Home
Scitech

பைபிளில் மறைந்து உள்ள 8 அறிவியல் உண்மைகள்; அப்பட்டமான ஆதாரங்கள்!

பண்டைய நாகரிகங்கள் அனைத்துமே, பல நூற்றாண்டுகளாக பூமி ஆனது உண்மையில் வலிமை வாய்ந்த கடவுளால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று நினைத்தனர்.

கடந்த பல நூற்றாண்டுகளாக, விஞ்ஞானத்தின் தர்க்க ரீதியான காரணத்திற்கும், வரலாற்றில் மிக முக்கியமான புனித நூலாக பைபிளை பாதுகாக்கிறவர்களின் விசுவாசத்திற்கும் இடையிலான போராட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. விஞ்ஞானத்தையும், பைபிளையும் நாம் ஒரு தொலைதூர கண்ணோட்டத்தில் வைத்து பார்த்தால், விஞ்ஞானமும் சரி, பைபிள் புத்தகமும் சரி, தங்களின் தனிப்பட்ட மேலாதிக்கத்தை நிரூபிப்பதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாய் இல்லை.

பைபிளில் மறைந்து உள்ள 8 அறிவியல் உண்மைகள்; அப்பட்டமான ஆதாரங்கள்!

புனித நூலான பைபிள் உண்மையிலேயே விஞ்ஞானத்திற்கும், அறிவியலுக்கு எதிரானதா? பைபிள் மட்டுமின்றி பண்டைய மத நூல்கள் அனைத்துமே அறிவியலுக்கு எதிரானதா? பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை பைபிளும், மற்ற பண்டைய நூல்களும் குறிப்பிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆராயும் தொகுப்பே இது!

விஞ்ஞானம்

விஞ்ஞானம்

விஞ்ஞானம் எப்போதுமே மாறிக்கொண்டே போகும் ஒரு விடயமாகும். இது வரையிலாக அது எண்ணற்ற தத்துவங்களை நிராகரித்து உள்ளடித்து, நிராகரிக்க உள்ளது மறுகையில் பல தத்துவங்களையும், கோட்பாடுகளையும் நிரூபித்து உள்ளது மற்றும் நிரூபிக்கவும் உள்ளது. இப்படியாக அறிவியல் நிரூபித்த விடயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினால், பைபிளில் சில விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்தும் குறிப்புகள் இருக்கிறது என்று கூறினால் நம்புவீர்களா? இதோ ஆதாரம்! (இந்த கட்டுரையில் இடம்பெறும் பைபிள் வாசகங்கள் ஆனது ஆங்கலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதும் பைபிளில் இருக்கும் படியே இருக்காது என்பதை முன்னரே குறிப்பிட விரும்புகிறோம்.)

உலகம் தட்டையான வடிவத்தில் இல்லை

உலகம் தட்டையான வடிவத்தில் இல்லை

இதை சொன்னால் சிலர் ஆச்சரியப்படுவார்கள், ஆனால் உண்மை என்னவெனில் நாம் வாழும் இந்த கிரகத்தின் வடிவத்தை பைபிள் குறிப்பிடுகிறது. கற்பனையை பறக்க விட வேண்டாம், உலகம் தட்டையான வடிவத்தில் இல்லை என்று பைபிள் குறிப்பிடுகிறது. பைபிள் கூறுகிறது: அவர் பூமியின் வட்டத்தின் மேலே உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்க, அதின் வாசிகள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். அவர் பரலோகத்தின் வானங்களை விரித்து, வாழ்வதற்கான கூடாரங்களைப் போல் ஆக்குகிறார் என்கிறது.

காற்றுக்கு எடை உள்ளது

காற்றுக்கு எடை உள்ளது

மேலும், "ஒளி மற்றும் இருளுக்கு இடையிலான எல்லைக்குள் தண்ணீரின் முகத்தில் அவர் ஒரு அடிவானத்தில் பொறிக்கப்பட்டுள்ளார்." என்றும் கூறுகிறது. அதாவது பைபிள் புத்தகம் ஆனது கிரகத்தின் வடிவைத் தவிர, காற்றுக்கு எடை உள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது. அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானத்தின் கீழிருக்கிற எல்லாவற்றையும் பார்க்கிறார். கடவுள் காற்றின் எடையையும், தண்ணீரையும் அளந்தார் என்கிறது.

