அண்டார்டிகா இரகசியத்தை வெளிப்படுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி

|

ஒரு கடற்படை அதிகாரி அன்டார்டிக்காவில் நோ-ப்ளை(No fly Area) பகுதியில் தான் பார்த்த மிகப்பெரிய இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, அண்டார்டிகாவின் பனிப்பகுதியில் உள்ள மிகப்பெரிய இடைவெளியில் அவர்கள் அவசரகால மருத்துவப் பாதுகாப்புடன் கடந்து சென்றதைப் பற்றி குறிப்பிட்டார்.மேலும் அவர் ஒரு விஞ்ஞானிகள் குழுவை அழைத்து சென்றதாகவும், அவர்கள் அனைவரும் இரண்டு வாரங்கள் காணாமல் போனதாகவும், அதன்பிறகு அனைவரும் பயந்துவிட்டாதாகவும் கூறியுள்ளார்.

அண்டார்டிகா இரகசியத்தை வெளிப்படுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி

அன்டார்க்டிகா இரகசியங்களால் ஆச்சரியப்படுவதை ஒருபோதும் நிறுத்துவதில்லை. அதன் பண்டைய கால மர்மத்திலிருந்து தொடங்கி பல ஆண்டுகளாக கூறப்படும் எண்ணற்ற சம்பவங்களுடன், இந்த தொலைதூர கண்டம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

அண்டார்டிகா

அண்டார்டிகா

பல நூலாசிரியர்களின் கூற்றுப்படி, அண்டார்டிகா அதன் மேற்பரப்பிற்கு கீழே பல இரகசியங்களால் நிரம்பியுள்ளது. அதன் காரணமாகவே இந்த இடம் பொதுமக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.இந்த கண்டத்தை பற்றிய கோட்பாடுகளில் ஒன்று, இங்கு பண்டைய சமூகம் வாழ்ந்துள்ளது என்கிறது.

பனிக்கட்டி கண்டம்

பனிக்கட்டி கண்டம்

இந்த பனிக்கட்டி கண்டம் பண்டைய காலத்தில் தற்போது உள்ளது போல உறைந்த நிலையில் இல்லை என்ற கருத்தை ஏராளமான ஆதாரங்கள் ஆதரிக்கின்றன. மாறாக அங்கு பூக்கும் தாவரங்கள் இருந்து, மக்களும் வாழ்ந்திருக்கலாம் எனவும் அவர்கள் மேம்பட்ட கட்டமைப்புகளை கட்டியெழுப்பியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கண்கவர் சதி

கண்கவர் சதி

இருப்பினும் ஏன் அண்டார்க்டிகா அனைத்து வகையான கண்கவர் சதி கோட்பாடுகளின் இதயமாக மாறிவிட்டது என்பதே முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கு எளிய பதிலை விளக்க முயற்சிப்போம். இந்த கண்டம் பூமியிலிருந்து பிரிக்கப்பட்ட இடமாக இருப்பதால் மக்கள் எளிதாக அங்கு சென்று அதன் கடந்த காலத்தை ஆராய முடியாது.

1513ம் ஆண்டு வரைபடம்

1513ம் ஆண்டு வரைபடம்

மேலும் அண்டார்டிகா தற்போது நாம் பார்ப்பது போல இல்லாமல் பனிப்பரப்புகள் இல்லாத கண்டம் என பல பண்டைய வரைபடங்களில் உள்ளது. துருக்கிய அட்மிரல் பெரி ரீஸ் அவர்களின் 1513ம் ஆண்டு வரைபடம், இன்றுள்ள நமது சமகால சமுதாயத்தில் இன்னும் விவாதங்களை கிளப்புகிறது. இந்த வரைபடம் 1818-1820 க்கு இடைப்பட்ட காலத்தில் தான் அண்டார்டிகா கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறது.

 1820 ஆம் ஆண்டில்...

1820 ஆம் ஆண்டில்...

