பூமியைத் தாக்கிய கிரகத்தின் ஒரு பெரிய துண்டு சந்திரனுக்குள் புதைக்கப்பட்டுள்ளதா?விஞ்ஞானிகள் விளக்கம்

|

பூமியைச் சுற்றி வரும் சந்திரன் எங்கிருந்து வந்தது, அது எவ்வாறு உருவானது? என்ற கேள்விக்கு இன்னும் பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் பதில் தேடி வருகின்றனர். இந்த கேள்விக்கான பதிலைத் தேடித்திரியும் விஞ்ஞானிகளுக்கு மத்தியில், ​​நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு பதிலை முன்வைத்துள்ளார். இதன்படி பூமியைத் தாக்கிய கிரகத்தின் ஒரு துண்டு சந்திரனுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஜெயிண்ட் இம்பாக்ட் ஹைப்போதீசிஸ்

ஜெயிண்ட் இம்பாக்ட் ஹைப்போதீசிஸ்

விஞ்ஞானிகளால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெயிண்ட் இம்பாக்ட் ஹைப்போதீசிஸ் (giant-impact hypothesis) கூற்று படி, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தை போன்று அளவு கொண்ட தியா எனப்படும் கிரகம் பூமியுடன் நேரடியாக மோதிய நேரத்தில் ஒரு பெரிய பகுதி உடைந்து சந்திரனாக மாறியது என்று நம்பப்படுகிறது. உண்மையும் அதுதான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தியா கிரகத்தின் மீந்த பகுதி சந்திரனிற்குள் உள்ளதா?

தியா கிரகத்தின் மீந்த பகுதி சந்திரனிற்குள் உள்ளதா?

இப்போது, ​​நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் ஜியோசைன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வறிக்கையில், தியா கிரகத்தின் மீந்த பகுதி, சந்திர மேற்பரப்பிற்கு அடியில் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள் என்று கூறியுள்ளது.

உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?

ஆக்சிஜன் ஐசோடோப்புகள்

ஆக்சிஜன் ஐசோடோப்புகள்

தியா கிரத்தின் மீத பகுதி சந்திரனின் மேற்பரப்பிற்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று இவர்கள் நம்புவதற்கான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளனர்.ஜெயிண்ட் இம்பாக்ட் ஹைப்போதீசிஸ் தாக்கத்தின் பெரிய பின்னடைவாகப் பல ஆண்டுகளாகப் பல விஞ்ஞானிகள் குழம்பியதற்குக் காரணம் ஆக்சிஜன் ஐசோடோப்புகள் தான்.

அப்பல்லோ பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட பாறைகள்

அப்பல்லோ பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட பாறைகள்

நாசாவின் அப்பல்லோ பயணங்கள் போது சேகரிக்கப்பட்ட சந்திர பாறைகளில் ஆக்சிஜன் ஐசோடோப்புகள் கண்டறியப்பட்டது, இந்த ஆக்சிஜன் ஐசோடோப்புகள் பூமியில் காணப்படும் ஆக்சிஜன் ஐசோடோப்புகளுடன் நெருக்கமாக ஒத்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏடிஎம்-ல் ரூ.100 நோட்டு குறைந்த அளவு வருவதற்கு இதுதான் காரணமா? உண்மையை சொன்ன அதிகாரிகள்!ஏடிஎம்-ல் ரூ.100 நோட்டு குறைந்த அளவு வருவதற்கு இதுதான் காரணமா? உண்மையை சொன்ன அதிகாரிகள்!

பூமி - தியா

பூமி - தியா

இப்படி இருக்கையில் தியாவின் மீந்த பகுதி கொண்டு, எப்படி சந்திரன் இவ்வளவு பெரிதாக உருவெடுத்திருக்கும் என்று விஞ்ஞானிகள் பல மாதிரி கணிப்புகளைக் கணித்துள்ளனர். இதில் மிகச் சிறிய முரண்பாடாக, பூமியும் தியாவும் முதலில் ஒத்த இயல்புநிலையைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, ஆனால் பின்னர் அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒற்றை கலவையாகவே மாறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

​​ஆழமான பகுதியில் அதிக கனத்துடன் ஆக்ஸிஜன் ஐசோடோப்பு

​​ஆழமான பகுதியில் அதிக கனத்துடன் ஆக்ஸிஜன் ஐசோடோப்பு

நியூ மெக்ஸிகோ விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில், பல்வேறு சந்திர பாறை வகைகளைப் பலவிதமான உயரங்களிலிருந்து சேகரித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். இவர்கள் கண்டறிந்த பாறைகளில் இருக்கும் ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள், சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஆக்ஸிஜன் ஐசோடோப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​ஆழமான பகுதியில் அதிகம் காணப்படும் ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள் அதிக கனத்துடன் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தியா கிரகத்தின் ஒரு பெரும் பகுதி சந்திரனுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம்

தியா கிரகத்தின் ஒரு பெரும் பகுதி சந்திரனுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம்

இதனால் தியா கிரகத்தின் தனித்துவமான ஆக்ஸிஜன் ஐசோடோப்பு கலவை மாபெரும் தாக்கத்தின் போது ஒத்திசைவு மூலம் முழுமையாக 'இழக்கப்படவில்லை' என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் தெளிவாக எழுதியுள்ளனர். இதனால் பூமியைத் தாக்கிய தியா கிரகத்தின் ஒரு பெரும் பகுதி சந்திரனுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Giant-Impact Hypothesis Planet That Hit Earth May Be Buried Inside Moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X