பாலைவனத்தில் தோன்றிய மர்ம உலோகப்பொருள் இரவோடு இரவாக திருட்டு- ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்!

|

அமெரிக்க பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட விநோத உலோகப் பொருள் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தது.

விநோத உலோகப் பொருள்

விநோத உலோகப் பொருள்

அமெரிக்க பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட விநோத உலோகப் பொருள் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் விநோக உலோகத்தை நான்கு பேர் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

உட்டா பாலைவனத்தில் ஆய்வு

உட்டா பாலைவனத்தில் ஆய்வு

மேற்கு அமெரிக்காவில் உள்ள உட்டா பாலைவனத்தில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யப்பட்டது. பெரிய கொம்புகளை கொண்ட சிறப்பு ரக ஆடுகளை கணக்கிடுவதற்காகா அந்த பணிகள் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பளபளவென இருந்து உலோகத் தூண் (மோனோலித்) ஒன்று கண்பிடிக்கப்பட்டது.

தூண் எப்படி தோன்றியது

தூண் எப்படி தோன்றியது

12 அடி உயரம் கொண்டதாக இருந்த இந்த தூண் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த தூண் எப்படி இங்கு வந்தது என பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விசித்திரமான கண்பிடிப்பு பல்வேறு கேள்விகளுக்கு உள்ளானது. இதற்கு முன்பு வரை காணாத இந்த உலோகம் எப்படி திடீரென இங்கு தோன்றியது என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆக்டோபஸ்-க்கு எத்தனை கால்?- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு!ஆக்டோபஸ்-க்கு எத்தனை கால்?- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு!

மோனோலித் குறித்து ஆய்வு

மோனோலித் குறித்து ஆய்வு

அமெரிக்கா உட்டா பாலைனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மோனோலித்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். 12 அடி உயரம் உள்ள இந்த தூணுக்கு பல வதந்திகள் பரப்பப்பட்டது. இதில் முக்கியமான ஒன்று இந்த மர்மத்தூணுக்கும் ஏலியன்ஸ்-க்கும் தொடர்பு படுத்தி பேசப்பட்டதாகும்.

திடீரென காணாமல் போன தூண்

திடீரென காணாமல் போன தூண்

இந்த உலோகத்தூண் எப்படி வந்தது என்ற மர்மம் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில் இந்த உலோகத்தூண் திடீரென காணாமல் போனது. எப்படி காணாமல் போனது என்ற கேள்வி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

நான்கு பேர் இரவில் திருட்டு

இந்த நிலையில் மர்ம உலோகத் தூணை நான்கு பேர் இரவில் கடத்தி சென்ற உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மர்ம உலோகத் தூண் மறைந்ததற்கான புதிர் தீர்க்கப்பட்டுள்ளது. மர்மத் தூண் காணாமல் போனதுக்கும் வேற்றுகிரக வாசிகளுக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது.

திருடியவர்கள் குறித்து நீடிக்கும் மர்மம்

திருடியவர்கள் குறித்து நீடிக்கும் மர்மம்

புகைப்பட கலைஞர் பெர்னார்ட்ஸ் நான்கு பேரும் உலோகத் தூணை கடத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இரவில் நான்கு பேர் வந்து அந்த 12 அடி உலோகத் தூணை சிவப்பு பாறைகளுக்கு மேலே தள்ளிச் சென்று வண்டியில் கொண்டு சென்றனர் என்ற தகவலை வெளியிட்டார். நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததாக கருதப்பட்டாலும். இப்போதுவரை மர்ம உலோகத்தை திருடியது யார் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அறிவியல் புனைக்கதை திரைப்படம்

அறிவியல் புனைக்கதை திரைப்படம்

மோனோலித் கண்டுபிடிப்பானது ஸடான்லி குப்ரிக்-ன் அறிவியல் கதை திரைப்படமான 2001: A Space Odyssey-ல் உருவான பல கோட்பாடுகளை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது என கூறப்படுகிறது.

இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!

மூன்றாவது மோனோலித் உருவம்.! ஏலியன் செயலா?

மூன்றாவது மோனோலித் உருவம்.! ஏலியன் செயலா?

கலிபோர்னியாவில் தோன்றிய மர்மமான மூன்றாவது மோனோலித் உருவம்.! ஏலியன் செயலா? அல்லது ரசிகர்களின் செயலா? உட்டா மற்றும் ருமேனியாவில் இதற்கு முன்பு தோன்றிய மர்மமான மோனோலித் கட்டமைப்புகள் மறைந்த பிறகு தற்பொழுது மூன்றாவது மோனோலித் கலிபோர்னியாவில் தோன்றியுள்ளது.

பூமியில் ஆங்காங்கே மோனோலித் தோற்றம்

பூமியில் ஆங்காங்கே மோனோலித் தோற்றம்

2020 இனிமேல் வீரியமடைய முடியாது என்று அனைவரும் நினைக்கத் துவங்கும் போது, மோனோலித்தின் தோற்றம் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு, உட்டாவிலும், பின்னர் ருமேனியாவிலும் மோனோலித்கள் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மோனோலித் என்றால் என்ன தெரியுமா?

மோனோலித் என்றால் என்ன தெரியுமா?

மோனோலித் என்பது ஒற்றைக்கல் என்று அர்த்தம். இந்த மோனோலித் உருவங்கள் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், இப்போது மீண்டும் ஒரு புதிய மோனோலித் உருவம் கலிபோர்னியாவில் உள்ள பைன் மவுண்டைனில் காணப்பட்டுள்ளது. இந்த புதிய மோனோலித் தோற்றம், அளவு மற்றும் கட்டமைப்பில் முந்தைய இரண்டு மோனோலித்துடன் அப்படியே ஒத்து போகிறது.

சில நூறு பவுண்டு எடை கொண்ட மோனோலித் எப்படி மலை உச்சிக்கு வந்தது?

சில நூறு பவுண்டு எடை கொண்ட மோனோலித் எப்படி மலை உச்சிக்கு வந்தது?

இருப்பினும், மற்ற இரண்டு மோனோலித் போலல்லாமல், இந்த மோனோலித் தரையில் சரியாக பொருத்தப்படவில்லை, யாராவது அதைத் தள்ளினால் கட்டமைப்பு அப்படியே தரையில் வீழ்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது. மோனோலித்தின் மதிப்பிடப்பட்ட எடை சில நூறு பவுண்டுகள் ஆகும். இது மூன்று பக்க கட்டமைப்பாகும். இது பிரதிபலிப்பு இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது. உட்டா மற்றும் ருமேனியா மோனோலித் போன்று மென்மையானது.

மூன்றாவது மோனோலித்

மூன்றாவது மோனோலித்

மற்ற இரண்டு மோனோலித் போலவே, இதுவும் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், செவ்வாயன்று மோனோலித் இந்த வழியில் இல்லை என்று ஹைக்கர் ரே ஜான்சன் கூறியுள்ளார். மலையின் உச்சியில் நிற்கும் மாபெரும் அமைப்பை ஹைக்கர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பின்னரே அனைவருக்கும் மூன்றாவது மோனோலித் பற்றித் தெரியவந்துள்ளது என்று கூறப்படுகிறது.

மகாபாரத, ராமாயண காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு: இதோ ஆதாரம்.!மகாபாரத, ராமாயண காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு: இதோ ஆதாரம்.!

மர்மமான முறையில் காணாமல் போகும் மோனோலித்துகள்

மர்மமான முறையில் காணாமல் போகும் மோனோலித்துகள்

உட்டாவில் ஒரு பாலைவனத்தில் முதல் மோனோலித் தோன்றியது. சில நாட்களுக்குப் பிறகு, ருமேனியாவில் இதே போன்ற ஒரு அமைப்புடன் இரண்டாவது மோனோலித் தோன்றியது. இது பியாட்ரா நியாம் நகரில் உள்ள பட்கா டோம்னி மலையில் காணப்பட்டது. சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த இரண்டு மோனோலித்களும் பின்னர் மர்மமான முறையில் அகற்றப்பட்டன. இந்த கட்டமைப்பை அகற்றியது யார் என்று தெரியவில்லை.

2001: A Space Odyssey என்ற திரைப்படத்தில் வரும் மோனோலித்

2001: A Space Odyssey என்ற திரைப்படத்தில் வரும் மோனோலித்

இருப்பினும், இந்த மோனோலித்கள் 2001: A Space Odyssey என்ற திரைப்படம் மற்றும் புத்தகத்தின் ரசிகர்களை நினைவூட்டுகின்றது. புத்தகத்திலும் படத்திலும் இதேபோன்ற கட்டமைப்பை நம்மால் பார்க்கமுடியும். இந்த திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இந்த மோனோலித் பற்றி தெரிந்திருக்கும்.

ஏலியனின் வேலையா? அல்லது ரசிகர்களின் வேலையா?

ஏலியனின் வேலையா? அல்லது ரசிகர்களின் வேலையா?