பிரதான கூற்றுகளின் படி, 1820 ஆம் ஆண்டில் தான் இந்த கண்டத்திற்கு முதல் பயணங்கள் நடந்துள்ளன. ரஷ்ய பயணிகள் ஃபேபியன் கோட்ட்லி வான் பெலிங்ஷெசன் மற்றும் மைக்கேல் லாசராவ், பிரிட்டிஷ் பயணி எட்வர்ட் பிரான்சீல்ட் மற்றும் ஒரு அமெரிக்க பயணி நதானியல் பால்மர் ஆகியோர் பயணித்துள்ளனர்.

மறுபுறம் அந்த நிலப்பரப்பில் ஒரு வருடத்திற்குப் பிறகு தான் கால் பதித்துள்ளனர். அமெரிக்கன் சீலர் கேப்டன் ஜான் டேவிஸ் பனிக்கட்டி பரப்பில் முதன்முதலாக கால்பதித்தார்.

தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது

தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது

நார்வே-ஐ சேர்ந்த ரோனால்ட் அமுன்ட்சென் டிசம்பர் 14, 1911 அன்று அங்கு தரையிறங்கினார். இந்த வியத்தகு போட்டியில் பிரிட்டிஷ் ராபர்ட் பால்கன் ஸ்காட்-ஐ தோற்கடித்து தரையிறங்கினார். இவ்வாறாக நாம் கேள்விப்பட்ட அனைத்தும் கதைகளும் சமீபத்திய காலங்களில் உருவானவை. 5 நூற்றாண்டுகளுக்கு முன்பாக தேதி குறிப்பிட்டுள்ள வரைபடங்களில், இந்த கண்டத்தை தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில பனிக்கட்டி பரப்பு இல்லாமலும் காண்பிக்கப்பட்டுள்ளது.

வினோதமான கோள வடிவ அமைப்பு

வினோதமான கோள வடிவ அமைப்பு

2012 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த பனிக்கட்டி கண்டத்தின் ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் பல விடையளிக்காத கேள்விகளை எழுப்பியுள்ளது. பூமியில் அத்தகைய தொலைதூர இடத்தில் ஒரு வினோதமான கோள வடிவ அமைப்பு காணப்படுகிறது. 400-அடி அளவுள்ள அந்த அமைப்பு இயல்பாகவே வெளிப்பட்டதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எப்படியும், இந்த அமைப்பும் அண்டார்டிகா. கண்டத்தில் உள்ள பல அசாதாரணமான விஷயங்களைப் பற்றிய கூடுதல் தொகுப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

வியத்தகு வீடியோ

"அண்டார்டிக்கா கண்டத்தில் நஞைபெறும் மிகவும் விசித்திரமான நிகழ்வுகளில் ஒரு உண்மையான அதிர்ச்சியூட்டும் மற்றும் வியத்தகு வீடியோ" எனக் குறிப்பிடப்பட்டு சமீபத்தில் யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளி பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

 கடற்படை அதிகாரி

கடற்படை அதிகாரி

"ஒரு கடற்படை அதிகாரி ஒரு குறிப்பிட்ட மருத்துவ அவசர காலத்தில் 'நோ-ப்ளை' பகுதியை கடந்து சென்ற போது கண்ட ஒரு பெரிய இடைவெளியை பற்றி கூறுகிறார். அவர் அழைத்துச் சென்ற ஒரு விஞ்ஞானிகள் குழு இரண்டு வாரங்கள் காணாமல் போனதாகவும், குறிப்பாக இந்த விஷயத்தை பற்றி பேச கூடாது என எச்சரிக்கபட்டதாகவும் கூறுகிறார். மிகவும் பயந்த நிலையில் திரும்பிய அந்த விஞ்ஞானிகள் குழு தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு விமானத்தில் நியூசிலாந்து அனுப்பப்பட்டனர். தான் பார்த்ததையும் அனுபவப்பட்டதையும் விரிவாக விளக்குகிறார்"

Best Mobiles in India

English summary
Former Navy Officer Tells The Truth Behind Antarctica : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X