Home
Scitech

நிலவில் அரக்கர்களை கண்ட அப்போலோ 11 விண்வெளி வீரர்கள்!

இந்த மூவரும் தங்களது வாழ்நாளின் சாகசப்பயணமான இதில் நிலவிற்கு சென்று திரும்பியதுடன், எட்டு அற்புதமான நாட்களை இந்த பயணத்தில் பெற்றனர்.

ஜூலை 16, 1969 அன்று, நாசாவின் விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் கோலின்ஸ் மற்றும் எட்வின் "பஷ்" ஆல்ட்ரின் ஆகியோர் நிலவை நோக்கி நோக்கி பயணப்பட்டனர். இந்த மூவரும் தங்களது வாழ்நாளின் சாகசப்பயணமான இதில் நிலவிற்கு சென்று திரும்பியதுடன், எட்டு அற்புதமான நாட்களை இந்த பயணத்தில் பெற்றனர். ஜூலை 20 அன்று, கமான்டர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் லூனர் மாடியூல் பைலட் ஆல்ட்ரின் சந்திரனில் தரையிறங்கினர் மற்றும் ஜூலை 21 அன்று நிலவில் கால்பதித்து நடந்த முதல் மனிதர்களாக மாறினர். தற்போது அப்பல்லோ 11மிஷன் 50 வது ஆண்டை நெருங்கிவரும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் நாசாவின் இந்த மிகப்பெரிய சாதனையை அன்புடன் திரும்பிபார்க்கிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங்

நீல் ஆம்ஸ்ட்ராங்

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் "ஒரு சிறிய அடி"(one small step) எடுத்துவைத்ததை, உலகெங்கிலும் உள்ள 650 மில்லியன் மக்கள் லைவ் டிவியில் பார்த்ததாக கணக்கிடப்படுகிறது.நிலவில் தரையிறங்குவதற்கு முன்னர், டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் உள்ள மிஷன் கண்ட்ரோல் மற்றும் அப்பல்லோ 11 குழுவினர் இடையே நடைபெற்ற மணிக்கணக்கிலான உரையாடல்களை நாசா பதிவு செய்துள்ளது.

அப்போலோ 11

அப்போலோ 11

இந்த ஒலிநாடாக்கள்(டேப்)அனைத்தும் கவனமாக டிஜிட்டல்மயமாக்கப்பட்டு

மீட்டெடுக்கப்பட்டுள்ளதன் மூலம், அப்பல்லோ 11 மிஷனில் நடைபெற்ற நமக்கு தெரியாத பல நம்பமுடியாத விசயங்களை வெளிப்படுத்துகின்றன. அதுபோன்ற நம்பமுடியாத உரையாடல்களில் ஒன்று அப்பல்லோ 11பயணத்தின் நான்காம் நாள் நடைபெற்றது. அப்போலோ 11 குழுவினர் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்ததும், நிலவின் மேற்பரப்பில் "அரக்கர்களை" கண்டபோது நிகழ்ந்த உரையாடல் அது.

 பிரமிப்பு மற்றும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது

பிரமிப்பு மற்றும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது

ஆம்ஸ்ட்ராங், காலின்ஸ் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோருக்கு இடையேயான அந்த உரையாடலில், அவர்கள் சந்திரனை நெருங்கியதை உறுதிபடுத்தும் விதமாக, பிரமிப்பு மற்றும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது அவர்களது பேச்சு. விண்கல் தாக்குதலால் ஏற்பட்ட பள்ளத்தாக்குகள், எரிமலை நடவடிக்கை, அகழிகள் உள்ளிட்ட நிலவின் பல்வேறு புவியியல் அம்சங்களால் விண்வெளி வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். மற்றும் குறிப்பாக காமாண்ட் பைலட் காலின்ஸ், சந்திரனின் பயங்கரமான அளவுள்ள மலைகளை கண்டு வியந்தார்.

உரையாடல் தொடர்கிறது

உரையாடல் தொடர்கிறது

நாசாவின் பதிவுகளில் உள்ள ஒரு டிரான்ஸ்கிரிப்ட் கூறுவதாவது: "அற்புதம். நமக்கு பின்னால் பாருங்கள், நிச்சயமாக ஒரு பெரிய பள்ளத்தாக்கை போல் தெரிகிறது. சுற்றியுள்ள மலைகள் பாருங்கள். ஐயோ, அவை அரக்கர்கள்." என்று அந்த உரையாடல் தொடர்கிறது.

கடவுளே

"ஆமாம், இங்கே ஒரு கடமான் இருக்கிறது. நீங்கள் அதை நம்பமாட்டீர்கள். அது இன்னும் பெரியது. கடவுளே! அது மிகப்பெரியது. பிரம்மாண்டமானது. ஜன்னல் வழியாக முழுமையாக காண முடியாத அளவிற்கு பெரியது. நீங்கள் அதை பார்க்க விரும்புகிறீர்களா? உங்கள் வாழ்நாளில் பார்ப்பதிலேயே இது தான் மிகப்பெரியது. நீல்? கடவுளே. அந்த மைய மலையின் சிகரத்தை பாருங்கள் " என நிகழ்கிறது அந்த உரையாடல்.


சந்திரனில் மிக உயரமான மலை மோன்ஸ் ஹ்யூஜென்ஸ் ஆகும். இதன் உயரம் 3.4 மைல் (5.5 கி.மீ).

 பூமிக்கு திரும்பி பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கினர்

பூமிக்கு திரும்பி பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கினர்

கமாண்டர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திரனின் மேற்பரப்பில் நுழைந்த அதேவேளை கோலின்ஸ் காமாண்ட் மாடியூலில் இருந்தார். ஒட்டுமொத்தத்தில், நாசாவின் அப்பல்லோ 11 குழு சந்திரனில் 21 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை செலவிட்டது. இந்த மூன்று விண்வெளி வீரர்களும் ஜூலை 24 அன்று பூமிக்கு திரும்பி பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கினர்.

ரிச்சர்ட் நிக்சன்

ரிச்சர்ட் நிக்சன்

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மூன்று விண்வெளி வீரர்களுக்கும் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை வழங்கினார்.

Best Mobiles in India

English summary
How Apollo 11 astronauts saw 'MONSTERS' on the Moon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X