திடீரென்று எந்த விளக்கமும் இல்லாமல் தோன்றிய இந்த மோனோலித்களின் பின்னணியில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் சில ரசிகர்களின் வேலையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், சதி கோட்பாட்டாளர்கள் இது ஒரு ஏலியனின் வேலை என்று நம்புகின்றனர்.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

5வது இடமாக போலந்து தலைநகர் வார்சாவில் மோனோலித்

5வது இடமாக போலந்து தலைநகர் வார்சாவில் மோனோலித்

போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு மர்மமான உலோக மோனோலித்தோன்றியுள்ளது. இந்த மோனோலித் உருவங்கள் சமீபத்தில் மர்மமான முறையில் பூமியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தோன்றிய பின்னர் இன்னும் 4 இடங்களில் தோன்றியுள்ளது. இப்பொழுது ஐந்தாவது முறையாக மீண்டும் இந்த மோனோலித் உருவம் போலந்தில் தோற்றமளித்துள்ளது.

5வது முறையாய் தோன்றிய மோனோலித்

5வது முறையாய் தோன்றிய மோனோலித்

5வது முறையாய் தோன்றிய இந்த மோனோலித் பற்றி உள்ளூர் ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது, விஸ்டுலா ஆற்றின் குறுக்கே அதிகாலையில் ஓடும் போது இந்த முக்கோண தூணை ஜாகர்ஸ்கள் கவனித்துள்ளனர். இது சுமார் மூன்று மீட்டர் (10 அடி) உயரத்திலிருந்துள்ளது, மந்தமான வெள்ளி நிற மேற்பரப்பைக் கொண்டுள்ளது, ஸ்குரூ (screw) மூலம் ஒன்றாகப் பிடிக்கப்பட்டு இருந்துள்ளது.

ஆற்றங்கரையின் மணலில் 5வது மோனோலித்

ஆற்றங்கரையின் மணலில் 5வது மோனோலித்

பெரிய பாலத்தின் அருகே ஆற்றங்கரையின் மணலில் இந்த 5வது மோனோலித் நடப்பட்டிருக்கிறது. "வலது (நதி) கரையில் உள்ள கடற்கரையில் ஒரு மர்மமான மற்றும் அசாதாரண மோனோலித் நிறுவல் உருவாகியுள்ளது" பற்றி அந்த பகுதியில் மக்கள் சற்று பதட்டம் அடைந்ததாகவும் வார்சாவின் விஸ்டுலா மாவட்ட அதிகாரிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

1000 ஜிபி இலவச டேட்டாவுடன் 20% எக்ஸ்டரா டேட்டா வழங்கும் ACT ஃபைபர்நெட்.. கேஷ்பாக் கூட இருக்கு..1000 ஜிபி இலவச டேட்டாவுடன் 20% எக்ஸ்டரா டேட்டா வழங்கும் ACT ஃபைபர்நெட்.. கேஷ்பாக் கூட இருக்கு..

அமெரிக்கா, பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்து தொடர்ந்து இப்போ இங்கே..

அமெரிக்கா, பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்து தொடர்ந்து இப்போ இங்கே..

உலக நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இப்பொழுது 5வது முறையாக போலந்திலும் மோனோலித் என்ற மர்ம உலோகத் தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் உடா பாலைவனத்தில் முதல் மோனோலித் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலோக தூண் திடீரென மாயம்

உலோக தூண் திடீரென மாயம்

கண்டுபிடிக்கப்பட்ட தூண் திடீரென மாயமாகியதால், மோனோலித் பற்றிய செய்திகள் இன்னும் தீவிரமடைந்தது. அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்திலும் போன்ற பிற நாடுகளிலும் இந்த உலோக தூண் திடீரென உருவாகி மறைந்தது. இன்னும் இந்த மர்மம் அவிழ்க்கப்படவில்லை.

இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!

உண்மை என்ன? தொடரும் புதிர்..

உண்மை என்ன? தொடரும் புதிர்..

அடுத்த மர்மம் என்னவோ? இப்பொழுது 5வது மோனோலிக் மர்மமாகத் தோன்றியுள்ளது. இதை யார் வைத்தார்கள்? எப்படி, எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலர் இதை ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் ரசிகர்கள் செய்யும் ஏமாற்று வேலை என்றும், இன்னும் சிலர் இது ஏலியன்களின் மாய செயல் தானோ என்று கதைக்கட்டி வருகின்றனர். உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியாமல் புதிராக இருக்கிறது. இறுதியாக, இப்போது மோனோலித் இந்தியாவிலும் தோன்றி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Best Mobiles in India

English summary
Four Men Remove the Mystery Monolith's: Photographer Posted the Proof Pictures

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X