செவ்வாயில் அற்புதமான புதிய பள்ளத்தாக்குகள் கண்டுபிடிப்பு!

|

செவ்வாய் கிரகத்தில் சுலபமாக பள்ளத்தாக்குகள் உருவாவது இல்லை. ஆனால் அது உருவானால் மிகவும் கலைநயத்துடன் காணப்படும் . செவ்வாய் உளவு விண்கலத்தால் ( Mars Reconnaissance Orbiter) கடந்த ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பள்ளத்தாக்கு, முன்னர் விண்வெளிவீரர்கள் கண்டறிந்தவற்றைப் போல காணப்படவில்லை.

தூசி நிறைந்த மேற்பரப்பில்..

தூசி நிறைந்த மேற்பரப்பில்..

அதன் அளவு மற்றும் தாக்க அலைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக இருந்தாலும்,செவ்வாய் கிரகத்தின் தூசி நிறைந்த மேற்பரப்பில் காணப்படும் கருப்பு மற்றும் நீல குறியீடுகள், புண்ணான கட்டை விரல் போலவே உள்ளது.

சுற்றுவட்டப்பாதையில் இருந்து எடுக்கப்பட்டது

கீழே காட்டப்பட்டுள்ள வியத்தகு, மேம்பட்ட வண்ணமயமான காட்சியானது, நாசாவின் உயர்தர இமேஜிங் சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்(High Resolution Imaging Science Experiment -HiRISE) கேமராவைப் பயன்படுத்தி, 255 கிலோமீட்டர் தொலைவில் (158 மைல்) சுற்றுவட்டப்பாதையில் இருந்து எடுக்கப்பட்டது.

தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு அசத்தல் ஐடியா.!தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு அசத்தல் ஐடியா.!

விஞ்ஞானி வெரோனிகா பிரே

விஞ்ஞானி வெரோனிகா பிரே

ஒவ்வொரு ஆண்டும் செவ்வாயை 200 க்கும் மேற்பட்ட விண்கற்கள் மற்றும் வால்மீன்கள் தாக்குகின்றன. அப்போது அவற்றில் ஒத்த இருண்ட அழுக்குகள் அல்லது பிற குறிப்பிடத்தக்க அம்சங்களை விட்டுச்செல்லும். ஆனால் இந்த புதிய பள்ளத்தாக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருப்பதாக அரிசோனா பல்கலைகழகத்தின் கிரக விஞ்ஞானி வெரோனிகா பிரே கூறுகிறார்.

லோகோவை காப்பி அடித்ததாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு! கிளம்பியது புதிய சர்ச்சை!லோகோவை காப்பி அடித்ததாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு! கிளம்பியது புதிய சர்ச்சை!

 மிகப்பெரிதாக உள்ளது

மிகப்பெரிதாக உள்ளது

செவ்வாய் உளவு விண்கலம் கடந்த 13 ஆண்டுகளாக செவ்வாயை கண்காணித்துவரும் நிலையில் சில நிகழ்வுகள் ஒப்பிடப்படுகின்றன, உண்மையான இந்த பள்ளத்தாக்கிற்கு காரணமான விண்கல்லின் அகலம் சுமார் 1.5 மீட்டர் (5 அடி) இருக்கும் போது, பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 15 முதல் 16 மீட்டர் அகலத்தில் (49 அடி முதல் 53 அடி) மிகப்பெரிதாக உள்ளது.

இயந்திர துப்பாக்கி குண்டு

இயந்திர துப்பாக்கி குண்டு

இத்தகைய ஒரு சிறிய விண்கல் ஒருவேளை பூமியின் மிக வளிமண்டலத்தில் நுழைந்திருந்தால் மோசமாக எரிந்து சாம்பலாகியிருக்கும். செவ்வாய் கிரகத்தில் கூட, இந்த உள்வரும் பாறைகள் பெரும்பாலும் நுழையும் போதே சிதறடிக்கப்பட்டு, ஒரு இயந்திர துப்பாக்கி குண்டுகளை போன்று கிரகத்தின் மேற்பரப்பு சிறுதுண்டுகளாகி தாக்குகின்றன.

ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்!ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்!

நிலநடுக்கோட்டிற்கு அருகில்

நிலநடுக்கோட்டிற்கு அருகில்

இருப்பினும் இந்த நிகழ்வில் பாறைகள் வழக்கமானதை விட திடமானதாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் முழுமையாக அனைத்து விண்கல் துண்டுகளும் , செவ்வாயின் நிலநடுக்கோட்டிற்கு அருகில் உள்ள வேலீஸ் மரினெரீஸ் பகுதியில் உள்ள ஒரே இடத்தில் தாக்கியுள்ளன.


" கீழேயுள்ள சிவப்பு நிற தூசி படலத்தை கொண்ட மேற்பரப்பில் இருண்ட பொருள் வெடித்துசிதறியதால் இது தனித்து காணப்படுகிறது" என ஹைரைஸ் வலைத்தளத்தின் அறிவிப்பை விளக்குகிறது.

துல்லியமான நேரம் தெரியவில்லை

துல்லியமான நேரம் தெரியவில்லை

உண்மையில் தாக்க அலைகள் பார்க்க தெளிவாக உள்ளது. இந்த படத்தின் மிக மத்தியில் உள்ள இருண்ட மண்டலத்தில் தூசி படலங்கள் வெளிநோக்கி நகர்ந்து ஒதுங்கியதால் பாறை மேற்பரப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த பிராந்தியத்தின் புவியியல் அம்சங்களின் சரியான தன்மை இன்னும் நிச்சயமற்றதாக உள்ள நிலையில், கீழேயுள்ள பரப்பு அநேகமாக கருங்கல்லாக இருக்கும் என்கிறார் பிரே. மற்றும் படத்தில் உள்ள நீல நிறம் பற்றி கூறுகையில், தூசி படலத்தின் கீழே பனிப்படலம் மறைந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.

விண்கல் தாக்கிய துல்லியமான நேரம் தெரியவில்லை என்றபோதும், வானியலாளர்கள் அது செப்டம்பர் 2016 மற்றும் பிப்ரவரி 2019 இடையே நடைபெற்றிருக்கலாம் என்கின்றனர்.

Best Mobiles in India

English summary
gorgeous-new-crater-spotted-on-the-red-planet-is-one-of-the-largest-we-ve-seen: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X