நாசாவை "முட்டாள்" என்று கூறிய நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் ஏன்?

தற்போது வரையிலாக செவ்வாய் கிரகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆராயும் எட்டு ரோவர்கள் அங்கு உலாவி வருகிறது.tech news, NASA, Mars Mission, Humans Is A 'Stupid' Idea, smartphone, technology, news , indi

|

விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் அத்துணை கண்களை தன் மீது கொண்டுள்ள ஒரு கிரகம் தான் - செவ்வாய். விண்வெளி அறிவியல் மற்றும் ஆய்வு உலகை பொறுத்தவரை செவ்வாய் கிரகமானது ஒரு "சூடான உருளைக்கிழங்கு" ஆகும்.

தற்போது வரையிலாக செவ்வாய் கிரகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆராயும் எட்டு ரோவர்கள் அங்கு உலாவி வருகிறது. அவைகள் செவ்வாய் கிரக மண் தொடங்கி அங்கு இருக்கும் நீர் ஆதாரம் மற்றும் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் எந்த அளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பது வரையிலாக பல ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றன.

ஆரம்ப கால சோதனைகள்

ஆரம்ப கால சோதனைகள்

இந்த அத்துனை ஆராய்ச்சிகளுக்கும் ஒரு முதன்மையான நோக்கம் உள்ளது. அது எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரை இறக்குவதே ஆகும். செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆரம்ப கால சோதனைகள் ஏற்கனவே நடைபெற்ற வண்ணம் உள்ளன. இருந்தாலும் கூட, நம் அருகில் உள்ள அண்டை கிரகத்திற்கு மக்களை அனுப்பும் இந்த யோசனையின் மீது அனைவருக்கும் சம்மதம் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பில் ஆண்டர்ஸ்

பில் ஆண்டர்ஸ்

பிபிசி உடனான ஒரு நேர்காணலில், முன்னாள் நாசா விண்வெளி வீரர் ஆன பில் ஆண்டர்ஸ் (1968 ஆம் ஆண்டில் அப்பல்லோ 8 மிஷனில் பங்கு பெற்றவர்) செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை - "முற்றிலும் அபத்தமான ஒன்று" என்று விமர்சித்து உள்ளார். சந்திர கிரகத்தின் சுற்றுப்பாதையில் சுமார் 20 மணி நேரம் செலவழித்தவர்களுள் இவரும் ஒருவர் ஆவார். அந்த காலகட்டத்தில், பூமியில் இருந்து மிகத்தொலைவான தூரத்திற்கு சென்ற மனிதர்களை, அப்பல்லோ 8 குழு கொண்டிருந்தது. இந்த எல்லை தொட்ட, அடுத்த ஏழு மாதங்களுக்குப் பிறகு அப்பல்லோ 11 விண்கலம் ஆனது வரலாற்று சிறப்பு மிக்க நிலவின் மீதான தரை இறக்கத்தை நிகழ்த்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட அபத்தமானது

கிட்டத்தட்ட அபத்தமானது

நிலவிற்கு பாதை போட்டுக்கொடுத்த ஆண்ட்ர்ஸிற்கு தற்போது 85 வயதாகிறது. அவர், "செவ்வாய்க்கு மக்களை அனுப்புவதற்கு மிகவும் குறைவான காரணங்களே இருக்கிறது" என்று விமர்சித்து உள்ளார். குறிப்பாக ஏராளமான விண்வெளி ஆய்வுகள் ஆனது, சிறப்பான பட்ஜெட்டில், மனிதர்களின் உதவிகள் இல்லாமலேயே நடக்கும் இந்த காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மனிதர்களை அனுப்புவது என்பது முட்டாள் தனம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தின் ஒரு "பெரிய ஆதரவாளர்கள்" தான், இருந்தாலும் அங்குமனிதர்களை அனுப்புவது என்பது "கிட்டத்தட்ட அபத்தமானது" என்று தெளிவு படுத்தி உள்ளார்.

மக்களுக்கு செவ்வாய் மீது ஆர்வம்

மக்களுக்கு செவ்வாய் மீது ஆர்வம்

"செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான கட்டாயம் என்ன? செவ்வாயை நோக்கி நாம் ஏன் இவ்வளவு வேகமாக பணியேற்றுகிறோம்? போன்ற கேள்விகளை தொடுத்த பில் ஆண்டர்ஸ் , "பொது மக்களுக்கு செவ்வாய் மீது ஆர்வம் இருப்பதாக நான் நினைக்கவில்லை." என்றும் கூறி உள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நோக்கத்தின் கீழ் வேலை செய்து வரும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களை விமர்சித்ததோடு சேர்த்து, முன்னாள் விண்வெளி வீரரான பில், நாசாவின் தற்போதைய நிலை விவகாரங்களைப் பற்றியா சில பொதுவான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"நாசாவினால் இன்று சந்திரனை அடைய முடியவில்லை...

அவர்கள் மிகவும் உயர்மட்டத்தில் இருக்கிறார்கள்," என்று பில் ஆண்டர்ஸ பிபிசியிடம் கூறி உள்ளார். "நாசாவின் வேலைகள் ஆனது வேலைத்திட்டங்களாக மாறிவிட்டது...நாசாவின் பல மையங்கள் மிகவும் பிஸியாகவே இருக்கின்றன. தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தை பெறுவதை தவிர வேறு எந்த விதமான பொதுமக்களின் ஆதரவையும் பெறுவதாய் தெரியவில்லை..." என்றும் கூறியுள்ளார்.

மறுகையில் வேலொயான அறிக்கைகளின் படி,

மறுகையில் வேலொயான அறிக்கைகளின் படி,

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆனது, பல வருடங்களாக இறுக்கமான வரவு செலவுத் திட்டத்துடன் போராடி வருகிறது, அதன் புதிய மற்றும் அற்புதமான விண்வெளி பணிக்கான நிதியுதவிகள் சில வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில், நாசா, ஐரோப்பிய மற்றும் சீன விண்வெளி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவைகள் தீயாக வேலை செய்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Former Apollo 8 Astronaut Bill Anders Thinks NASA's Mars Mission With Humans Is A 'Stupid' Idea: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X