Home
Scitech

"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!

வில்லியம் மைலிஸ் - ஒரு சாதாரணமான மற்றும் சராசரியான 11 வயது குழந்தை அல்ல, நிச்சயமாக எந்த வகையிலும் இவன் ஒரு குழந்தை அல்ல.

By Gizbot Bureau

தற்கால குழந்தைகள் - ஒழுக்கம் சார்ந்த பணிகள், கற்றல் அல்லது மன உறுதியை பலப்படுத்தும் அல்லது நீரூபிக்கும் விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பது வெளிப்படை. இதற்கு ஒரு சாதாரணமான காரணம் மற்றும் ஒரு முக்கிய காரணம் என மொத்தம் இரண்டு காரணங்கள் உள்ளன.

ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னதை தவறு என்று நிரூபித்த 11 வயது சிறுவன்!

சாதாரண காரனம் என்னவென்றால் - பெற்றோர்களின் வளர்ப்பு. எதை கற்றுக் கொடுக்கிறார்களோ அதில் தானே பிள்ளைகள் ஆர்வம் காட்டுவார்கள். இரண்டாவது மற்றும் முக்கிய காரணம் என்னவென்றால் - நவீன சமுதாயமும் அதன் முரண்பாடான சோம்பேறித்தனமும் தான். நம்மை சுற்றியுள்ள சூழ்நிலை வெளிப்படுத்தும் விடயங்கள் தான் நமது கற்றல் ஆகிறது. சில குழந்தைகள், இந்த இரண்டு கண்களுக்கு உள்ளும் சிக்குவதில்லை - அப்படியான ஒரு குட்டி ஜீனியஸை பற்றிய தொகுப்பே இது!

News Source : life.gomcgill.com

வில்லியம் மைலிஸ்

வில்லியம் மைலிஸ்

வில்லியம் மைலிஸ் - ஒரு சாதாரணமான மற்றும் சராசரியான 11 வயது குழந்தை அல்ல, நிச்சயமாக எந்த வகையிலும் இவன் ஒரு குழந்தை அல்ல. ஏனெனில் 11 வயதில் இவன் ஒரு வானியற்பியல் நிபுணராக ஆவதற்கு முயற்சி செய்து வருகிறான். பொதுவாக இந்த வயதில் பெரும்பாலான குழந்தைகள் தங்களின் குழந்தை பருவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள். ஆனால் வில்லியம்ஸ் அப்படி இல்லை.

பென்சில்வேனியாவை சேர்ந்த இந்த சிறுவன்

பென்சில்வேனியாவை சேர்ந்த இந்த சிறுவன்

பென்சில்வேனியாவை சேர்ந்த இந்த சிறுவன் ஏற்கனவே, அதாவது கடந்த மே மாதம் 2006 ஆம் ஆண்டிலேயே உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்று விட்டார் என்பதும், தனது ஒன்பதாவது வயதில் இவன் சமூக கல்லூரி வகுப்புகளில் கலந்து கொண்டார் என்பதும், கடந்த இலை உதிர் காலத்தில் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் படிக்க தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றிற்கும் மேலாக, பீட்டர் மைலிஸ் (வில்லியமின் தந்தை) கருத்தின் படி, வில்லியம்ஸ் 7 மாத குழந்தையாக இருக்கும் போதே முழுமையாக பேச தொடங்கி விட்டான்.

ஹேப்பி கேட்

ஹேப்பி கேட்

பின் 21 மாதங்களுக்குள் அவனால் எண்களை கூட்ட முடிந்துள்ளது, மற்றும் இரண்டு வயதிலேயே இவனால் எண்களை பெருக்க முடித்துள்ளது. மேலும் அவனால் சில குழந்தைகளுக்கான புத்தகங்களை படிக்க முடிந்துள்ளது மற்றும் "ஹேப்பி கேட்" என்று தலைப்பிடப்பட்ட தனது சொந்த - ஒன்பது பக்க - புத்தகத்தையும் அவனால் எழுத முடிந்துள்ளது.

சைகை மொழியையும் கற்றுள்ளான்

சைகை மொழியையும் கற்றுள்ளான்

அதோடு நின்று விடாது, இந்த சிறுவனின் மனதின் எல்லையானது நம்பமுடியாத அளவு நீண்டு கொண்டே சென்று உள்ளது. இவன் தனது நான்காவது வயதில், கிரேக்க மொழியை எழுத பழகி உள்ளான். அல்ஜீப்ராவை கற்றுள்ளான் உடன் சைகை மொழியையும் கற்றுள்ளான். அதாவது பெரும்பாலான பெரியவர்கள் செய்யாத, செய்ய முடியாத விடயங்களை சர்வ சாதாரணமாக செய்துள்ளான்.

ஹாக்கிங்

ஹாக்கிங்

வில்லையாமின் ஐந்தாம் வயதில் ஒரு சுவாரசியமான மற்றும் நம்பமுடியாத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு 209 பக்கங்கள் கொண்ட வடிவியல் பாடநூலை ஒரே இரவில் படித்த வில்லியம், அடுத்த நாள் காலை சுற்றளவு தொடர்பான கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனைக் கொண்டு எழுந்தனாம். கிரிஸ்துவ வலைத்தளங்கள் இந்த சிறுவனை பற்றி மிகவும் நல்ல கட்டுரைகளை வெளியிட்டன. அந்த கட்டுரைகளில், இவனின் ஆஸ்ட்ரோபிஸிட் ஆசை ஆனது கடவுள் மீதான நம்பிக்கை காரணமாகவே உருவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது பிளாக் ஹோல்ஸ் என்று அழைக்கப்படும் கருப்பு துளைகள் மீதான ஹாக்கிங் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்கு எதிரான கருத்தை கொண்டுள்ளது.

இந்த பிரபஞ்சம் உண்மையில் எப்படி உருவானது?

இந்த பிரபஞ்சம் உண்மையில் எப்படி உருவானது?

விரிவாக கூற வேண்டும் என்றால், இந்த பிரபஞ்சம் உண்மையில் எப்படி உருவானது? என்பது சார்ந்த சொந்த கருத்தை வில்லியம் கொண்டுள்ளான். ஒரு கட்டுரையின் படி, "ஒரு வைதீகமான கிரேக்க குருவின் மகன் மட்டுமே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கும் திறனை கொண்டிருப்பதாக, வில்லியம் நிரூபிக்க விரும்புகிறான். சுருக்கமாக வேண்டும் என்றால் "கடவுள் இருப்பார்" என்பதை வில்லியம் நிரூபிக்க விரும்புகிறான்.

76 வயதில் காலமானார்

76 வயதில் காலமானார்

மறுகையில் இருக்கும் மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் (76 வயதில் காலமானார்) மிகவும் வேறுபட்ட கருத்தை கொண்டு இருந்தார். அவர் "அறிவியலை பற்றி அறிவதற்கு முன்பு, பிரபஞ்சத்தை கடவுள் படைத்தார் என்று நம்புவதற்கு இயற்கையான காரணங்கள் இருந்தன, ஆனால் இப்போது விஞ்ஞானம் மிகவும் உறுதியான விளக்கம் தருகிறது" என்று கூறிய புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆவார்.

இவை அனைத்தையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?

இவை அனைத்தையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?"

"இவை அனைத்தையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்டபோது, ​​வில்லியம் விளக்குகிறான். "கடவுளே இல்லை என்று சொல்ல முயற்சிக்கிற இந்த நாத்திகர்களுக்கு, கடவுள் இருக்கிறார் என்பதை நம்புவதை காட்டிலும் கடவுள் இல்லை என்று நம்புவதற்கு அதிக விசுவாசம் தேவை படுகிறது. அதே போல் தான், இந்த பிரபஞ்சம் தானாக உருவாகியது என்பதை காட்டிலும் எதோ ஒன்றினா உருவாக்கம் பெற்றுள்ளது என்பதற்கும் இன்னும் அதிக விசுவாசம் தேவைப்படுகிறது. ஏனென்றால் அது இன்னும் தர்க்க ரீதியாக இருக்கிறது!"

