கடலிலும் காய்கறி சாகுபடி செய்யலாம்: இதோ நீருபித்துக் காட்டிய மாணவி.!
மேலும் கடல் நீரில் விடப்படும் மிதவைகளில் கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யலாம் என்று கூறியதோடு அதை நீருபித்துக் காட்டியுள்ளார்.
இப்போது வரும் புதிய தொழில்நுட்பம் பல்வேறு வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும், குறிப்பாக மக்கள் தொகை அதிகரித்து விட்டதால், விவசாய நிலங்களும் அதிகமாக குறைந்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.

மேலும் விவசாயம் சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய இயந்திரங்கள் சமீபத்தில் அதிகமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தபோதிலும் சில நாடுகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் குறைந்து விட்டது, பின்பு பல்வேறு இயற்கை சீற்றங்களும் அதிகரித்து வருகிறது.

மரத்தை வெட்டுதல்
நகர் மயமாதலின் போக்கு அதிகரிப்பு, மேம்பாட்டுப் பணிகளுக்காக மரத்தை வெட்டுதல் ஆகிய காரணங்களால் மரங்களின் பசுமை ஸ்பரிசம் குறைந்து வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாணவி:
தற்சமயம் வெப்ப மயமாதலால், கடலின் நீரின் மட்டம் மிகவும உயர்ந்து வருகிறது, இவை இரண்டிற்கும் தீர்வு காணும் முயற்சியாக, மிதக்கும் பண்ணை என்ற விவசாய முறையை ஒரு மாணவி கண்டறிந்துள்ளார்.

கீரைகள்
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற SUSSEX பல்கலைக் கழக மாணவி, LEILAH CLARKE என்பவர் தான் இதனை உருவாக்கியுள்ளார். மேலும் கடல் நீரில் விடப்படும் மிதவைகளில் கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யலாம் என்று கூறியதோடு அதை நீருபித்துக் காட்டியுள்ளார்.

சாகுபடி திட்டத்திற்கு நிதி
மேலும் அந்த மாணவி கூறியது என்னவென்றால் இந்த காய்கறி சாகுபடி திட்டத்திற்கு நிதி கிடைத்தால், அதிகமான பலன்களைப் பெறலாம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications