Home
Scitech

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா? பார்த்ததாக கூறும் முன்னாள் நாசா விஞ்ஞானி

அதாவது, செவ்வாய் கிரகத்திலும் மற்ற கோள்களிலும் நம்மை விட அதி புத்திசாலியான உயிரினங்கள் வாழ்கின்றன

இன்று நேற்று அல்ல, பல காலம் தொட்டே வேற்று கிரக வாசிகள் பற்றிய கோட்ப்பாடுகள் நிறைய காண கிடைக்கின்றன. அந்த கால கடவுள்கள் தொடங்கி எகிப்து பிரமிடுகள், நிலவின் இருண்ட மறுபக்கம் என வேற்று கிரக வாசிகளின் பங்கு நிறைய இருப்பதாக வேற்று கிரகவாசிகள் சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர். நம் அருகே மட்டுமில்லாமல், இந்த பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பத்திற்கு அருகாமையிலுள்ள மற்ற நட்சத்திர கூட்டங்களில் ஏகப்பட்ட விந்தையான நிகழ்வுகள் நடப்பதாகவும் நிறைய சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா? பார்த்ததாக கூறும்  நாசா விஞ்ஞானி

அதாவது, செவ்வாய் கிரகத்திலும் மற்ற கோள்களிலும் நம்மை விட அதி புத்திசாலியான உயிரினங்கள் வாழ்கின்றன, ஏன் நம் பூமி கிரகத்திலேயே நம்மை விட அதிபுத்திசாலியான உயிரினங்கள் வாழ்கின்றன என நம்புபவர்கள் எண்ணிக்கை இன்று அதிகரித்து கொண்டே வருகிறது.

வேற்றுகிரகவாசிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்:

வேற்றுகிரகவாசிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்:

இப்படிப்பட்ட அனைத்து நிகழ்வுகளை உளவுத்துறை அமைப்புகள் கண்காணித்து வருகின்றன என்பது சிலருக்கு நம்ப முடியாத ஒரு செயலாக இருக்கலாம். ஆனால் தற்பொழுது வெளிவந்துள்ள பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள், மேற்சொன்ன நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று காட்டுகின்றன.

சிறிது காலத்திற்கு முன்பு நாசா விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், தான், மனித ஒருவிலுள்ள சிலர் விண்வெளி உடை அணிந்து செவ்வாய் கிரகத்தில் நடமாடுவதை பார்த்ததாக ஆணித்தரமாக கூறுகிறார்.

 என்ன சொல்கிறார் ஜாக்கி ?

என்ன சொல்கிறார் ஜாக்கி ?

எழுபதுகளின் தொடக்கத்தில் நாசா வைகிங் என்ற திட்டத்தின் மூலம் செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தது. அந்த திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானியும் அவருடன் பணிபுரிந்த அவரது சகாக்களும், அவர்கள் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் ஏகப்பட்ட நிழல் ஓவியங்களை கண்டதாக கூறுகின்றனர்.


அவர் தனது அடையாளத்தை வெளியுலகுக்கு காட்டாமல் இருக்க தன்னை 'ஜாக்கி' என்று அடையாளப்படுத்திக்கொள்கிறார். இவர் தனது கருத்துக்களை அமெரிக்கா உளவு அமைப்பின்(CIA ) முன்னாள் விமானி மற்றும் வேற்றுகிரக மனித ஆராய்ச்சியாளர் ஜான் லியரிடம் தெரிவித்துள்ளார்.

 பிரபல வானொலி

பிரபல வானொலி

அமெரிக்கா நாட்டின் ஒரு பிரபல வானொலி நிறுவனமான 'கோஸ்ட் டு கோஸ்ட் ஏஎம்' (Coast-to-Coast AM) என்ற நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நாசா நிறுவனம் செவ்வாய் கிரக மனிதர்கள் பற்றிய உண்மைகளை உலகுக்கு தெரிவிக்காமல் மறைப்பதாக, ஜாக்கி குற்றம் சாட்டினார்.

வைகிங் திட்டமும் செவ்வாய் கிரக மனிதர்களும்:

வைகிங் திட்டமும் செவ்வாய் கிரக மனிதர்களும்:

அதுமட்டுமில்லாமல், அமெரிக்க விண்வெளி நிறுவனம் எண்ணிலடங்கா இரகசிய திட்டங்களை வேற்றுகிரக மனிதர்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி உள்ளதாக அவர் கூறுகிறார். அமெரிக்கா தன்னை ஏலியன் தொழில்நுட்பத்தில் மேம்படுத்துவதற்கு, வைகிங் திட்டத்திற்கு பின்பு செயல்படுத்தப்பட மற்றும் தற்பொழுதைய செவ்வாய் கிரக விண்வெளி திட்டங்களும் செவ்வாய் கிரக மனிதர்கள் ஆராய்ச்சிக்கே செயல்படுத்தப்படுவதாகவும், அந்த திட்டங்களின் உண்மை நோக்கம் வெளி உலகிற்கு தெரியப்படுத்தப்படுவதில்லை எனவும் ஜாக்கி மேலும் கூறுகிறார்.

வானொலியில் நடந்த நேர்காணலில் ஜாக்கி பின்வருமாறு கூறுகிறார்:

வானொலியில் நடந்த நேர்காணலில் ஜாக்கி பின்வருமாறு கூறுகிறார்:

"நாங்கள் அனுப்பிய வைகிங் ஊர்தி செவ்வாய் கிரகத்தில் கால் பதித்து மெதுவாக நகர தொடங்கியது... அப்போது திடீரென இரண்டு மனிதர்கள் விண்வெளி உடையணிந்து வந்தனர்... அந்த உடை நம் விண்வெளி வீரர்கள் அணியும் உடை போல் கனமாக இல்லை, மாறாக இலகுவான பாதுகாப்பு உடை போன்று இருந்தது. அவர்கள் இருவரும் வைகிங் ஊர்தியை நோக்கி நடந்து வந்தனர்"

"அந்த செயலை நாங்கள் கவனித்ததும், நானும் எனது சக பணியாளர்களும் மாடியை நோக்கி விரைந்தோம். ஆனால் அவர்கள் எச்சரிக்கையாக கதவை மூடிவிட்டு கதவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர், அதனால் எங்களால் அங்கு செல்ல முடியவில்லை."

மறுபுறம், ஜான் லியர், நாசாவானது அறுபதுகளிலேயே செவ்வாய்க்கு சென்று விட்டதாக கூறுகிறார். மேலும் "செவ்வாயில் உள்ள குறைந்த ஒஸ்ய்ஜ்ன் வளிமண்டலத்தில் மனிதர்களால் சுவாசிக்க முடியும் என்பதால், மனிதர்களுக்கு விண்வெளி பாதுகாப்பு கவசம் தேவை இல்லை" என்றும் கூறுகிறார்.

செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த மர்ம சிக்னல்:

செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த மர்ம சிக்னல்:

செவ்வாயின் ஒரு குறிப்பிடப்படாத இடத்தில் இருந்து ஒரு மர்ம சிக்னல் வந்து கொண்டே இருக்கிறது என்று நாசா கூட கூறியுள்ளது.

சில அறிஞர்கள், அமெரிக்கா மட்டுமில்லாது ரஷியா, சீன போன்ற வல்லமை பெற்ற மற்ற உலக நாடுகளும் விண்வெளி பயணத்தில் நிறைய ஆர்வம் காட்டி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் இந்த நாடுகள் நிலவின் மறுபக்கத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து வருவதாகவும், வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு கொள்ள ஏகப்பட்ட நிறுவங்களை நிறுவியுள்ளதாகவும் நிறைய ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அவற்றில் மிக முக்கியமா ஒன்று அமெரிக்க நாட்டில் நெவேடா பாலைவனத்தில் இருக்கும் ஏரியா 51. நிறைய விண்வெளிக் கப்பல்களை கொண்டிருக்கும் இந்த நாடுகள், நிலவில் சுற்றி இருப்பதாய் மற்றவர்கள் பார்க்காமல் இருப்பதற்காக சந்திரனை சுற்றி ஒரு மாய அல்லது ஹாலோகிராபிக் கவசத்தை உருவாக்கியிருக்கின்றன. எனவே மற்ற நாடுகளுக்கு நிலவில் என்ன நடக்கின்றது என உண்மையில் தெரியாமல் போய்விடுகிறது.

நமக்கு என்றாவது உண்மை நிலவரம் தெரியுமா?

நமக்கு என்றாவது உண்மை நிலவரம் தெரியுமா?

நம்மால் சட்டத்தின் உதவியின் மூலம் இப்படிப்பட்ட தகவல்களை அரசாங்க நிறுவனங்களிடம் இருந்து பெற முடியுமா என்பது மிக பெரிய கேள்வி குறியாகும். அரசு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும், அரசும் இணைந்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்தும் நோக்கில், அவர்களே வெளியில் சொன்னாலொழிய வேறு எந்த வகையிலும் நமக்கு உண்மை நிலவரம் தெரியப்போவதில்லை.

Best Mobiles in India

English summary
Former NASA worker: “I’ve seen humans on Mars: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X