குறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.!
உலகத்தில் எத்தனையே மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. அறிவியல் உலகத்தில் அனைத்தும் தற்போது சாத்தியமாகி வருகின்றது. காலத்திற்கு ஏற்ற மாற்றம் தான் இந்த போக்குவரத்தில் ஹைப்பர் லூப் தொழில் நுட்பம்.
உலகத்தில் எத்தனையே மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. அறிவியல் உலகத்தில் அனைத்தும் தற்போது சாத்தியமாகி வருகின்றது. காலத்திற்கு ஏற்ற மாற்றம் தான் இந்த போக்குவரத்தில் ஹைப்பர் லூப் தொழில் நுட்பம்.

இந்த ஹைப்பர் லூப் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முதல் போக்குவரத்துக்காக கேப்சூலுலை அமெரிக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. நாம் குறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்ல முடியும். இதன் மூலம் விமானத்தை மிஞ்ச கூடிய வகையில் இந்த திட்டம் வர இருக்கின்றது.
இதன் அடிப்படையில் உலக நாடுகள் மட்டும் அல்லாமல், இந்தியாவும் வேகமாக முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை.

ஹைப்பர் லூப் போக்குவரத்து:
நீண்ட குழாய்ப்பாதை அமைத்து அதற்குள் காற்றில்லா வெற்றிடத்தில் காந்தப்புலத்தை உருவாக்கி சிறப்பான வடிவமைத்த கேப்சூலில் போக்குவரத்தை நடத்துவது ஹைப்பர் லூப் தொழில் நுட்பமாகும்.

1000 கி.மீ வேகம்:
இந்த முறையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் போக்குவரத்து நடத்த முடியும் எனக் கூறப்படுகின்றது. ஹைப்பர்லூப் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள தொழிற் கூட்டத்தில் இதற்கான கேப்சூலை தயாரித்துள்ளது.

32 மீட்டர் நீளம்:
இந்த கேப்சூல் 32 மீட்டர் நீளமுள்ள இந்த கேப்சூல் பிராசில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

2019ம் ஆண்டில் பயன்பாடுக்கு வரும்:
வரும் 2019ம் ஆண்டு இந்தக் கேப்சூல் பயணிகள் போக்குவரத்துக்கு தயாராகிவிடும் என ஹைப்பர்லூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5 டன் எடை கொண்ட கேப்சூல் 72 சென்சார்கள் 75 ஆயிரம் ரிவெட்கள், 7200 சதுர மீட்டர் இழைகம் உள்ளன.

ஆந்திராவில் தொடங்க திட்டம்:
ஆந்திராவில் அனந்தரப்பூர், அமராவதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் இடையே ஹைப்பலூப் போக்குவரத்து திட்டத்தை தொடங்க மாநில் அரசு திட்டமிட்டுள்ளது.

மும்பை- புனேவுக்கு தொடக்கம்:
மும்பை-புனே இடையே ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டத்தை தொடங்க விர்ஜின் குழுமத்துடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் ஆகலாம்:
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர, இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ரயில், விமானப் போக்குவரத்துக்கு மாற்றாக மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பமே ஹைப்பர் லூப்.

எலன் மஸ்க் திட்டம்:
கேப்சூல் போன்ற குறைந்த காற்று அழுத்தம் கொண்ட ஸ்டீல் குழாயில் காந்த விசையைப் பயன்படுத்தி ரயில் போன்று இயக்கப்படும். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களை தொடங்கிய எலான் மஸ்க் என்பவர் தான் இந்த திட்டத்தை முதன் முதலில் முன்மொழிந்தவர்.
எலான் மஸ்க் நிறுவனம் மட்டுமின்றி, விர்ஜின் ஹைப்பர்லூப், கனடாவை சேர்ந்த டிரான்ஸ்பாட் போன்ற நிறுவனங்களும் இந்த திட்டத்திற்காக அதிக பணத்தை முதலீடு செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

விமானத்தை விட குறைந்த செலவு:
விமான கட்டணத்தை விட குறைந்த செலவில், விமானத்தை விட அதிக வேகத்தில் ஹைப்பர்லூப்பில் பயணிக்க முடியும் என்பதுடன், சமூக பொருளதார முன்னேற்றத்திற்கும் இந்த போக்குவரத்து உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2030ல் ஹைப்பர் லூப்:
2023 ஆண்டில் சான்றிதழ் பெற்று 2029 ஆம் ஆண்டில் ஹைப்பர்லூப் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று விர்ஜின் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மும்பை - புனே இடையே ஹைப்பர்லூப்பை செயல்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டில் இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications