அதிர்ச்சி : இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்..!

|

பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வு அதாவது இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும், அது தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு தான் புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது..!

புவி சூடாகுதலுக்கு ஆயுத உற்பத்தி மற்றும் பயன்பாடும் ஒரு காரணமாக திகழ்கிறது. அது சார்ந்த ஆய்வில் இந்தியாவில் விளையும் பயிர்களின் விளைச்சலை அமெரிக்க ஆயுதங்கள் பாதிப்படைய செய்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது..!

மின்காந்த போர் :

மின்காந்த போர் :

ஹார்ப் (HAARP- High Frequency Active Auroral Research Program) என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும். இது வானிலை மாற்றம் நிகழ்த்த மற்றும் ஒரு மின்காந்த போர் நிகழ்த்தும் வல்லமை கொண்டது.

காரணம் :

காரணம் :

அமெரிக்காவால் உருவாக்கம் பெற்ற இந்த ஆயுதம், உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பயிர் :

பயிர் :

அதற்கு முக்கிய காரணமாக கோதுமை, சோளம், கடுகு, உருளைக்கிழங்கு , சோளம் போன்ற இந்தியாவில் விளையும் பல்வேறு பயிர்களின் விளைச்சலை ஹார்ப் பாதிக்கிறது என்பது முன்வைக்கப்படுகிறது.

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் :

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் :

பருவமழை தொடக்க நாளின் போது மாநிலங்களவையில் விளைச்சலில் குறைவு காணப்படுகிறது என்ற ஹார்ப் மீதான குற்றசாட்டை பதிவு செய்துள்ளார் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர், அணில் மாதவ் தேவ்.

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் :

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் :

இந்த காலநிலை மாற்றம் சார்ந்த ஆய்வானது இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Agriculture Research) மூலம் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்காந்த கற்றை :

மின்காந்த கற்றை :

இதுசார்ந்த விளக்கத்தில் "உயர் அதிர்வெண் செயல் சூரிய உதய ஆராய்ச்சி திட்டம் என்று அழைக்கப்படும் ஆயுத வகை ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது, ஹார்ப் ஆனது கவனமான மற்றும் ஓட்டத்தக்க மின்காந்த கற்றை மூலம் மேல் வளிமண்டலத்தை தாக்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

மேம்பட்ட மாதிரி :

மேம்பட்ட மாதிரி :

ஹார்ப் - சூடு மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற விளைவை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த சூப்பர் அயனாதிக்க ஹீட்டரின் மேம்பட்ட மாதிரி என்பதும் விளக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அழிவு :

அழிவு :

இதன் அழிவுகரமான தாக்கமானது இந்திய பயிர்கள் மீது மட்டுமில்லை பூமியின் காலநிலை மீதும் உள்ளது என்கிறாரக்ள் ஆய்வாளர்கள்.

சதியாலோசனை கோட்பாடு :

சதியாலோசனை கோட்பாடு :

வானிலை மாற்றும் திறன், செயற்கைக்கோள்கள் முடக்கம் மற்றும் மக்களின் மூளை கட்டுப்படுத்துதல் போன்ற பல வகையான சதியாலோசனை கோட்பாடுகளும் ஹார்ப் மீது உண்டு..!

பங்கு :

பங்கு :

பூகம்பங்கள், வறட்சி, வெள்ளம், 1996-ல் நிகழ்ந்த டி.டிபிள்யூ.ஏ800 விமான விபத்து, 2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த விண்வெளி ஓடமான கொலம்பியா வெடிப்பு மற்றும் சாண்டி சூறாவளி ஆகிய அனைத்திலுமே ஹார்ப்பின் பங்கு உள்ளது என்கிறரர்கள் சதியாலோசனை கோட்டபாட்டாளர்கள்.

8 விடயங்கள் :

8 விடயங்கள் :

2008-ஆம் ஆண்டிலிருந்து சூரிய ஆற்றல் மேம்பட்ட ஆற்றல் திறன், வாழ்விடம், நீர் , நிலைத்திருக்க கூடிய இமாலய சுற்றுச்சூழல், காடுகள், விவசாயம் மற்றும் காலநிலை மூலோபாய அறிவு ஆகிய 8 விடயங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை இந்திய காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல் திட்டம் கண்காணிக்கிறது.

ஆய்வு :

ஆய்வு :

உடன் காடுகளின் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், நீர் வளங்கள், விவசாயம், மற்றும் வாழ்விடம் எதிர்மறை தாக்கங்களை ஏற்ப்படுத்தும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் மட்டுப்படுத்தல் மற்றும் தழுவல் போன்ற ஆய்வுகளும் சேர்த்தே நிகழ்த்தப்பட்டன.

ஹார்ப் பாதிப்பு :

ஹார்ப் பாதிப்பு :

ஆய்வுகளில் இருந்து இந்திய பயிர் விளைச்சலுக்கு அமெரிக்க ஆயுதமான ஹார்ப் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றும் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக திகழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் நடத்தப்பட்ட 'கொலை சதிகள்'..!


அமைதியை பற்றி பேச, அமெரிக்காவிற்கு 'தகுதியே' கிடையாது..!


'கண்களில் விரலை விட்டு ஆட்டும்' ஹைப்பர்சோனிக் கிளைடர், முந்தி செல்வது யார்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Global warming might be caused by US weapon: HAARP. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X