ஸ்பேஸ்சூட் இல்லாமல் விண்வெளிக்குள் சென்றால் என்னவாகும்?
அந்த சூழல், சூரியனின் தீங்கு விளைவிக்கும் அல்ட்ரா வைலட் கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது மற்றும் வெப்பநிலைகளை ஒழுங்குபடுத்துகிறது.
நம்மில் பெரும்பாலானோர்கள், என்றாவது ஒரு நாள் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்று கற்பனை செய்து இருப்போம். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே குதர்க்கமாக கற்பனை செய்து இருப்பார்கள்.

அதாவது - ஒருவேளை ஸ்பேஸ்சூட் (அதாவது விண்வெளி உடை) இல்லாமல் விண்வெளிக்குள் சென்றால் என்னவாகும்? ஸ்பேஸ்சூட் இல்லாமல் விண்வெளிக்குள் நுழைந்தால் நமது உடலுக்கு என்ன நடக்கும்? கருகி விடுவோமா? அல்லது வெடித்து விடுவோமா? அல்லது சினிமாக்களில் காட்சி படுத்துவது போன்று ஏதாவது மிகவும் விசித்திரமாக நடக்குமா? அல்லது ஸ்பேஸ்சூட் என்பதெல்லாம் வெறும் மாயை, விண்வெளிக்குள் நுழைய எதுவுமே தேவை இல்லை என்று நினைக்கிறீர்களா? இந்த அத்துனை கேள்விகளுக்குமான விடைகளை ஆராய்வதே இந்த தொகுப்பு.

வளிமண்டலப் போர்வை அதற்கு இல்லை!
பூமியை பொறுத்தவரை, நாம் பாதுகாப்பான முறையில், மிகவும் அழகான மற்றும் வசதியான சூழலில் வாழ்ந்து வருகிறோம். அந்த சூழல், சூரியனின் தீங்கு விளைவிக்கும் அல்ட்ரா வைலட் கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது மற்றும் வெப்பநிலைகளை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் நல்லதொரு வளிமண்டல அழுத்தத்தையும் பராமரிக்கிறது. ஆனால் விண்வெளியோ இதற்கு நேர் மாறானது. விண்வெளி எனும் வெற்றிடம் மிகவும் விரோதமானது. குறிப்பாக, பூமிக்கு இருப்பது போன்று அழகான தடிமனான வளிமண்டலப் போர்வை அதற்கு இல்லை. அதனால் விண்வெளிக்குள் எல்லா வகையான பொருட்களும் வெளிப்படும். அந்த வெளிப்பாட்டில் ஒன்று தான் - ஆக்ஸிஜன் இல்லாமை மற்றும் கூடுதலான எபிலிசம் ஆகும்.

அதென்ன எபிலிசம்?
எபிலிசம் என்பது உடல் திரவங்களில் ஏற்படும் குமிழ்களின் உருவாக்கம் ஆகும். இது சுற்றுச்சூழல் அழுத்தம் குறைவதால் ஏற்படுவதால் உருவாகின்றன. வெற்றிடத்தில் (விண்வெளியில்) அழுத்தம் குறைவு என்பதால் மனிதர்களின் உடலில் உள்ள திரவங்களின் கொதிநிலை புள்ளி ஆனது உடலின் சாதாரண வெப்பநிலைக்கு கீழே குறையும். பின் மனித உடலில் உள்ள குழாய்களில் அதிகப்படியான குமிழ்களை உருவாக்கும், அது மிகவும் குழப்பமானதொரு நிலையை ஏற்படுத்தும். அதன் விளைவாக, ஸ்பேஸ்சூட் இல்லாமல் விண்வெளிக்குள் நுழையும் மனிதனின் உடல் வீங்க ஆரம்பிக்கும். கிட்டத்தட்ட சாதாரண அளவை விட இரண்டு மடங்கு கூடுதலாக வீக்கம் இருக்கலாம்.