புவியீர்ப்பு விசை

புவியீர்ப்பு விசை

மேலும், புவியீர்ப்பு விசைகளின் மூலம் தான் பூமி ஆனது விண்வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் பைபிள் குறிப்பிடுகிறது. பண்டைய நாகரிகங்கள் அனைத்துமே, பல நூற்றாண்டுகளாக பூமி ஆனது உண்மையில் வலிமை வாய்ந்த கடவுளால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று நினைத்தனர். உதாரணமாக, கிரேக்கர்கள் பூமியை தாங்குவது அட்லஸ் தான் என்று நம்பினர்.

தெர்மோடைனமிக்ஸின் இரண்டாவது விதி

தெர்மோடைனமிக்ஸின் இரண்டாவது விதி

ஆனால் பைபிளின் படி, அவர் வடக்கை வெற்று இடத்திற்கு நீட்டினார்; அவர் பூமியை ஒன்றும் இல்லாத இடத்தில் நிறுத்தினார் என்கிறது. இந்த இடத்தில சிலர் தெர்மோடைனமிக்ஸின் இரண்டாவது விதியை மேற்கோள் காட்டுகின்றன. ஒரு தனிமைபடுத்தப்பட்ட அமைப்பின் என்ட்ரோபியானது குறையாமல் இருப்பது தான் தெர்மோடைனமிக்ஸின் இரண்டாவது விதி ஆகும்.

வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி

வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி

இது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி என்றும் அழைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பானது எப்போதும் வெப்ப சமநிலையிலேயே இருக்க முயலும். வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியே அனைத்து விதமான வெப்ப பரிமாற்றத்திற்கு முதன்மையான காரணியாகும் பைபிள் கூறுகிறது. உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியை நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப் போலப் போலும், அதன் ஜனங்கள் புழுக்களைப்போல மரிப்பார்கள். என் இரட்சிப்பு என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி எப்பொழுதும் தோற்காது என்கிறது.

நிலத்தடி நீரோட்டங்கள்

நிலத்தடி நீரோட்டங்கள்

"நான் மலைகளின் பாதாளத்திற்குப் போனேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் உண்டாயிருக்கிறது" என்கிறது ஒரு பைபிள் வாசகம். இந்த வாசகம் ஆனது கடலுக்கு அடியில் மலைகளின் இருப்பதை பைபிள் குறிப்பிடுவது போன்று தோன்றுகிறது. தவிர பைபிள் ஆனது தண்ணீர் மற்றும் மழையின் தோற்றம் பற்றியும் வெளிப்படையாக சொல்கிறது. அதாவது, மழை நீரைப் பொழியும் மழையைப் பாய்ச்சுகிறார், மனித இனத்தின் மீது மேகங்கள் ஊற்றுகிறது என்கிற வாசகம் பைபிளில் இடம் பெருக்கிறியாது. பதினெட்டாம் நூற்றாண்டு வரை, ஆறுகள், ஏரிகள், நீரூற்றுக்கள் மற்றும் நீரோடைகள் ஆனது கடலில் இருந்து நிலத்தடி நீரோட்டங்கள் வழியாக தான் உருவாகின என்று கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 பைபிள் அறிஞர்கள்

பைபிள் அறிஞர்கள்

பைபிள் ஆனது அணுவை பற்றியம் முன்னறிவித்திருக்கலாம் என சில பைபிள் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்: விசுவாசத்தினாலே, தேவனுடைய கட்டளையின்படி உருவாக்கப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். இந்த பிரபஞ்சம் காணப்படாத ஒன்றில் இருந்து உருவாகி உள்ளது என்கிற வாசகத்தை அதற்கு எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Here Are 8 Scientific ‘Facts’ Mentioned in the Bible : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X