கனவுகளையும், உழைப்பையும் பறிகொடுத்த இவர்களும் - ஒருவகையில் அனிதாக்களே.!

|

வரலாற்றில் மிக நீண்ட காலமாக பெண்கள், அறிவியல் பாடங்களை படிக்கவும், கையாளவும் ஊக்கவிக்கப்படவில்லை. இருப்பினும் சில இரும்பு பெண்மணிகள் வீட்டு வேலைகள், திருமணம், ஆணாதிக்க சமூகம் ஆகியவைகளை கடந்து கல்வி கற்று, கண்டுப்பிடிப்பாளராகி வரலாறு முழுவதும் மிக முக்கிய கண்டுபிடிப்புகளை சாத்தியப்படுத்தி பெண்களுக்கான தூண்டாலாய் திகழ்ந்து கொண்டிருக்கிறனர்.

கனவுகளையும், உழைப்பையும் பறிகொடுத்த இவர்களும் - ஒருவகையில் அனிதாக்களே!

அப்படியாக, கண்டுபிடிப்பு வரலாற்று பக்கங்களை இன்றுவரை அதிரவைத்துக் கொண்டிருக்கும் அதேசமயம் துரோகம் செய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்ட, பெரும்பாலும் அறியப்படாத பெண் கண்டுப்பிடிப்பாளர்களையும் அவர்களின் நம்ப முடியாத கண்டுபிடிப்புகளையும்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

#1

#1

ரோசாலிண்ட் பிராங்க்ளின் (Rosalind Franklin) : டிஎன்ஏ கட்டமைப்பை கண்டுபிடித்தவர்.

#2

#2

வாட்சன் மற்றும் கிரிக் என்ற இரண்டு ஆடவர்கள் தான் டிஎன்ஏ கட்டமைப்பை கண்டுபிடித்தார்கள் என்று நீங்கள் எங்காவது படித்திருந்தால் அதை மறந்து விடுங்கள்.

#3

#3

"புகைப்படம் 51" என்று அழைக்கப்படும் ரோசாலிண்ட் பிராங்க்ளின் உருவாக்கிய ஒரு எக்ஸ்-ரே படம் தான் டிஎன்ஏ-வின் கிளாசிக் சுருளை கட்டமைப்பை காட்டுகிறது.

#4

#4

ரோசாலிண்ட் பிராங்க்ளின் அனுமதி இன்றி அவரின் எக்ஸ்-ரே படமானது வட்சன் மற்றும் கிரிக் கிடம் காட்டப்பட்டு அதன் மூலம் தான் அவர்கள் டிஎன்ஏ கட்டமைப்பு சார்ந்த பெரும் தரவுகளை பெற்றுள்ளனர்.

#5

#5

பின்னர் இரட்டை சுருள் வடிவ டிஎன்ஏ வடிவத்தை உருவாக்கம் செய்து மனித வாழ்வின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டதாக வாட்சன் மற்றும் கிரிக் புகழ்பெற ரோசாலிண்ட் பிராங்க்ளின் பெயர் மறைக்கப்பட்டது.

#6

#6

நோபல் பரிசுக்கு தகுதி வாய்ந்த ரோசாலிண்ட் பிராங்க்ளின், தன் வாழ்நாள் முழுவதும் அங்கீகரிக்கப்படாது, தனது 37 வயதில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#7

#7

லிஸ் மெய்ட்னர் (Lise Meitner) : அணு பிளவை கண்டுபிடித்தவர்.

#8

#8

லிஸ் மெய்ட்னர், நாஸி கட்டுப்பாட்டில் இருந்த ஜெர்மானியில் இருந்ததால் தனது கண்டுப்பிடிப்பி அனைத்தையும் ஓட்டோ ஹான் என்பவரிடம் பகிர்ந்து கொண்டே வந்துள்ளார்.

#9

#9

1938-க்கு பின்னரான காலகட்டத்தில் அணு கருவில் பிளவு நிகழ்த்தி, ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடுக்கு நிகரான ஒரு கோட்பாட்டை நிகழ்த்தலாம் என்பதை லிஸ் மெய்ட்னர் உணர்ந்துள்ளார்.

#10

#10

மாபெரும் கண்டுபிடிப்பான இதற்கு ஓட்டோ ஹானிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது தான் இன்றுவரையிலாக நோபல் பரிசிற்கு கிடைத்த கரும்புள்ளிகளில் ஒன்றாகும்.

#11

#11

ஓட்டோ ஹான் வேதியலுக்காக நோபல் பரிசு கிடைக்க மிகவும் தகுதியானவர். அதே சமயம் யுரேனிய பிளப்பு செயல்முறையில் என் பங்களிப்பும் உள்ளது என்பது எங்குமே தெளிவு படுத்தப்படவில்லை என்று ஒருமுறை லிஸ் மெய்ட்னர் கூறினார்.

#12

#12

ஜாஸலீன் பெல் பர்னல் (Jocelyn Bell Burnell) : துடுப்பு விண்மீன்களை கண்டுபிடித்தவர்.

