் செட்டிங்ஸ் ஆப்ஷனில் நோபடி தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ப்ரோஃபைல் புகைப்படம் அனைவருக்கும் மறைக்கப்பட்டு விடும்.

Best Mobiles in India

English summary
How to enable Dark mode in Google Chrome in Windows 10 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X