சாவு பயத்த காமிச்சாட்டாங்க பரமா! 47 நிமிடங்கள் மரண பீதியில் உறைந்த NASA.. என்ன நடந்தது? எப்படி தப்பித்தது?

|

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, "எனக்கு சாவு பயத்த காமிச்சாட்டாங்க பரமா" என்று கதறாத குறையாக.. சுமார் 47 நிமிடங்களுக்கு ஒரு "திகிலான" சம்பவம் நடந்துள்ளது!

அதென்ன சம்பவம்? NASA-வே திகிலடையும்படி அப்படி என்ன நடந்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஜவ்வு போல இழுத்தடித்த கனவு திட்டம்!

ஜவ்வு போல இழுத்தடித்த கனவு திட்டம்!

உங்களில் சிலருக்கு நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1 மிஷனை (Artemis 1 Mission) பற்றிய அறிமுகம் தேவைப்படாமல் இருக்கலாம். அறியாதோர்களுக்கு, ஆர்ட்டெமிஸ்-1 என்பது நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் மிகப்பெரிய விண்வெளி லட்சியங்களில் ஒன்றாகும்!

பல வகையான தடங்கல்களுக்கு பின்னரே, ஆர்ட்டெமிஸ்-1 ஆனது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதாவது , விண்ணில் ஏவப்படுவதற்கு முன் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏற்பட்ட சிக்கல்களால் இது தொடர்ச்சியான தாமதங்களுக்கு உள்ளானது!

விண்வெளியில் தெரிந்த திட்டுத்திட்டான மேகங்கள்.. அதற்கு பின்னால் என்ன இருந்தது? NASA சொல்லும் பதில்!விண்வெளியில் தெரிந்த திட்டுத்திட்டான மேகங்கள்.. அதற்கு பின்னால் என்ன இருந்தது? NASA சொல்லும் பதில்!

கீழே கிளப்பிய பீதி போதாதென்று!

கீழே கிளப்பிய பீதி போதாதென்று!

ஆகஸ்ட் 29, 2022 அன்று திட்டமிடப்பட்ட ஏவுதல் ஆனது எஞ்சினின் தவறான வெப்பநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் செப்டம்பர் 3, 2022 அன்று திட்டமிடப்பட்ட ஏவுதல் ஆனது எரிபொருள் கசிவின் விளைவாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் மோசமான வானிலைகள் காரணமாகவும் ஆர்ட்டெமிஸ்-1 மிஷன் ஆனது தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டது!

இப்படி கீழே இருக்கும் போது (அதாவது பூமியில் இருக்கும் போது தான்) பல வகையான சிக்கல்களை கொடுத்த ஆர்ட்டெமிஸ்-1 மிஷன் ஆனது தற்போது மேலே சென்ற பின்னரும் கூட (அதாவது விண்வெளியில் செலுத்தப்பட்ட பின்பும் கூட) நாசாவின் ஆராய்ச்சியாளர்களின் மத்தியில் மரண பீதி ஒன்றை கிளப்பி உள்ளது!

அங்கே இருந்து ஒன்னும் வரல.. இங்கே இருந்தும் ஒன்னும் போகல!

அங்கே இருந்து ஒன்னும் வரல.. இங்கே இருந்தும் ஒன்னும் போகல!

கடந்த புதன்கிழமை, அதாவது நவம்பர் 23 ஆம் தேதியன்று ஆர்ட்டெமிஸ் 1 மிஷன் வழியாக செலுத்தப்பட்டு, சந்திர கிரகத்தின் சுற்றுப்பாதையில் உள்ள ஓரியன் விண்கலமானது (Orion Spacecraft) நாசா உடனான தொடர்பை திடீரென்று இழந்து உள்ளது.

நாசா வழியாக ஓரியன் விண்கலத்திற்கு செல்லும் சமிக்ஞை (Signal) மற்றும் ஓரியன் விண்கலம் வழியாக நாசாவிற்கு வரும் சமிக்ஞை என இரண்டுமே தடைபட்டு போனதால், ஓரியன் மற்றும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்கிற்கு (Deep Space Network) இடையேயான தொடர்பை ஒரே இரவில் மறுகட்டமைக்க வேண்டிய கட்டாயம் நாசாவிற்கு ஏற்பட்டது.

நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!

47 நிமிடங்களுக்கு.. திக் திக்!

47 நிமிடங்களுக்கு.. திக் திக்!

நாசா மற்றும் ஓரியனுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டதுமே, விரைவான நடவடிக்கைகளை எடுத்த நாசா பொறியாளர்கள், ஓரியன் உடனான தொடர்பை மீண்டும் நிறுவி (Re-establish), கிரவுண்ட் சைடில் (Ground side) நிகழ்த்திய மறுசீரமைப்பின் மூலம் இந்த சிக்கலை சரி செய்துள்ளனர்!

