Subscribe to Gizbot

அதிர்ச்சி : நிலவிற்கு மீண்டும் போவது மரணத்திற்க்கு வழிவகுக்கும்..!

Written By:

விண்வெளி ஆர்வலர்களை பொறுத்தமட்டில் நிலவின் முதுகு தொடங்கி அதன் துல்லியமான அமைப்பு வரையிலாக நிலவு என்றாலே சர்ச்சைக்குரிய விடயம் தான். நிலவிற்கு ஏன் திரும்ப போகவில்லை, நிலவிற்கு ஏன் மீண்டும் போக வேண்டும் என்று நிலவு மீது பதில்களை விட கேள்விகள் தான் அதிகம். இந்நிலையில் நிலவிற்கு மீண்டும் போவது மரணத்திற்க்கு வழிவகுக்கும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது..!

பூமி கிரகத்தின் இயற்கையான செயற்கை கோளான நிலவு ஏன் மரணத்திற்கு வழிவகுக்கும் என்ற ஆய்வின் விரிவான தகவலை கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நீல் ஆம்ஸ்ட்ராங் :

நீல் ஆம்ஸ்ட்ராங் :

சந்திரன் பயணம் மேற்கொண்ட 24 அப்போலோ விண்வெளி வீரர்கள் மூன்று பேர் இதய நோயினால் இறந்து போயுள்ளனர் அதில் நிலவில் முதன்முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும் சேர்வார்.

ஐந்து மடங்கு :

ஐந்து மடங்கு :

அதாவது பூமியில் நிரந்தரமாக வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இதய நோய் காரணமாக இறக்க ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது ஆய்வு.

காந்தப்புல சக்தி :

காந்தப்புல சக்தி :

இதற்கு காரணம் பூமியை பாதுகாக்கும் காந்தப்புல சக்திக்கு அப்பால் உள்ள காஸ்மிக் கதிர்வீச்சு (Cosmic radiation beyond Earth's protective magnetic field) தான் என்கிறது அந்த அமெரிக்க ஆய்வு.

குமிழியை தாண்டி :

குமிழியை தாண்டி :

அந்த காஸ்மிக் கதிர்கள் கிரகத்தில் சுற்றியுள்ள காந்த குமிழியை தாண்டி மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கும்.

உயர்நிலை ஆபத்து :

உயர்நிலை ஆபத்து :

அதாவது பூமியை விட்டு சில நூறு மைல்கள் தூரம் சென்றதுமே விண்வெளி பயணத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு உயர்நிலை ஆபத்து எல்லை ஆரம்பிக்கிறது.

மரண பதிவு :

மரண பதிவு :

1960-70 என்ற காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஏழு அப்பல்லோ பயணங்கள் உட்பட விண்வெளிக்கு சென்ற 42 விண்வெளி வீரர்கள் மரண பதிவுகளை புளோரிடா மாநில பல்கலைக்கழக மற்றும் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதுள்ளனர்.

ஒப்பீடு :

ஒப்பீடு :

அந்த மரண பதிவுகளுடன் ஒருபோதும் விண்வெளிக்கு செல்லாத 35 விண்வெளி வீரர்களின் பதிவோடு ஒப்பிட்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.

குறைந்த தூர விண்வளி பயணம் :

குறைந்த தூர விண்வளி பயணம் :

அதன் மூலம் விண்வெளி பயணம் மேற்கொள்ளாதவர்கள் மற்றும் பூமிக்கு மேல் குறைந்த தூர விண்வளி பயணம் மேற்கொண்டவர்களை விட அப்போலோ விண்வெளி வீரர்களுக்கு இதய நோய் ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலி :

எலி :

ஆய்வக எலிகளும் இந்த காஸ்மிக் கதிர்வீச்சு கோட்பாடில் பரிசோதிக்கப் பட்டு இந்த கோட்பாடு உறுதிப்படுத்தபட்டுள்ளது.

ஆபத்தான காரணி :

ஆபத்தான காரணி :

எடையில்லாமை மற்றும் கதிர்வீச்சு வெளிப்பாடு ஆகியவைகள் விலங்கின் இதயங்களை இன்னும் அதிகமான அளவில் பாதிக்கக்கூடிய ஆபத்தான காரணியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நாளம் சார்ந்த பாதிப்பு :

நாளம் சார்ந்த பாதிப்பு :

ஆய்வக எலி பரிசோதனை தரவுகளின் மூலம் ஆழமான விண்வெளி பயணங்கள் குருதி முதலானவை கொண்டு செல்லும் நாளம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார் முன்னணி ஆய்வாளர் ஆன மைக்கேல் டெல்ப்.

பெரிய தாக்கம் :

பெரிய தாக்கம் :

முதலில் அப்போலோ விண்வெளி வீரர்கள் இறப்பு சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்திய இந்த ஆய்வு எதிர்கால விண்வெளிப் பயணம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

முனைப்பு :

முனைப்பு :

ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் மார்ஸ் போன்ற மற்ற கிரகங்களுக்கு ,மனிதர்களை அனுப்பும் முயற்சியில் முனைப்பாய் இருக்ககின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

டார்க் சீக்ரெட் :

டார்க் சீக்ரெட் :

நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்' என்ன என்பதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

ஏன் போகவேண்டும்..?

ஏன் போகவேண்டும்..?

நிலவிற்கு மீண்டும் ஏன் போகவேண்டும்..? என்பதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

மேலுமொரு டா வின்சி இரகசியம், கிலி கிளப்பும் கலிசியா..!


மாற்றி எழுதப்படும் அமெரிக்க வரலாறு - சிக்கிய முக்கிய ஆதாரம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Going to the moon can be deadly’ says NASA-backed study blaming cosmic radiation in space . Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot