2019 இல் என்னென்ன நடக்கும்? என்ன சொல்கிறது நோஸ்ராடாமஸ் கணிப்புகள்!

|

மைக்கேல் டி நோட்ரே-டேம் மிஷேல் நோஸ்டிரேம் என்பவர் தான் பொதுவாக நோஸ்டிராமாஸ் என்ற லத்தீன் மயமாக்கப்பட்ட பெயரில் அழைக்கப்படுகிறார். அவர் ஒரு மருத்துவர், டாக்டர் மற்றும் யூத இனத்தின் பிரெஞ்சு ஜோதிடராக இருந்தார். இந்த பூமியில் வாழ்ந்த மிகவும் புகழ்பெற்ற தீர்க்கதரிசிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார், அதாவது அவரின் கணிப்புகள் பெரும்பாலும் "அப்படியே" நிஜமாகும்.

2019  இல் என்னென்ன நடக்கும்? என்ன சொல்கிறது நோஸ்ராடாமஸ் கணிப்புகள்!

இவருடைய தீர்க்கதரிசன வேலைகளான (கணிப்புகள்) லெஸ் ப்ராபீட்டீஸ் ஆனது முதன்முதலாக 1555 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அவருடைய பெரும்பாலான எழுத்துக்கள் ஆனது எதிர்காலத்தின் சிக்கலான கணிப்புகளை உள்ளடக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நோஸ்ராடாமஸின் கணிப்புகள்

நோஸ்ராடாமஸின் கணிப்புகள்

கூறப்படும் நோஸ்ராடாமாஸின் லெஸ் ப்ராபீட்டீஸ் ஆனது மொத்தம் 353 நாலடிகளை கொண்டுள்ளது. நோஸ்ட்டராமஸின் வாழ்க்கையைப் படித்த பெரும்பாலான ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், அவரது வாழ்க்கை ஆனது மதவெறியினால் துன்பட்டு இருப்பதை கண்டறிந்து உள்ளனர். அந்த காரணத்திற்காக தான், அவர் தனது எழுத்துக்களை மிகவும் இரகசியமான சரணாகதிகளாக மாற்ற முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றவாறே அவர் எழுதிய நாலடிகள் பிரதானமாக அழிவுகளை பற்றியே பேசுகிறது. அவைகள் நேரடியான வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாமல் உருவகத்தினால் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக அவைகள் கிரேக்க மற்றும் இலத்தீன் சொற்களின் கீழ் பயன்படுத்தப்படுகின்றன. அந்த உருவகங்கள் உலகில் நடக்கப்போகும் எதிர்கால நிகழ்வுகளை விவரிக்கிறது

இதுவரை நோஸ்ராடாமஸின் கணிப்புகள் ஏதாவது நிஜமாகி உள்ளதா என்று கேட்டால்? அதற்கு பதில் - ஆம். நோஸ்ராடாமஸின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட கணிப்புகளை பார்ப்போம்.

மனிதன் நிலவில் காலடி வைத்தது (மூன் லேண்டிங்)

மனிதன் நிலவில் காலடி வைத்தது (மூன் லேண்டிங்)

நோஸ்ராடாமஸ் எழுதிய நாலடி இப்படி கூறுகிறது - "அவர் லூனாவின் மூலையில் பயணம் செய்ய வருவார், அங்கு அவர் கைப்பற்றப்பட்டு விசித்திரமான தேசத்தில் போடப்படுவார், பழுத்த பழமானது பெரும் மோசடி, பெரும் குற்றம், பின் ஒரு பெரும் புகழைக் கொடுக்கும்."

இங்கு லூனா என்றால் நிலவு என்று அர்த்தம், அதாவது மனிதர்கள் நிலவிற்கு செல்வார்கள் என்று பொருள். கைப்பற்ற படுவார் என்றால் வீடியோ பதிவு என்று பொருள். விசித்திரமான தேச என்றால் மிகவும் மர்மானதாக கருதப்பட்ட நிலவை என்று பொருள். பழுத்த பழம் என்றால் மனிதர்களின் முதிர்ச்சி (விண்வெளி தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் அளவிலான வளர்ச்சி) என்று பொருள், பெறும் மோசடி என்றால் அப்போலோ 1 விண்கலத்திற்கு ஏற்பட்ட முடிவு என்று பொருள், பெரும் புகழ் என்றால் அமெரிக்காவிற்கு கிடைத்த புகழ் என்று அர்த்தம்.

