சீனாவின் யூடூ 2 ரோவர் நிலவில் என்ன கண்டுபிடித்துள்ளது தெரியுமா?

|

சீனாவின் லூனார் ஆய்வு குழு யூடூ 2 ரோவரிலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது முன் எப்போதும் அடையாளம் காணப்படாத ஒரு பொருளின் தன்மையை வெளிப்படுத்துகிறது.

ஆர்வத்தை கிளப்பியது

ஆர்வத்தை கிளப்பியது

சேன்ஜ் 4 மிஷனின் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதம் முதல்முறையாக மென் தரையிறக்கம் மூலம் நிலவில் தரையிறங்கிய இந்த ரோவர், ஜூலை மாதம் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது. இதுதொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கைகள் மற்றும் விவரங்கள் பரவலாக இதுதொடர்பான ஆர்வத்தை கிளப்பியது .

யூடூ 2 ரோவரின் முக்கிய கேமரா

யூடூ 2 ரோவரின் முக்கிய கேமரா

யூடூ 2 ரோவரின் முக்கிய கேமரா எடுத்த புகைப்படத்தில், ஒரு பள்ளத்தாக்கின் மையப்பகுதியானது அதன் சுற்றுப்புறங்களைக் காட்டிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் ஒரு பொருளை, அதுவும் பிரகாசமான புள்ளி கொண்டிருப்பதை காணமுடிகிறது. இந்த புகைப்படமானது சீன மொழி- அறிவியல் வெளியீடான "அஃவர் ஸ்பேஸ்"-ன் Weibo சமூக ஊடக கணக்கின் மூலம் வெளியிடப்பட்டது.

ஐ.ஒ.எஸ். 13.2 இயங்குதளம் அறிமுகம்.! என்னென்ன சிறப்பம்சங்கள்.!ஐ.ஒ.எஸ். 13.2 இயங்குதளம் அறிமுகம்.! என்னென்ன சிறப்பம்சங்கள்.!

 நோட்ரே டேம்

நோட்ரே டேம்

யூடூ 2 அணியினரின் கவனத்தை இது ஈர்க்கும் போதிலும், ​​சீன ஊடகங்கள் கூறியது போல இந்த பொருள் முற்றிலும் மர்மமாகத் தெரியவில்லை.


இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் நிலவு விஞ்ஞானி கிளைவ் நீல் இதுகுறித்து கூறுகையில், 1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 17 பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்ட தாக்கக் கண்ணாடி மாதிரியுடன் இந்த பொருள் இயற்கையாகவே பரவலாக ஒத்திருக்கிறது என்ற முந்தைய கருத்தை இப்புகைப்படம் வலுப்படுத்துகிறது என்று கூறினார்.

உருகும் கண்ணாடி

உருகும் கண்ணாடி

விண்வெளி வீரர் மற்றும் பயிற்சி பெற்ற புவியியலாளர் ஹாரிசன் "ஜாக்" ஷ்மிட் சேகரித்த மாதிரி 70019,, அடர்ந்த, உடைந்த தாதுக்களின் துண்டுகள் ஒன்றாக சேர்ந்து மற்றும் கருப்பு, பளபளப்பான கண்ணாடியால் உருவானது. ஒரு கிரக மேற்பரப்பில் அதிவேக விண்கல் தாக்குவதன் மூலம் தாக்க உருகும் கண்ணாடி உருவாக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்.

யனுள்ள தகவல்கள் இல்லை

யனுள்ள தகவல்கள் இல்லை

மேரிலாந்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் நாசா போஸ்ட்டாக்டோரல் புரோகிராம் பயிலும் டான் மோரியார்டி, படத்தை அதன் துல்லியமான தன்மை குறித்து தடயங்களைத் தேடி பகுப்பாய்வு செய்து செயலாக்கியுள்ளார். இந்த சுருக்கப்பட்ட புகைபடத்தில் ஒரு மூலப் படம் கொண்டிருக்கும் பல பயனுள்ள தகவல்கள் இல்லை என்றாலும், அளவுருக்களை சரிசெய்வதன் மூலம் பல நுண்ணிய தகவல்களை பெற முடியும் என்று மோரியார்டி கூறினார்.

துண்டுகளின் வடிவம்

துண்டுகளின் வடிவம்

"இந்த துண்டுகளின் வடிவம் இப்பகுதியில் உள்ள மற்ற பொருட்களுடன் மிகவும் ஒத்ததாகத் தோன்றுகிறது. இது நமக்குச் சொல்வது என்னவென்றால், இந்த பொருள் அதனைச் சுற்றியுள்ள பொருள்களை போன்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. இதனை சுற்றியுள்ள மண்ணைப் போலவே சந்திர மேற்பரப்பில் ஏற்பட்ட தாக்கங்களால் உடைந்திருக்கலாம்" " என்று மோரியார்டி கூறினார்.

டிக்டாக் இளைஞர்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவும் புதிய படைப்பை உருவாக்கிய இளைஞர்!டிக்டாக் இளைஞர்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவும் புதிய படைப்பை உருவாக்கிய இளைஞர்!

நிச்சயமாக ஒரு பாறையை இதில் பார்க்கிறோம்

நிச்சயமாக ஒரு பாறையை இதில் பார்க்கிறோம்

"இங்குள்ள மிகவும் நம்பகமான தகவல் என்னவென்றால், இப்பொருள் ஒப்பீட்டளவில் அடர்ந்த நிறமுடையது. ஒரு மென்மையான மேற்பரப்பில் ஒளி ஒளிரும் வாய்ப்பு உள்ளபோதிலும், இது பெரிய, இருண்ட பகுதிகளுக்குள் பிரகாசமான பொருள் பதிக்கப்பட்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறது. மேலும் இப்பொருள் கலவையில் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கலாம்" என்கிறார் மோரியார்டி.

இந்த புகைப்படம் இப்பொருளின் தோற்றம் பற்றிய ஒரு கருத்தையும் தருகிறது. பள்ளத்தாக்கு உருவாக்கும் தாக்கம் அல்லது அது ஒரு ப்ரெசியாவாக இருக்கலாம் அல்லது உயர்பரப்பின் மேலோடு, கண்ணாடி, தாக்கப் பொருள் மற்றும் மாரே எனப்படும் எரிமலை "கடல்களில்" இருந்து பாசால்ட்டுகள் போன்றவற்றால் இந்த பொருள் உருவாகியிருக்கலாம். "ஆனால் நாங்கள் நிச்சயமாக ஒரு பாறையை இதில் பார்க்கிறோம்," என முடிக்கிறார் மோரியார்டி.


Best Mobiles in India

English summary
Here's What China's Yutu 2 Rover Found on the Far Side of the Moon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X