செக்ஸ் ரோபோட்ஸ் ஆக இருந்தாலும் கூட, ஒரு நியாயம் தர்மம் வேணாமாடா.?

Written By:

"செக்ஸ்" என்ற வார்த்தையையே சத்தமாக பேச விரும்பாத இந்தியாவில், செக்ஸ் ரோபோட்கள் - ஒழுக்க ரீதியிலான அடிப்படையின்கீழ் நியாயமானதாக இருக்குமா.? என்ற சர்ச்சைக்குரிய கேள்வியை அப்படியே ஓரங்கட்டிவிட்டு, பாலியல் ரோபோக்கள் மிகவும் பிரபலமான மற்றும் அதிநவீனமான ஒரு பொருளாக உருமாறுமென்று நம்பும் சைபர் செக்யூரிட்டி விரிவுரையாளரான டாக்டர் நிக் பாட்டர்சன் பார்வையின்கீழ் சில "வினோதமான எச்சரிக்கை"யை பற்றி மட்டும் இங்கு பேசுவோம்.

செக்ஸ் ரோபோட்ஸ் ஆக இருந்தாலும் கூட, ஒரு நியாயம் தர்மம் வேணாமாடா.?

இந்த 2017-ஆம் ஆண்டு வரை, முழுமையான இயக்கத்திலான (fully functional) பாலின ரோபோக்கள் இல்லை என்றாலும் கூட, அத்தகைய தொழில்நுட்பம் எதிர்காலங்களில் சாத்தியப்படலாமென என நம்பப்படும் காலத்தையெல்லாம் கடந்து, அதற்கான "மும்மரமான" பணிகளில் ஈடுபடும் காலகட்டத்தில் நாமெல்லாம் இருக்கிறோம் என்பது தான் நிதர்சனம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நாசுக்காக கூறிய எலான் மஸ்க்.!

நாசுக்காக கூறிய எலான் மஸ்க்.!

நேராக விடயத்திற்கு வரும் முன்னர், தொழில்நுட்ப ஜீனியஸ் மற்றும் பில்லியனர் ஆன எலான் மஸ்க் சமீபத்தில், "செயற்கை நுண்ணறிவு - இந்த கிரகத்தை தன்வசம் எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இன்றில்லை என்றாலும் கூட என்றாவது ஒருநாள்.!

இன்றில்லை என்றாலும் கூட என்றாவது ஒருநாள்.!

ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் திறன்கொண்ட ரோபோட்ஸ்களானது (டெர்மினேட்டர் திரைப்படத்தில் வருவது போன்று, இன்றில்லை என்றாலும் கூட என்றாவது ஒருநாள்) மனித இனத்திற்கு எதிரான கில்லர் ரோபோட்ஸ்களாக உருமாறி நம்மையெல்லாம் அடிமைப்படுத்தும் என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் - இடையில் ஒரு ஆய்வறிக்கையை படிக்கும் முன்பு வரையிலாக.!

வினோதமான எச்சரிக்கை.!

வினோதமான எச்சரிக்கை.!

சைபர் பாதுகாப்பு விஞ்ஞானி ஒருவர் நிகழ்த்திய ஆய்விலிருந்து, ஹேக்கர்கள் செக்ஸ் ரோபோட்களின் "தலைக்குள் புகுந்து" அதன் உரிமையாளர்களே கொலை செய்ய தூண்டலாமென்ற ஒரு வினோதமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஹேங்கிங் ஒன்றும் கம்பசூத்திரமல்ல.!

ஹேங்கிங் ஒன்றும் கம்பசூத்திரமல்ல.!

யதார்த்தமான ரோபோக்களின் உள் பாதுகாப்புகளை, ஹேக்கர்கள் உடைக்கும் வரை எந்த சிக்கலும் இல்லை என்று கூறும் நிக் பாட்டர்சன், நவீன கால ரோபோக்களை ஹேங்கிங் செய்வதென்பது ஒன்றும் கம்பசூத்திரமல்ல, மொபைல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் போன்ற கேஜெட்களை ஹேக் செய்வது போலவேதான் மிக சுலபமானது என்பதையும் குறிப்பிடுகிறார்.

கால்கள், கைகள் அல்லது வெல்டிங் சாதனங்கள், கத்திகள்.!

கால்கள், கைகள் அல்லது வெல்டிங் சாதனங்கள், கத்திகள்.!

ஒரு ரோபோவை அல்லது ஒரு ரோபோ சாதனத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஹேக்கர்கள், அதன் கால்கள், கைகள் அல்லது வெல்டிங் சாதனங்கள், கத்திகள் போன்று அதனோடு இணைக்கப்பட்ட கருவிகளின் மீதான முழு கட்டுப்பாட்டையும் சேர்த்தே பெறுவர். முழு கட்டுப்பாட்டையும் பெற்றதும், ஹேக்கர்கள் ரோபோட்டிற்கு "இதை செய்", "அதை செய்யாதே" என்ற வழிமுறைகளை வழங்க முடியும்.

எச்சரிக்கையின் அருகாமை.!

எச்சரிக்கையின் அருகாமை.!

இந்த எச்சரிக்கை ஒரு தொலைதூர விடயமாக தோன்றும் அதே சமயம், ரோபோக்கள் ஆனது ஒரு தொலைபேசி அல்லது ஒரு பிசி-யை போன்றே இயக்க முறைமையைப் பயன்படுத்தி இயங்குகின்றன என்பதை உணரும் போது இந்த எச்சரிக்கையின் அருகாமையை நாம் உணரலாம்.

50%க்கும் மேற்பட்ட ஆண்கள்.?!

50%க்கும் மேற்பட்ட ஆண்கள்.?!

ஜெர்மனியின் டூஸ்ஸ்பர்க்-எஸ்சன் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்விலிருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50%க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் ரோபோக்களை வாங்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது என்பதும், ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்கனவே மனிதர்களுக்கு இடையிலேயான பாரம்பரிய பாலியல் சந்திப்புகளில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Hackers could train sex robots to kill, cyber security expert warns. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot