2021ம் ஆண்டில் '1000' கணக்கான மனித உருவ ரோபோக்கள் விற்பனையா? துவங்குகிறது ரோபோட்களின் அத்தியாயம்..

|

ஹாங்காங்கை மையமாகக் கொண்ட ரோபோடிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு இறுதிக்குள் 1000-திற்கும் மேற்பட்ட ஹியூமனாயிட் ரோபோட்களை வெளி உலகிற்கு விற்பனை செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்த செய்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது, ஹாலிவுட் ரோபோடிக் படங்களைப் பார்த்தவர்களின் மனதில் சிறிய அச்சத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது.

News Source: learningenglish.voanews.com

இது மோசமான ரோபோட்கள் அல்ல

இது மோசமான ரோபோட்கள் அல்ல

நீங்கள் நினைக்கும் அளவிற்கு இது மோசமான ரோபோட்கள் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இந்த ஹியூமனாயிடு ரோபோட்கள் மருத்துவ தேவைக்காகவும், மனிதனுக்கு உதவும் பயன்பாட்டிற்காகவும் உலக சந்தையில் விற்பனைக்கு வருகிறது என்று இதன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின்னர் ரோபோட்களின் தேவை அதிகரித்துள்ளதானால் இப்போது ஹியூமனாயிடு ரோபோட்கள் விற்பனைக்கு வருகிறது.

நான்கு வெவ்வேறு மனித உருவ ரோபோட் மாடல்

நான்கு வெவ்வேறு மனித உருவ ரோபோட் மாடல்

இந்த ஆண்டின் முதல் பாதியில் நான்கு வெவ்வேறு மனித உருவ ரோபோட் மாடல்கள் ஹாங்காங் தொழிற்சாலைகளை விட்டு வெளியேறத் தொடங்கும் என்று ஹான்சன் ரோபாட்டிக்ஸ் கூறுகிறது. இந்த நான்கு மாடலில் ஒன்று 'சோபியா' என்ற ரோபோவாகும், இது சமீபத்திய ஆண்டுகளில் மனிதனைப் போன்ற விதத்தில் பேசுவதற்கும், செயல்படுவதற்காகவும் மிகவும் பிரபலமடைந்தது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.!பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.!

டேவிட் ஹான்சன் கூறுகையில்

டேவிட் ஹான்சன் கூறுகையில்

நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஹான்சன் கூறுகையில், ''COVID-19 தொற்றுநோய், மனிதர்களுக்கு உதவவும் ஈடுபடவும் வடிவமைக்கப்பட்ட ரோபோக்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. COVID-19 இன் இந்த நேரத்தில் உலக மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க மேலும் மேலும் கூடுதலான அதிநவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சோபியாவின் 24 மாதிரிகள்

சோபியாவின் 24 மாதிரிகள்

கடந்த காலத்தில், நிறுவனத்தின் பல ரோபோக்கள் கையால் உருவாக்கப்பட்டவை என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் இப்போது, ​​ஹான்சன் ரோபாட்டிக்ஸ் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை ரோபோட்ஸ் கொண்டு விரிவாக்கத் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார். தற்போது சோபியாவின் 24 மாதிரிகள் உள்ளன, அவை "பல வகையான" மாதிரிகளை உருவாக்குவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் என்று ஹான்சன் கூறினார்.

ஸ்டீபன் ஹாக்கிங், எலான் மஸ்க் : இருவருமே அச்சம் கொள்ளும் 'அந்த' ஒரு விடயம்.!ஸ்டீபன் ஹாக்கிங், எலான் மஸ்க் : இருவருமே அச்சம் கொள்ளும் 'அந்த' ஒரு விடயம்.!

"ஆயிரக்கணக்கான" ரோபோக்களை விற்பனை செய்ய திட்டம்

ஹான்சன் நிறுவனம் ஒரு சரியான எண்ணை வழங்காத நிலையில், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் "ஆயிரக்கணக்கான" ரோபோக்களை விற்பனை செய்வதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை மட்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது. உடல்நலம் துறையில் உதவியாளர்களாகத் தனது மனித ரோபோக்களை சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

2021ல் வெளிவரும்

2021ல் வெளிவரும் "சோசியல் ரோபோக்கள்"

உதாரணத்திற்கு, சாத்தியமான நோயை அடையாளம் காண, வெப்பநிலை அளவீடுகளை எடுக்க அல்லது வயதானவர்களுடன் உடல் பயிற்சிகளைக் கணிக்க மற்றும் உதவிச் செய்வது போன்ற பல உதவிகளுக்காக இந்த ஹியூமனாயிடு ரோபோட்கள் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இத்தகைய "சோசியல் ரோபோக்கள்" இயந்திர கற்றல் முறை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றால் இயக்கப்படுகின்றன.

பூமியின் ஆழமான பகுதியில் என்ன இருக்கிறது? இதுவரை பயணம் செய்த 3 பேர் என்ன ஆனார்கள்?பூமியின் ஆழமான பகுதியில் என்ன இருக்கிறது? இதுவரை பயணம் செய்த 3 பேர் என்ன ஆனார்கள்?

மனித முகங்களை கவனித்து செயல்படும் ரோபோக்கள்

மனித முகங்களை கவனித்து செயல்படும் ரோபோக்கள்

மனித முகங்களையும் செயல்பாடுகளையும் அங்கீகரிக்க இந்த ரோபோட்களில் கேமராக்கள் மற்றும் சென்சார்களைப் பயன்படுத்துகிறார்கள். ரோபோக்கள் காலப்போக்கில் தங்கள் சொந்த சமூக மற்றும் உணர்ச்சி நுண்ணறிவை வளர்க்க உதவும் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படவுள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

humanoid

மனித முகங்களை கவனித்து அதற்கு ஏற்றார் போல் இந்த ரோபோக்கள் செயல்படும் என்றும், மனிதர்களுக்கு தேவைப்படும் உதவியை பொறுமையுடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Hanson Robotics Company Aims to Produce Thousands of Humanoid Robots in 2021 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X