ஒரு கட்டத்தில் வெடித்து விடுவோமா?
மனித உடல் வீங்குவதென்பது மோசமான காரியமாக இருக்கலாம். அதற்காக நாம் வெடித்து விட மாட்டோம். ஏனெனில் நம் தோல் மிகவும் நீட்டத்தக்கதாக இருப்பதால் நாம் வெடிக்க மாட்டோம். குமிழ்களின் விளைவால் உங்கள் இரத்தமும் கொதிக்காது. ஆனால் நிச்சயமாக, ஒரு மிகப்பெரிய வலியை கொடுக்கும் மற்றும் உடலின் இரத்த ஓட்டமும் தடை செய்யப்படும். "ஒருவேளை" எபிலிசத்தில் இருந்து நீங்கள் தப்பித்தால், மற்றொரு தீவிர ஆபத்தான ஆக்ஸிஜனின் பற்றாக்குறை உங்களை ஒரு வழி செய்து விடும். ஆம் விண்வெளியில் சுமார் 15 விநாடிகளுக்குப் பிறகு, உங்கள் உடலில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன்களையும் உங்கள் உடல் பயன்படுத்தியிருக்கும். 16வது நொடியில் நீங்கள் உங்களின் நினைவை இழந்து இருப்பீர்கள்.

நான் 100 எண்ணும் வரை மூச்சை பிடிப்பேன்!
உங்களில் சிலர், "நான் 100 எண்ணும் வரை மூச்சை இழுத்து பிடித்து இருப்பேன்" என்று கூறலாம். ஆனால் விண்வெளியில் நிலைமை வேறு, பூமியில் இருப்பது போன்ற போதுமான அழுத்தம் இல்லாத காரணத்தால் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும், அது ஆக்ஸிஜனில் ஒரு பெரிய பிரச்சனையை உண்டாக்கும். அதாவது உங்கள் உடலில் இருக்கும் மீதமுள்ள காற்று வேகமாக விரிவடைந்து, நுரையீரலை முறித்து விடும். நினைவை இழந்து விட்டால், நீங்கள் இறப்பதற்கு இன்னும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உள்ளன என்று அர்த்தம்.

கொடூரமான சூரிய கதிர்கள்
இந்த இடத்தில தான் கொடூரமான சூரிய கதிர்கள் அதன் வேலையை காட்ட ஆரம்பிக்கும்.அதன் அனைத்து மோசமான யூவி பிற உயர் ஆற்றல் ஃபோட்டான்கள் (எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்வீச்சு) உங்கள் டி என் ஏ வை பதம் பார்க்கும். (ஒருவேளை நீங்கள் உயிரோடு இருந்தால்) இது புற்றுநோயை ஏற்படுத்தும் பிறழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

உங்களின் உடல் ஏலியன்களால் கைப்பற்ற படலாம்!
பொதுவாக விண்வெளியில் மிகவும் குளிராக இருக்கும். அதனால் மரணத்தை தொடர்ந்து, நீங்கள் மெதுவாக
உறைய ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் விண்வெளியில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, அடுத்த 12 முதல் 26 மணி நேரத்திற்குள் உங்களின் உடல் அருகாமை நட்சத்திரத்தை அடையும். பின் உங்களின் உடல் மிருதுவான முறையில் எரிக்கப்படும். ஒருவேளை உங்களின் உடல் பயணிக்கும் வழியில் எந்தவொரு நட்சத்திரமும் இல்லை என்றால், விண்வெளியில் மிதந்து கொண்டே இருப்பீர்கள். உடலில் உருவாகும் குடல் பாக்டீரியா உள்ளிருந்து வெளியே உடலை சாப்பிட ஆரம்பிக்கும், அது வேகமாக நடக்காது. மிக மிக மெதுவாக நடக்கும். ஒருவேளை அது மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு கூட நிகழலாம். யாருக்கு தெரியும், அந்த இடைவெளியில் உங்களின் உடல் ஏலியன்களால் கைப்பற்ற படலாம், ஆச்சரியப்படுவதற்கு இல்லை!


Click it and Unblock the Notifications