20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கண்டுபிடிப்பு.. மரத்தின் இந்த பகுதிகள் இன்னும் சேதமடையவில்லை..

|

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவில் 20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆண்டு பழமையான மரப்படிமம் கிடைப்பது உலகளவில் இதுவே முதல் முறை என்று கூறப்பட்டுள்ளது. இந்த மரப்படிமம் பற்றிய சில எதிர்பார்த்திடாத சுவாரசிய தகவல்களும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

20 மில்லியன் ஆண்டு பழைமையான மரம்

20 மில்லியன் ஆண்டு பழைமையான மரம்

20 மில்லியன்ஆண்டு பழைமையான மரம் என்று கண்டுபிடிக்கப்பட்ட மரப்படிமத்தில் இரண்டு முக்கிய உறுப்புக்கள் இன்னும் சேதமடையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மரம் இறுக்கமாகிப் போன பழங்காலத்து மரம் என்று கூறப்பட்டுள்ளது. 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் கிடைப்பது என்பது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை.

எரிமலை வெடிப்பில் பாதுகாக்கப்பட மரம்

எரிமலை வெடிப்பில் பாதுகாக்கப்பட மரம்

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவில், அடர் காட்டில் சாலை கட்டமைப்பு பனி நடக்கும் சமயம் இந்த 20 மில்லியன் ஆண்டு பழமையான பழங்காலத்து மரப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்தபோது இந்த மரம் பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் பிரமிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இதன் கிளைகள் எந்த சேதமும் இல்லாமல் இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..

எந்த மரத்தின் வகை?

எந்த மரத்தின் வகை?

இறுக்கமாக மாறிய மரங்கள் கொண்ட காடுகளில் இம்மாதிரியான ஒரு கண்டுபிடிப்பு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதே இல்லை என்று கூறப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட மரப்படிமத்தின் வயதை உறுதிப்படுத்தும் வேலைகள் துவங்கியுள்ளது. அதேபோல், இது எந்த மரத்தின் வகையைச் சேர்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் மூலம் நொடியில் LPG சிலிண்டர் புக்கிங் செய்வது தான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா? காரணம் இருக்கு..வாட்ஸ்அப் மூலம் நொடியில் LPG சிலிண்டர் புக்கிங் செய்வது தான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா? காரணம் இருக்கு..

விஞ்ஞானிகள் துவங்கிய ஆராய்ச்சி

விஞ்ஞானிகள் துவங்கிய ஆராய்ச்சி

முதற்கட்ட ஆராய்ச்சியில் தான் இது கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிறகு விஞ்ஞானிகள் துவங்கிய ஆராய்ச்சியில் மரத்தின் கிளைகளுடன், அடித்தண்டு பகுதியும் சேதமடையாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மரத்தின் வகை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Greek scientists on the volcanic island of Lesbos have found a 20-million-year-old fossilized tree : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X