கூகுள் எர்த்தில் சிக்கிய அண்டார்டிக்காவின் மர்ம நுழைவாயில்கள், என்ன அது..?

|

அண்டார்டிக்கா - பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டம். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதியான இது புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாகக் கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஆண்டில் ஆறு மாதங்கள் ஞாயிற்று வெளிச்சமே இருக்காது..!

அண்டார்டிக்காவில் நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆக இங்கே கன்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு விடயமும், நிகழும் ஒவ்வொரு சம்பவமும் சாதரணமாகவே எடுத்துக் கொள்ளப்படாது..!

நுழைவாயில்கள் :

நுழைவாயில்கள் :

அண்டார்டிக்காவின் ஒரு கடற்கரைக்கு அருகில் அண்டார்டிக் மேற்பரப்பு மற்றும் பனி படலத்திற்கு கீழே நீட்டிக்கும் படியான இரண்டு பெரிய நுழைவாயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகம் :

சந்தேகம் :

அவைகள் தீவிர அண்டார்டிக் வானிலை மூலம் காலப்போக்கில் உருவாக்கப்பட்ட இயற்கையான குகை கள் என்று சிலர் நம்பினாலும் சந்தேகம் நீடிக்கிறது தான்.

இரகசிய வாயில் :

இரகசிய வாயில் :

புதிர் போடும் இந்த மர்ம குகைகள் பற்றி பல கோட்பாடுகள் கிளம்பி கொண்டிருக்க பிரபல யுஎஃப்ஒ தேடலாளர் ஆன ஸ்காட் வார்னிங் இந்த குகைகள் ஆனது ஒரு வேற்றுலக அடிப்படை அல்லது ஒரு வகையான இரகசிய வாயில்களாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

தட்டு வடிவ பொருள் :

தட்டு வடிவ பொருள் :

கண்டுபிடிக்கப்பட்ட குகையில் ஒரு பெரிய தட்டு வடிவ பொருள் ஆனது அண்டார்டிக்காவின் உருகிய பனிக்குகீழ் புதைக்கப்பட்டது போல் காட்சி அளிப்பது போல் தெரிகிறது என்றும் ஸ்காட் வார்னிங் கூறியுள்ளார்.

கூகுள் எர்த் :

கூகுள் எர்த் :

ஆனால், கூகுள் எர்த் புகைப்படத்தில் ஸ்காட் கூறும்படியான எந்த விதமான வட்ட வடிவமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அவரின் கருத்தானது சுயாதீன ஆய்வாக கருதப்படுகிறது.

யுஎஃப்ஒ தளங்கள் :

யுஎஃப்ஒ தளங்கள் :

மறுபக்கம் உண்மையில் இவைகள் நிலத்தடி தளங்கள் அல்லது ரகசிய நுழைவுவாயில்கள் தான் என்றால் அண்டார்டிகாவில் யுஎஃப்ஒ தளங்கள் இருக்கிறது என்ற சந்தேகமும் கோட்பாடுகளும் உறுதியாகும்.

நாஜிக்கள் :

நாஜிக்கள் :

மறுபக்கம் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க கப்பற்படையிடம் இருந்து நாஜிக்கள் தப்பிக்க ஒரு வழியாக அந்த குகைகள் / நுழைவுவாயில்கள் உதவி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

உறுதி :

உறுதி :

இந்த நுழைவாயில்கள் -66° 36′ 12.58″, +99° 43′ 12.72″ மற்றும் -66° 36′ 12.58″, +99° 43′ 12.72″ என்ற கூகுள் எர்த் ஆள்கூற்றில் உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாறை நிலத்தடிகள் :

பாறை நிலத்தடிகள் :

நுழைவாயில்கள் போல தோன்றும் இந்த பாறை நிலத்தடிகள் சுமார் 30 மீட்டர் உயரமும் , 90 மீட்டர் அகலமும் கொண்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கோட்பாடுகள் :

கோட்பாடுகள் :

இந்த இரண்டு நுழைவாயில்களும் மிக தெளிவாக செயற்கையான முறையில் தான் உருவாக்கம் பெற்றுள்ளது என்றும், குறிப்பாக ஒரு நுழைவாயில் ஆனது உலோக விதானம் கொண்டு உருவாகியுள்ளது அல்லது குவிமாடம் கொண்டு மூடியது போல உள்ளது பல கோட்பாடுகள் கிளம்பியுள்ளன.

ஆவணப்படம் :

ஆவணப்படம் :

ரஷ்ய ஆவணப்படம் ஒன்றில் 1946 -1947களில் அமெரிக்க கடற்படையாழ் நிகழ்த்தப்பட்ட அண்டார்டிகா பயணமான ஆப்ரேஷன் ஹை-ஜம்ப்பில் ஏன் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டன என்பது பற்றிய மர்மமான தகவல் வெளியிடப்பட்டது.

புதிய எதிரி :

புதிய எதிரி :

அண்டார்டிக்கா சென்ற அமெரிக்க படையானது ஒரு புதிய எதிரியை எதிர்கொண்டது. அவர்களால் நம்பமுடியாத வேகத்தில் ஒரு துருவத்தில் இருந்து மற்ற துருவத்திற்கு பறக்க முடிந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

யுத்தம் :

யுத்தம் :

இதன் மூலம் அமரிக்க கடற்படை படைகள் மற்றும் அறியப்படாத ஒரு யுஎஃப்ஒ படை ஆகிய இரண்டிற்கும் இடையே அண்டார்டிகாவில் யுத்தம் நிகழ்துள்ளது என்று நம்பப்பட்டது அதற்கு ஆதாரமாக இந்த குகைகள் சேர்க்கப்ப்பட்டுள்ளது.

குகைகளை கூகுள் எர்த்தில் காண  :

குகைகளை கூகுள் எர்த்தில் காண :

அந்த குகைகளை கூகுள் எர்த்தில் காண இங்கே கிளிக் செய்யவும். குகை 01 மற்றும் குகை 02..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google earth reveals strange Antarctic entrances – evidence of secret UFO bases. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X