60,000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த அறிய மனித இனம் கண்டுபிடிப்பு.!

பதிமூன்று புதை படிவ எலும்புகள் மற்றும் பற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புகள் மற்றும் பற்கள் அனைத்தும் இதுவரை அறியப்படாத மனித இனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு குகையில், பதிமூன்று புதை படிவ எலும்புகள் மற்றும் பற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புகள் மற்றும் பற்கள் அனைத்தும் இதுவரை அறியப்படாத மனித இனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மூன்று புதை படிவ படிமங்கள்

மூன்று புதை படிவ படிமங்கள்

லூசான் தீவின் வடக்கு பகுதியில் உள்ள கல்லோ குகையில் மூன்று புதை படிவ படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த எலும்புகள் மற்றும் பற்கள் நிச்சயம் ஹோமோ லூசோனென்சிஸ் இனத்தைச் சேர்ந்ததாக இருக்குமென்று தெரிவித்துள்ளனர்.

60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனம்

60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனம்

விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள எலும்புகள் மற்றும் பற்களுக்குச் சொந்தமான ஒரு படிமம், நிச்சயம் இந்த இனம் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் அதனுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது இரண்டு படிமங்கள் நிச்சயம் குறைந்தது 50,000 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவித்துள்ளது.

ஹோமோ புளோரசியன்சிஸ்

ஹோமோ புளோரசியன்சிஸ்

இதேபோல் 2003 ஆம் ஆண்டில், மற்றொரு தீவில் வசிக்கும் ஹோமோ புளோரசியன்சிஸ் என்ற இனங்களின் எலும்புகள் மற்றும் படிமங்கள் கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட இனம் உயரத்தில் குறைவான அளவுடைய குள்ள மனிதர்கள் என்றும் அந்த இனத்திற்கு ஹொபிட் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

3000 கி.மீ தொலைவில்  கண்டறியப்பட்டுள்ளது

3000 கி.மீ தொலைவில் கண்டறியப்பட்டுள்ளது

இதற்கு முன் கண்டறியப்பட்ட எலும்புகள் மற்றும் பற்கள் போன்ற படிமத்தளத்தில் இருந்து சுமார் 3000 கி.மீ தொலைவில் தற்பொழுது விஞ்ஞானிகள் இந்த புதிய ஹோமோ லூசோனென்சிஸ் இனத்தின் எலும்புகள் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்ட ஆராய்ச்சி

அடுத்தகட்ட ஆராய்ச்சி

முன்னர் வாழ்ந்த மனித இனத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டும், முற்றிலும் வேறுபட்ட ஒரு இனமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட புதை படிவ எலும்புகள் மற்றும் பற்கள் அனைத்தையும் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Fossils of previously unknown human species discovered in cave : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X