டைட்டன் நிலவில் வெள்ள பள்ளத்தாக்குகள் - நாசா..!
சனி கிரகத்தின் நிலவான டைட்டனில் (Titan) நூற்றுக்கணக்கான மீட்டர்கள் ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதாவது டைட்டனில் திரவ ஹைட்ரோகார்பன்கள் வெள்ளம் (liquid hydrocarbons) நிகழ்ந்துள்ளது என்பதை நாசாவின் காசினி விண்கலம் (Cassini spacecraft) மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு மூலம் டைட்டனில் திரவம் நிரப்பப்பட்ட கால்வாய்கள் முதல் முறையாக உறுதி செய்யப்பட்டு ஆதாரமாக பிரதிபலிக்கிறது. அதே போல் சனி கோள் நிலவின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகள் முதல் முறையாக கவனிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதத்தில் டைட்டன் விண்கலம் டைட்டன் நிலவை மிக அருகில் நெருங்கிய போது பெறப்பட்ட காசினி தரவு பகுப்பாய்வில் இருந்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தபட்டுள்ளது. அந்த நெருக்கமான பயணத்தின் போது, காசினி தனது ரேடார் கருவி மூலம் பெரிய அளவிலான கால்வாய்களை கண்டறிந்துள்ளது.

கண்டறியப்பட்ட குறுகிய பள்ளத்தாக்குகள் பொதுவாக பரந்த ஒரு கிலோமீட்டருக்கும் குறைவாக, 40 டிகிரி செங்குத்தான சரிவுகளில் உள்ளன. மற்றும் 240 - 570 மீட்டர்கள் வரையிலாக மிகவும் ஆழம் கொண்டவைகளாக அளவிடப்பட்டுள்ளது. உடன் கிளை கால்வாய்களில் டைட்டனின் அதிகப்படியான மீத்தேன் வளம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்கச் :
இப்படி பண்ணினா என்ன..? - நாசாவின் "அடேங்கப்பா" யோசனை..!!
நூல் இழையில் மிஸ் ஆன அமெரிக்க - சோவியத் பேரழிவு..!
கண்டுபிடிக்கப்பட்டது : மூளையின் 'இயற்பியல் இயந்திரம்'..!


Click it and Unblock the Notifications