உங்கள் குழந்தைகளை "காப்பாற்ற போகும்" ஜப்பான் கரப்பான் பூச்சிகள்!

|

"கரப்பான்பூச்சிகளின் விளைவாக ஏற்படும் நோய்கள் என்னென்ன?" என்று கூகுள் செய்தால்.. உங்களுக்கு ஒரு நீளமான பட்டியலே கிடைக்கும்.

அந்த அளவிற்கு, கரப்பான்பூச்சிகள் - மனிதர்களுக்கு "எதிரான வேலைகளை" செய்யும் ஒரு உயிரினமாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது, கரப்பான்பூச்சிகளால் நம்மை எப்படி காப்பாற்ற முடியும்? அதுவும் குழந்தைகளை!

கண்டிப்பாக காப்பாற்றும்.. ஏனென்றால்?

கண்டிப்பாக காப்பாற்றும்.. ஏனென்றால்?

கரப்பான்பூச்சிகள் என்றதுமே, நமது வீடுகளில் ஈரப்பதமான சந்து பொந்துகளில், சமையல் அறைகளில், கழிவறைகளில் மறைந்து வாழும் சாதாரண கரப்பான்பூச்சிகள் என்று நினைத்து விட வேண்டாம்.

நாங்கள் இங்கே பேசுவது ஜப்பான் நாட்டின் சைபோர்க் கரப்பான்பூச்சிகளை (Cyborg Cockroaches) பற்றி!

மரண பீதியில் அமெரிக்கா.. மரண பீதியில் அமெரிக்கா.. "இது" நடக்குற வரைக்கும் பேச்சு மூச்சு இருக்காது!

இதெப்படி

இதெப்படி "குழந்தைகளை" காப்பாற்றும்?

எப்போது, என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத பல வகையான இயற்கை பேரழிவுகளுக்கு மத்தியில் தான், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை தீர்க்கமாக நம்பும் எவருமே..

..ஜப்பானின் சைபோர்க் கரப்பான்பூச்சிகள் ஆனது, தன்னை காப்பாற்றாது என்றாலும் கூட, தன் வருங்கால சந்ததியினரை (தன் குழந்தைகளை) காப்பாற்றும் என்பதையும் நம்புவார்கள்!

இந்த கரப்பான்பூச்சிகளிடம் அப்படி என்ன சக்தி இருக்கிறது?

இந்த கரப்பான்பூச்சிகளிடம் அப்படி என்ன சக்தி இருக்கிறது?

சக்திகள் எதுவும் இல்லை; ஆனால் திறமைகள் இருக்கிறது.

அதாவது (வருங்காலத்தில்) நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவு நடக்கும் போது, அதில் உயிர் பிழைத்தவர்கள் டன் கணக்கிலான இடிபாடுகளுக்குள் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படலாம்.

அதுபோன்ற சூழ்நிலைகளில், மனிதர்களால் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாத இடங்களில் நுழைந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை கண்டுபிடிக்கப்போவது எது தெரியுமா? இந்த சைபோர்க் கரப்பான் பூச்சிகள் தான்!

யாருகிட்ட? மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை யாருகிட்ட? மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை "வாய் பிளக்க" வைக்கும் இந்தியா!

ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படும்!

ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படும்!

இந்த சைபோர்க் கரப்பான் பூச்சிகள் ஆனது சோலார் செல்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் கலவையால் உருவான "பேக்பேக்குகளை" சுமக்கும்.

அதாவது இந்த கரப்பான் பூச்சிகளின் இயக்கத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த முடியும்; இதை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்தும் உள்ளனர்!

இந்த கரப்பான் பூச்சியின் அடிவயிற்றில்!

இந்த கரப்பான் பூச்சியின் அடிவயிற்றில்!

ஜப்பானின் Thin-Film Device Laboratory-ஐ சேர்ந்த கென்ஜிரோ ஃபுகுடா மற்றும் அவரது குழுவினர், வெறும் 4 மைக்ரான் தடிமன் கொண்ட ஒரு நெகிழ்வான சோலார் செல் பிலிம்-ஐ உருவாக்கினர்.

ஒரு மனித முடியை விட மிகவும் மெல்லிய அந்த சோலார் செல் பிலிம் ஆனது சைபோர்க் கரப்பான் பூச்சியின் அடிவயிற்றில் பொருத்தப்பட்டுள்ளது!

70 ஆண்டுக்கு 1 முறை தான் 70 ஆண்டுக்கு 1 முறை தான் "இது" வானத்தில் தெரியும்! எப்படியாவது பார்த்துடுங்க!

அபாயகரமான பகுதிகளுக்குள் நுழையும்!

அபாயகரமான பகுதிகளுக்குள் நுழையும்!

சைபோர்க் கரப்பான் பூச்சிக்குள் பொருத்தப்பட்ட பிலிம் ஆனது, அதை சுதந்திரமாக நகர்த்த அனுமதிக்கும் அதே நேரத்தில், சோலார் சேல் ஆனது கரப்பான் பூச்சியின் பின்பகுதியில் உள்ள Sensory organs-க்கு திசை தொடர்பான சமிக்ஞைகள் (directional signals) மற்றும் செயலாக்க சக்தியை உருவாக்கும்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, வருங்காலத்தில், இதுபோன்ற சைபோர்க் பூச்சிகள் ஆனது ரோபோக்கள் கூட செல்ல முடியாத மிகவும் அபாயகரமான பகுதிகளுக்குள் நுழையும்!

இதெப்படி ரோபோட்களை

இதெப்படி ரோபோட்களை "தோற்கடிக்கும்"?

சிறிய ரோபோக்களுக்குள் இருக்கும் பேட்டரிகள் விரைவில் தீர்ந்துவிடும், எனவே அவைகளை கொண்டு நீண்ட நேர ஆய்வுகளை (தேடல்களை) நிகழ்த்த முடியாது.

ஆனால் "சைபோர்க் பூச்சிகள்" என்று வரும் போது, ​​அந்த பூச்சியானது தன்னை தானே நகர்த்திக்கொள்ளும்; எனவே மின்சார தேவைகள் இருக்காது!

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

இருப்பினும்.. இதில் 2 சிக்கல்கள் உள்ளன!

இருப்பினும்.. இதில் 2 சிக்கல்கள் உள்ளன!

ஒன்று- இந்த ஆய்வு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. இரண்டாவது - பூச்சிகளுக்கு ஏற்ற மிகச்சிறிய Component-களை உருவாக்குவது!

கூறுகள் சிறியதாக இருந்தால் தான், பூச்சிகளால் எளிதாக நகர முடியும்; சென்சார்கள் மற்றும் கேமராக்களை கூட சுமந்து செல்ல முடியும்!

இப்போது சொல்லுங்கள்.. "இந்த" ஜப்பான் கரப்பான் பூச்சிகளால் மனித உயிர்களை காப்பாற்ற முடியும் தானே?!

Source, Photo courtesy: www.reuters.com

Best Mobiles in India

English summary
Here is Why Japan Cyborg Cockroach Are Better Than Robots While Rescue Humans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X