#13

#13

கருப்பு ஓட்டைகள் மூலம் இயக்கப்படும் தூரத்து பொருள்களான கவாசர்ஸ் சார்ந்த ஆய்விற்காக முதுகலை மாணவராக இருக்கும் போதே ஜாஸலீன் பெல் பர்னல் தொலைநோக்கியும் கையுமாக, மிகவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டுள்ளார்.

#14

#14

ஆய்வின் பொது பெல் சில ஒற்றைப்படை அளவீடுகளை கவனித்துள்ளார். சில விண்வெளி பகுதிகளில் எதோ ஒரு அபாயகரமான துல்லியமான முறைப்படுத்திய ஆற்றல் உமிழ்வு இருந்ததை கண்டுபிடித்தார்.

#15

#15

அந்த கண்டுப்பிடிப்பை வேடிக்கையனா முறையில் எல்ஜிஎம்-1 அதாவது லிட்டில் கிரீன் மென் என்று குறிப்பெடுத்து வைத்துக்கொண்டார். பின்னர் அவைகள் வேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்வீச்சான 'பல்சர்'கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

#16

#16

வழக்கம் போல, இந்த கண்டுப்பிடிப்பிற்காக வேறு இரண்டு கண்டுப்பிடிப்பாளர்களுக்கு (ஆண்டனி ஹீவிஷ் மற்றும் மார்ட்டின் ரிலே - ஜாஸலீன் பெல் பர்னலின் சகாக்கள்) நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#17

#17

சிசிலியா பெய்ன் (Cecilia Payne) : நட்சத்திரங்கள் எதனால் உருவாக்கம் பெற்றுள்ளது என்பதை கண்டுபிடித்தவர்.

#18

#18

நட்சத்திர நிரல் வரைவியை முக்கியப்படுத்தி கல்வி கற்ற சிசிலியா பெய்ன், நட்சத்திரங்களின் நிறமாலை வரிகளை பற்றிய பகுப்பாய்வை நிகழ்த்தினார் அந்த காலகட்டத்தில், நட்சத்திரங்கள் இரும்பு மற்றும் கால்சியம் கனரக கூறுகள் போன்றவைகளால் ஆனவை என்ற தவறான கருத்து இருந்தது.

#19

#19

அதை தவறு என்று நிரூப்பிக்கும் வகையில் பிரபஞ்சத்தின் இரண்டு லேசான மூலப் பொருட்களான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மூலம் உருவானவைகல் தான் நட்சத்திரங்கள் என்று கண்டுபிடித்தார் சிசிலியா பெய்ன்.

#20

#20

அவரின் கண்டுப்பிடிப்பை ஆராய்ந்த ஹென்றி நோரிஸ் ரஸ்ஸல், இது தவறான ஒரு ஆய்வு என்றும் அதை அங்கீகரிக்க மறுப்பும் தெரிவித்து விட்டார். பின்னர் 4 ஆண்டுகள் கழித்து தன் கண்டுபிடிப்பு என்று கூறி அதே ஆய்வை ஹென்றி நோரிஸ் ரஸ்ஸல் வெளியிட்டார்.

#21

#21

ஹென்றி நோரிஸ் ரஸ்ஸலின் இந்த துரோகத்தினால் வரலாற்றில் இருந்து அதிகம் நீக்கப்பெறபட்ட ஒரு பெயரகாவே இருக்கிறது - சிசிலியா பெய்ன்..!

#22

#22

சேய்ன் - ஷிஉங் வு (Chien-Shiung Wu) : 30 ஆண்டு கால பழைமையான அறிவியல் விதி ஒன்றை உடைத்தவர்.

#23

#23

சம பாதுகாப்பு கொள்கை, அதாவது ஐசோமர்ஸ் இரண்டு ஒற்றை துகள்கள் ஆனது எப்போதுமே ஒன்றோடு ஒன்றின் கண்ணாடி பிம்பமாகத்தான் இருக்கும்.

#24

#24

இந்த கொள்கையை தவறு என நிரூபிக்க 1950-களில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த சீனரான சேய்ன் - ஷிஉங் வு உதவியை நாடினர் - அந்த நேரத்தில் அமெரிக்காவில் பணிபுரிந்த மற்ற இரண்டு சீன இயற்பியலாளர்களான சென் நிங் யாங் மற்றும் ட்சுங் டாவோ லீ.

#25

#25

தீவிரமான மற்றும் தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு பின்பு துகள்கள் சமச்சீராக இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. 30 வருடமாக நம்பப்பட்ட கொள்கையானது தவறு என்று நிரூபிக்கப்பட்டது.

#26

#26

வழக்கம்போல இந்த மாபெரும் கண்டுப்பிடிப்பிற்கும், சேய்ன் - ஷிஉங் வு தவிர்க்கப்பட்டு, சென் நிங் யாங் மற்றும் ட்சுங் டாவோ லீ ஆகிய இருவருக்கு மட்டுமே நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
Ground-Breaking Discoveries You Didn't Know Were Made By Women. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X