உங்கள் ஈகோவை காலி செய்யும் 7 உண்மைகள்!

உங்கள் ஈகோவை காலி செய்யும் 7 உண்மைகள்!

அனைத்தின் மீதும் ஆசைப்படும் மனிதனை கூட கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் நான் தான் அறிவாளி, நான் தான் பலசாலி , நான் தான் பெரியவன் என்று அகம்பாவத்தில் ஆடும் மனிதன் இருக்கிறானே, அவனை மட்டும் அப்படியே விட்டுவிட கூடாது. அவனை "கழுத்திலேயே அடித்து, உட்கார வைத்து" சில உண்மைகளை நாம் கற்பிக்க வேண்டும்.


அந்த உண்மைகள் அவனின் அகம்பாவத்தை, நான் தான் கர்வத்தை அடியோடு காலி செய்யும். அப்படி என்ன உண்மைகள் என்று கேட்கிறீர்களா? வேறு ஒன்றும் இல்லை. நாம் காலூன்றி வாழ்க்கை நடத்தி கொண்டு இருக்கும் இந்த பூமியை, இந்த அண்டத்தை பற்றிய உண்மைகளே அவைகள். காமெடி பண்ணாதீங்க பாஸ்! உலகம், அண்டம், விண்வெளி பற்றிய உண்மைகள் எப்படி ஒருவரின் ஈகோவை அடக்கும்? வாய்ப்பில்லை ராஜா! என்கிறீர்கள் என்றால். இதோ உங்களுக்கான ஒரு சிறிய உண்மையை சொல்கிறேன்.

உண்மை நம்பர் 01:

உண்மை நம்பர் 01:

சூரியன் தான் மாபெரும் ஆதார சக்தி என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தால், ஐ யம்வெரி சாரி. நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் (குறைந்த பட்சம்) 100 பில்லியன் நட்சத்திரங்கள் ஒன்றுதான் - பூமிக்கான சூரியன். இதுவரையிலான பிரபஞ்சத்தில் 100 கோடி பில்லியன் விண்மீன்களுக்குள் மேல் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்கள் புத்திசாலி தான் ஆனாலும் கூட தூசு தான்!

அதாவது பூமியில் உள்ள கடற்கரைகளை அனைத்தும் ஒன்றாக இணைத்து, அதன் அத்தனை மணல் துகள்களையும் ஒன்றாக சேர்த்தால் எவ்வளவு எண்ணிக்கை கிடைக்குமோ அவ்வளவு அதிக நட்சத்திரங்கள் விண்வெளியில் உள்ளனவாம். சரியாக 1995 தான் நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு கிரகம் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த 23 ஆண்டுகளில் ​​ஆயிரமாயிரம் சூரியன்கள் உள்ளன அவைகளை சுற்றும் ஆயிரக்கணக்கான கிரகங்கள் உள்ளன என்பதை நம் கண்டுபிடித்து விட்டோம். மனிதர்கள் புத்திசாலி தான் ஆனாலும் கூட தூசு தான்.

621,000,000,000,000,000 மைல் நீளம்!

621,000,000,000,000,000 மைல் நீளம்!

பூமியோடு ஒப்பிட்டால் மனிதன் ஒரு சிறிய எறும்பு போன்றவன் ஆவான். ஏனெனில் பூமியின் விட்டம் 7,926 மைல் நீளமாகும். சரி நீங்களும் நானும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனமே ஒரு தூசிக்கு சமம் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும் ஏனெனில் நமது ​​பால்வெளி மண்டலத்தின் விட்டம் சுமார் 621,000,000,000,000,000 மைல் நீளம் ஆகும்.

