உலக சாதனை: 11 நாட்கள் 12,200 கி.மீ., இடைவிடாது பறந்த பறவை: "பறவையை போற்று"!

|

காட்விட் எனும் பறவை 11 நாட்களில் 12,200 கிலோமீட்டர் தூரத்தை இடைவிடாமல் பறந்து சாதனை படைத்துள்ளது. இந்த பறவையின் மீது பொருத்தப்பட்ட சிப் மூலம் இது பறந்த தூரம் கணக்கிடப்பட்டுள்ளது.

காட்விட் பறவை உடல் அமைப்பு

காட்விட் பறவை உடல் அமைப்பு

காட்விட் பறவையின் உடல் அமைப்பு குறித்து பார்க்கையில் இது போர் ஜெட் விமானம் போல் உள்ளது. மேலும் இதன் இறக்கை கூர்மையாக இருக்கிறது. இந்த பறவைகள் கோடைக்காலத்தில் ஆர்டிக் பகுதியில் இருக்கிறது. அங்குள்ள மீன்கள், புழுக்களை உண்டு வாழ்கிறது. இதன் உடலில் பெரும்பகுதி கொழுப்பாகவே இருக்கிறது. நீண்ட தூரம் பறப்பதற்கு ஏற்றவாறு இந்த பறவையின் உடல் அமைப்பு இருக்கிறது.

11 நாட்கள் இடைவிடாது பறந்த பறவை

அதன்படி தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ள தகவலின்படி, காட்விட் பறவை ஒன்று செப்டம்பர் 16 ஆம் தேதி அமெரிக்காவின் தென்மேற்கு அலாஸ்காவில் இருந்து 11 நாட்கள் தொடர்ந்து இடைவிடாது பறந்து நியூசிலாந்து ஆக்லாந்து வரை வந்து சேர்ந்துள்ளது. சராசரியாக மணிக்கு 55 மைல் வேகத்தில் இந்த பறவை பறக்கும்.

முன்னதாக 11,680 கிலோமீட்டர் பறந்த பெண் பறவை

முன்னதாக, 2007 ஆம் ஆண்டில் இதே இனத்தை சேர்ந்த பெண் பறவை ஒன்று 11,680 கிலோமீட்டர் தூரத்தை இடைவிடாது பறந்தது. இதுவே சாதனையாக இருந்த நிலையில் தற்போது ஆண் பறவை ஒன்று நீண்ட தூரம் பறந்துள்ளது. வலிமையான எதிர்காற்றே இந்த பறவையை நீண்டதூரம் பயணிக்க தூண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

நீண்ட தூரம் பறப்பதற்கான உடல்வடிவமைப்பு

காட்விட் பறவை பயணத்தின் போது தூங்குவதில்லை என கூறப்படுகிறது. இந்த இன பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான உடல்வடிவமைப்பை கொண்டுள்ளது. குறிப்பாக ஆண் இன காட்விட் பறவை உடல் உள் உறுப்புகளை சுருக்கும் திறனை கொண்டது. இதன் மூலம் இந்த பறவை வேகமாகவும் பறக்க முடியும்.

பூமியின் காந்தப்புலனை உணர்ந்திருக்கும்

நாட்கள் கணக்கில் பறந்து செல்லும் இந்த பறவை தரையிறங்க வாய்ப்பே இல்லாத கடல் மேற்பரப்பில் சோர்வின்றி பயணிக்கின்றன. இந்த பறவைகள் பூமியின் காந்தப்புலனை உணரலாம் எனவும் அல்லது இது ஒரு வரைபடத்தையே கொண்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

11 நாட்கள் இடைவிடாது பறந்த பறவை

அமைப்பு ஒன்று கடலோரப்பறவைகள் இடம்பெயர்வு செய்வது குறித்து அறிந்து கொள்ள அதன் கால்களில் குறிப்பிட்ட வண்ணங்களால் ஆன பேண்டுகள் கட்டியது. அதோடு அதன் கால்களில் டிராக்கிங் கருவி ஒன்றும் பொருத்தியது. இதன்மூலம் 55 மைல் வேகம் வரை இடைவிடாது 11 நாட்கள் பறந்த பறவை கண்டறியப்பட்டது.

Pic Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
Godwit Bird Set a Record For Non Stop Flying 12,200 kilometers Distance in 11 days

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X