ஆனாலும் கூட இதை சரி செய்ய அவர்களுக்கு 47 நிமிடங்கள் ஆகியுள்ளது. அதாவது, ஓரியன் விண்கலம் ஆனது சுமார் 47 நிமிடங்கள் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் விண்வெளியில் "மிதந்துள்ளது" என்று அர்த்தம்!

2025 வரை வேறு வழியே இல்லை!

2025 வரை வேறு வழியே இல்லை!

மனிதர்களை நிலவிற்கு கொண்டு செல்லும் நோக்கத்தின் கீழ் அனுப்பப்பட்டு இருந்தாலும் கூட ஓரியன் விண்கலத்தில் தற்போது மனிதர்களும் இல்லை; நிலவில் தரை இறங்க உதவும் மூன் லேன்டரும் (Moon Lander) இல்லை.

ஆகையால் வருகிற 2025 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் (SpaceX's Starship) மூலம் நாசா தனது விண்வெளி வீரர்களை சந்திரனில் தரையிறக்க முயற்சிக்கும் வரையிலாக ஓரியன் விண்கலமானது நிலவை சுற்றிய விண்வெளி பயணத்திலேயே தான் இருக்கும்; பின்னர் விண்வெளியில் இருந்தபடியே விண்வெளி வீரர்களுக்கான ஒரு பாலமாக செய்லபடும்!

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

ஆர்ட்டெமிஸ் 2-வில் மனிதர்கள் அனுப்பப்படுவார்களா?

ஆர்ட்டெமிஸ் 2-வில் மனிதர்கள் அனுப்பப்படுவார்களா?

ஆர்ட்டெமிஸ் 2 மிஷன் ஆனது, 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மனிதர்களை, சந்திரனை சுற்றி வர வைப்பதை நோக்கமாக கொண்ட ஒரு ஸ்பேஸ் மிஷன் ஆகும்!

அதாவது, இது மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ஆனால் நிலவில் தரை இறக்காது; மாறாக அவர்கள், நாசாவிற்கு தேவையான தரவுகளை / தகவல்களை சேகரித்து சந்திரனின் மேற்பரப்புக்கு மனிதர்களை அனுப்ப ஆர்ட்டெமிஸ் மிஷன் எவ்வளவு தயாராக உள்ளது என்பதை மதிப்பிடுவார்கள்.

2025 ஆம் ஆண்டில் தான்

2025 ஆம் ஆண்டில் தான் "அது" நடக்கும்!

ஆர்ட்டெமிஸ் 1 மற்றும் ஆர்ட்டெமிஸ் 2-ஐ தொடர்ந்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அதன் ஆர்ட்டெமிஸ் 3-ஐ (Artemis 3) விண்ணில் செலுத்தும். அது தான் 2025 ஆம் ஆண்டில் மனிதர்களை சந்திரனில் தரை இறங்குவதை நோக்கமாக கொண்ட நாசாவின் கனவு திட்டமாக இருக்கும்!

எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்ஷிப்பை (StarShip) பயன்படுத்தியே நாசாவின் விண்வெளி வீரர்கள் நிலவில் தரை இறங்குவார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

ஸ்டார்ஷிப் என்றால் என்ன?

ஸ்டார்ஷிப் என்றால் என்ன?

ஸ்டார்ஷிப் (Starship) என்பது அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸால் உருவாக்கப்படும் - முழுவதுமாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய (fully-reusable), சூப்பர் ஹெவி-லிஃப்ட் லான்ச் வெஹிக்கல் (super-heavy-lift launch vehicle) ஆகும்.

இதன் உருவாக்கம் வெற்றியடையும் பட்சத்தில், ஸ்டார்ஷிப் தான் இதுவரை கட்டப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆக இருக்கும், மேலும் முழுவதுமாக மீண்டும் பயன்படுத்தப்படக் கூடிய முதல் ராக்கெட் ஆகவும் இருக்கும்!

இந்தியாவின் ISRO-விற்கு இதுபோன்ற யோசனை ஏதேனும் உள்ளதா?

இந்தியாவின் ISRO-விற்கு இதுபோன்ற யோசனை ஏதேனும் உள்ளதா?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் எந்த திட்டமும் (தற்போது வரை) இல்லை. மாறாக, சந்திரயான் 1-ஐ தொடர்ந்து சந்திரயான் 2-ஐ அனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரோவின் கூற்றுப்படி சந்திரயான்-2 மிஷன் (Chandrayaan 2 Mission) ஆனது மிகவும் சிக்கலான ஒரு விண்வெளி பணியாக இருக்கும். ஏனென்றால் இது - நிலவின் ஆராயப்படாத தென் துருவத்தை ஆராய உள்ளது. அதற்காக சந்திரயான்-2 வழியாக ஒரு ஆர்பிட்டர், ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது!

Photo Courtesy: NASA

Best Mobiles in India

English summary
For 47 minutes America biggest Moon Mission Artemis 1 Orion Spacecraft lost contact with NASA

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X