உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கம் : பயணிகள் உற்சாக வரவேற்பு.!

முதல் முறையாக இந்த ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் ஓடத் துவங்கியதால், ஏராளமான பயணிகளும் அதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

|

உலகின் முதன் முறையான ஹைட்ரஜனால் ரயில் இயக்கப்பட்டது. மணிக்கு 140 கி.மீ வேகத்தில் இந்த ரயில் செல்லும், இதனால் மகிழ்ச்சியடைந்தள்ளனர்.

முதல் முறையாக இந்த ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் ஓடத் துவங்கியதால், ஏராளமான பயணிகளும் அதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஹைட்ரஜன் ரயில்:

ஹைட்ரஜன் ரயில்:

முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில், ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் உள்ள குசாவன் நகரில் தனது பயணத்தை துவங்கியது. இந்த ரயில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. இந்த ரயில் கடந்த திங்களன்று பிரீமர்வோர்டு ரயில் நிலையத்தில் இருந்து முதல் பயணத்தை துவங்கியது.

 ரயில் இன்ஜின் வடிவமைப்பு:

ரயில் இன்ஜின் வடிவமைப்பு:

இந்த ரயில் இன்ஜினை பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் உருவாக்கியது. இந்த புதிய வகை ரயில் என்ஜினில் ஹைட்ரஜன் டேங்க் அதன் கூரை மீது அமைக்கப்பட்டுள்ளது.

மின்சக்தியாக மாறும்:

அதன் அருகில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் எரிவாயு செல்கள் மின்சக்தியாக மாறி ரயில் என்ஜினை இயங்குகிறது. இதன் மூலம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் என்ஜினை தயாரித்து பெருமை ஆல்ஸ்டம் நிறுவத்திற்கு கிடைத்துள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி:

பயணிகள் மகிழ்ச்சி:

இந்த ரயில் என்ஜின் ஜெர்மனியில் ஓடும் கொராடியா லின்ட் என்ற பயணிகள் ரயிலில் பொறுத்தப்பட்டது. காற்று மாசு ஏற்படுத்தும் டீசல் ரயில்களுக்கு பதிலாக சுற்றுசூழலுக்கு உகந்த ஹைட்ரஜன் ரயில்களை அதிகளவில் இயக்கவும் ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு :

எரிபொருள் தட்டுப்பாடு :

2021ம் ஆண்டுக்குள் 14 புதிய ஹைட்ரஜன் ரயில்களை அல்ஸ்டம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாற்று ஏற்பாடு செய்வதில் நிபுணர்கள் தீவிரம் காட்டி ஹைட்ரஜன் என்ஜினை உருவாக்கியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Germany launches world's first hydrogen powered train : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X