அணு குண்டு

அணு குண்டு

நோஸ்ராடாமஸ் இப்படி எழுதுகிறார் - "இரண்டு கதவுகளுக்கு அருகிலும், இரண்டு நகரங்களுக்குள்ளும் இதுவரை பார்த்திராத சண்டைகளும், பிளேக் நோயினால் ஏற்பட்ட பஞ்சமும், எஃகு மூலம் மக்கள் வெளியேறுவதும், இரட்சிக்கும் படி கடவுளை நோக்கிய அழுகுரல்களும்."

இதனை ஆராய்ந்த பல அறிஞர்கள் இது போர்க்கால அட்டூழியங்களை குறிக்கிறது என்பதை கண்டு அறிந்ததோடு மட்டுமின்றி குறிப்பாக, இது ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியையும் மற்றும் நாகசாகியில் கைவிடப்பட்ட அணுக் குண்டு பற்றிய ஒரு நல்ல விளக்கம் என்று வாதிடுகின்றனர்.

சரி, நோஸ்டிராமாஸின் 2019 ஆம் ஆண்டின் கணிப்புகள் ஏதேனும் உண்டா?

சரி, நோஸ்டிராமாஸின் 2019 ஆம் ஆண்டின் கணிப்புகள் ஏதேனும் உண்டா?

நோஸ்டிராமாஸின் நாலடியின் படி, இந்த 2019 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் ஏற்படுத்தவற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர் இப்படி எழுதுகிறார் - "கடவுளின் நகரத்தில், ஒரு பெரிய இடி இருக்கும். கோட்டையின் இரண்டு சகோதரர்களும் சகிப்புத்தன்மையை இழப்பார்கள். பெரிய தலைவர் இறக்கப் போகிறார், பெரிய நகரம் எரியும் போது மூன்றாவது பெரிய போர் தொடங்கும்."

அதோடு முடித்து கொள்ளாமல், நோஸ்டிராமாஸின் நாலடி ஆனது அமெரிக்காவின் பேரழிவு தரும் நிகழ்வுகளின் தொடர்ச்சியை முன்னறிவித்துள்ளதாகத் தோன்றுகிறது. "ஒரு பூகம்பம் குறிப்பாக அமெரிக்காவின் மேற்குப் பகுதி தாக்கும் என்றும், சக்தியானது உலகெங்கும் உள்ள நிலங்களில் உணரப்படும் என்றும் " நோஸ்ராடாமஸ் தனது புத்தகத்தில் எழுதியிருப்பதாக நம்பப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா

அமெரிக்கா மற்றும் ரஷ்யா

மறுபுறம், நோஸ்டிராமாஸ், அமெரிக்கா மற்றும் ரஷ்யா என்கிற மிக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே ஒரு போர் மூளும் என்று முன்கூட்டியே அவர் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. "இருமுறை போடப்பட்டு, இரண்டு முறை கீழே தள்ளி, கிழக்கையும் மேற்குப் பலவீனப்படுத்திவிடும்.கடலில் சவாரி செய்யப்பட்ட பல போர்களைத் தொடர்ந்து அதன் எதிரி தேவைப்படுகையில் தோல்வியடைவார்." என்கிறார். இதன் உண்மையான அர்த்தம்,, பேசப்படும் காரியம் ஆனது நிகழ்ந்து முடிந்த பின்னரே தெரிய வரும். அதுவரை (இந்த கணிப்புகளை நம்புவார்கள்) காத்திருக்கலாம்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வரும் தேஜாஸ்; எதிரி நாடுகள் உஷார்!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வரும் தேஜாஸ்; எதிரி நாடுகள் உஷார்!

லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் (எல்சிஏ) ஆன தேஜாஸ் போர் விமானம் ஆனது கூடிய விரைவில் இந்திய விமான படையில் அறிமுகமாகி, விமானப்படை பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. தேஜாஸ் விமானத்தின் அனைத்து கட்ட சோதனைகளும் முடிவடைந்து விட்ட நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி இந்த தகவலை உறுதி செய்து உள்ளார்.

அறிமுகமாக உள்ள தேஜாஸ் போர் விமானத்தில் ஏர்போர்ன் எர்லி வார்னிங் அன்ட் கண்ட்ரோல் சிஸ்டம் (Airborne Early Warning and Control System) அமைப்பும் சேர்க்கப்பட உள்ளது.

டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி

டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி

"எல்சிஏ தேஜாஸ் மற்றும் ஏர்போர்ன் எர்லி வார்னிங் அன்ட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆனது, அறிமுகத்திற்கு முன்னதான இறுதிகட்ட சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளன" என்று டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்து உள்ளார். "டி.ஆர்.டி.ஓ தினம்" கொண்டாடப்படும் நிலையில், அரசு நடத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு ஆனது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1958 ஆம் ஆண்டில், 10 ஆய்வகங்கள் கொண்டு கொண்டு ஆரம்பிக்கப்பட்டதை, தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி, ஆல் இந்தியா ரேடியோவில் (ஏஆர்) நினைவு கூர்ந்தார்.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

டி ஆர் டி ஓ ஆனது கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவிற்காக ஏவுகணைகள், ரேடார், சோனார்கள், டார்பெபொரோஸ் எனப்படும் வெடிக்கப்பல்கள் மற்றும் பிற ஆயுத அமைப்புகளுக்காக வேலை செய்து வருகிறது" என்றும் ரெட்டி கூறி உள்ளார். தேஜாஸ் போர் விமானம் ஆனது டி.ஆர்.டி.ஓ வின் ஏரோனாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏ.டி.ஏ.) மூலம் வடிவமைக்கப்பட்டு, அரசு நடத்தும் பாதுகாப்பு விண்வெளி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல் - HAL) மூலம் கட்டமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேஜாஸ் போர்

தேஜாஸ் போர்

இப்படியான தேஜாஸ் போர் விமானம் ஆனது இந்திய விமானப்படையின் (IAF) நான்காம் தலைமுறை சூப்பர்சோனிக் போர் விமானமாகவும் மற்றும் இதன் மாறுபாடு இந்திய கடற்படையிலும் சேர உள்ளது. இந்த இரண்டு விமானங்களின் ஆயுதமேந்திய பதிப்பிற்கான இறுதி செயல்பாட்டு அனுமதி (FOC) ஆனது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான பார்வை, மற்றும் கண்காணிப்பு

முழுமையான பார்வை, மற்றும் கண்காணிப்பு

ஒருபக்கம் தேஜாஸ் சோதனைகளை நடத்தி வரும் டி.ஆர்.டி ஓ, மறுகையில் ஆறு வகையான அடுத்த தலைமுறை ஏ.இ.வி மற்றும் சி.எஸ்.ஏ களை உருவாக்கி வருகிறது. அவைகள் இந்திய விமான படையின், நீண்ட தூரம் மற்றும் முழுமையான பார்வை, மற்றும் கண்காணிப்பு மற்றும் கண்டறிதலை மேம்படுத்த உள்ளது. இதற்கு முன்னதாக டி ஆர் டி ஆனது பிரேசிலிய எம்பிரேர்-145 மாற்றியமைக்கப்பட்ட ஜெட் விமானத்தில் 200-கிமீ வீச்சு மற்றும் 240 டிகிரி கோணத்தை உருவாக்கியதும், தற்போது அதனை அதிகரிக்கும் வண்ணம், அதாவது 300 கிமீ வீச்சு மற்றும் 360 டிகிரி கோணம் என்கிற அளவிலான தளத்தை கொண்டு பணியாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

50 க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள்

50 க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள்

அதீத உழைப்பின் காரணமாக, அரசு நடத்தும் நிறுவனமான டி ஆர் டி ஓ ஆனது பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதன் விளைவாக இதன் ஆய்வகங்களின் எண்ணிக்கையும், அதனால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளும், நிறுவனத்தின் நிலைப்பாடும் பல திசைகளிலும் வளர்ச்சியை கண்டுள்ளது. "ஏரோனாட்டிக்ஸ், ஆயுதங்கள், மின்னணுவியல், போர் வாகனங்கள், பொறியியல் அமைப்புகள், கருவி, ஏவுகணைகள், மேம்பட்ட கணினி மற்றும் சிமுலேஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் 50 க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் ஈடுபட்டுள்ளன," என்று டி ஆர் டி ஓ தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ராடார் மற்றும் மின்னணு போர்

ராடார் மற்றும் மின்னணு போர்

முறை அதை உறுதி படுத்தும் வண்ணம், இந்நிறுவனம் ஏறக்குறைய 5,000 விஞ்ஞானிகள் மற்றும் 25,000 துணை ஊழியர்கள் ஆகியோருடன், ஏவுகணைகள், ஆயுதங்கள், எல்சிஏ கள், ராடார் மற்றும் மின்னணு போர் முறைகளை உருவாக்கும் மாபெரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஏரோனாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி

ஏரோனாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி

தேஜாஸ் போர் விமானம் ஆனது நேற்று இன்று தொடங்கிய திட்டம் அல்ல. கடந்த 1984 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அதன் முதல் உள்நாட்டு விமானத்தை கட்டியெழுப்பும் நடைமுறைகளைத் தொடங்குவதில் உறுதியாக இருந்தது. பின் அந்த கனவை பூர்த்தி செய்யும் நோக்கத்தின் கீழ், ஏரோனாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) எனும் அமைப்பு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. பின் 1986 ஆம் ஆண்டில், இந்த திட்டத்திற்காக ரூ .575 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Here’s What Nostradamus Predicted for 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X