உண்மை நம்பர் 02:

உண்மை நம்பர் 02:

மிகவும் வேகமானது எது? சிறுத்தைப்புலி என்று கூறினால் கட்டுரையை விட்டு அப்படியே வெளியேறி விடுங்கள். நாம் அறிவியலை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆக தெளிவாக சிந்தியுங்கள். மிகவும் வேகமானது ஒளி. அப்படியான ஒளி கூட பயணிக்க சுமார் 100,000 ஆண்டுகள் எடுத்து கொள்ளும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம், நமது பால்வெளி மண்டலமானது நட்சத்திரங்களால் நிரம்பிய ஒரு நகரம் ஆகும். அதற்குள் இருக்கும் இதர கிரகம் ஒன்றை தொட்டு பார்க்க 100 ஆயிரம் ஆண்டிகள் என்ன அதற்கும் மேலாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உண்மை நம்பர் 03:

உண்மை நம்பர் 03:

தெரிந்தது கை அளவு, தெரியாதது உலகளவு என்பார்களே. அதை நிரூபிக்கவா? ஆம் நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் சுமார் 70 சதவிகிதம் இருண்ட ஆற்றலால் நிரம்பி உள்ளது. அதில் 25 சதவீதகம் டார்க் மேட்டரால் நிரம்பி உள்ளது. இதற்கெல்லாம் நாம் பெயர் மட்டும் தான் வைத்துள்ளோமே ஒழிய, அது என்ன? அதற்குள் என்ன இருக்கிறது? அது எதனால் நிரம்பி உள்ளது? என்பது நமக்கு இப்பொது வரையிலாக தெரியாது. சரி அதில் பூமிக்கு எவ்வளவு பங்கு? - இதுவரையிலாக நாம் கண்டறிந்த தூரம் மற்றும் கண்டறிய முடியும் என்று நம்பப்படும் தூரம் என அனைத்தையும் சேர்த்தால் ஒரு 5 சதவீகிதம் தேறும்.

உண்மை நம்பர் 04:

உண்மை நம்பர் 04:

சூரியனை கையால் மறைக்க முடியும் என்பதற்காக அது குறுகி விடாது என்கிற வாய்மொழியை கேட்டு இருப்பீர்கள். அப்படி ஒரு ஒப்பீடு நடந்தால் எப்படி இருக்கும்? - சூரியன் ஒரு வீட்டின் முன் கதவு என்று வைத்துக்கொண்டால் பூமி அதில் ஒரு ஆணியின் அளவில் தான் இருக்கும்.

உண்மை நம்பர் 05:

உண்மை நம்பர் 05:

சூரியன் நமது சூரிய மண்டலத்தில் ஒட்டுமொத்த எடையையும் தன்னுள் கொண்டு உள்ளது. பூமி உட்பட இதர கிரகங்கள் மற்றும் எல்லாமும் சேர்ந்து 0.2 சதவிகி எடையை கொண்டுள்ளது.

உண்மை நம்பற்ற 06:

உண்மை நம்பற்ற 06:

எட்வின் ஹப்பிலின் படி, பிரபஞ்சம் விரிவடைந்து விட்டது, ஒரு கட்டத்தில் (அதாவது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) பிரபஞ்சம் ஒற்றை புள்ளியில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒன்றே ஆகும்.

உண்மை நமபர் 07:

உண்மை நமபர் 07:

இன்டர்ஸ்டெல்லார் ஸ்பேஸ் என்று விஞ்ஞானிகள் விண்மீன் இடைவெளியை நான்கு அமெரிக்க விண்கலங்கள் கடந்து உள்ளன. அதில் இரண்டு விண்கலங்கள் குறிப்பிடத்தத்தக்கது. வாயேஜர் 1, நமது சூரியனில் இருந்து 11 பில்லியன் மைல்கள் என்கிற எல்லையை தொட்டுள்ளது. நமது சூரிய குடும்பத்தை விட்டு வெளியே சென்ற முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் இதுதான். பின் வாயேஜர் 2, மணிக்கு சுமார் 39,000 மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்கிறது, இருந்தாலும் கூட நமது இரவு வானத்தின் மிகவும் பிரகாசமான நட்சத்திரமான சிரிஸை கடக்க அதற்கு 295,000 ஆண்டுகளுக்கும் மேல் தேவை.

More news

Best Mobiles in India

English summary
genius-11-year-old-in-college-claims-he-can-prove-einstein-and-stephen-hawking-was-wrong : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X