அமெரிக்க விமானத்தை பின்தொடர்ந்த ஏலியன் விமானப்படை!

விமானிகள் நடுவானில் இருந்த போது விமானத்தின் கேமராக்கள் மற்றும் ரேடார் மூலம் 30,000 அடி (9,144 மீட்டர்) உயரத்தில் மர்மமான பொருட்கள் சாத்தியமற்ற வேகத்தில் பறப்பதை கண்டுபிடித்தனர்.

|

2014 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு இடையில், அமெரிக்க கடற்படையில் உள்ள பருவகால விமானிகள், அமெரிக்காவில் பயிற்சியின் போது சில பயமுறுத்தும் மர்ம பறக்கும் பொருட்களை எதிர்கொள்ளும் அனுபவத்தை பெற்றனர். விமானிகள் நடுவானில் இருந்த போது விமானத்தின் கேமராக்கள் மற்றும் ரேடார் மூலம் 30,000 அடி (9,144 மீட்டர்) உயரத்தில் மர்மமான பொருட்கள் சாத்தியமற்ற வேகத்தில் பறப்பதை கண்டுபிடித்தனர், இந்த மர்மமான யுஎஃப்ஒக்கள்(மர்ம பறக்கும் பொருட்கள்) முரண்பாடாக கண்ணுக்கு புலப்படாத வகையில் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் மே 26 அன்று வெளியிட்டது.

மர்ம யுஎஃப்ஒக்கள்

மர்ம யுஎஃப்ஒக்கள்

இருப்பினும் எந்தவொரு விமானியும் இந்த மர்ம யுஎஃப்ஒக்கள் ஒரு வேற்று கிரகத்தை படையெடுப்பு என கூறவில்லை என்று 2004 ஆம் ஆண்டில் ஏலியன் விண்கலங்களை எதிர்கொண்ட கடற்படை விமானிகளைப் பற்றி எழுதிய தி டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கேரியரான யு.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட்

கேரியரான யு.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட்

2014 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலத்தில் விமானம் கேரியரான யு.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட்-ல் பணியாற்றிய அனைத்து 6 விமானிகளும், அமெரிக்காவின். தென்கிழக்கு கடற்கரையில் வர்ஜீனியாவிலிருந்து புளோரிடா வரை விரிவடைந்துள்ள பகுதியில் விமானத்தில் செல்லும் போது மர்ம பறக்கும் பொருட்களை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

"அன்-ஐடென்டிபைடு

அந்த விமானிகளில் இரண்டு பேர், புதிய வரலாற்று சேனலில் மே 31 முதல் ஒளிபரப்பாகும் ஆவணப்பட தொடரான "அன்-ஐடென்டிபைடு: அமெரிக்காவின் யூஎப்ஓ விசாரணை" ல், மர்ம பறக்கும் பொருட்களை எதிர்கொண்ட தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.

 குமிழ் போல மர்ம ஏலியன் விண்கலங்கள்

குமிழ் போல மர்ம ஏலியன் விண்கலங்கள்

இந்த தொடரில் இரண்டு வான்வழி சந்திப்புகள் தொடர்பான வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது.இதில் ஒரு சிறு வெள்ளை நிற புள்ளி மற்றும் ஒரு பெரிய இருண்ட குமிழ் போல மர்ம ஏலியன் விண்கலங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. இந்த யுஎஃப்ஒக்கள் முறையே "கோ பாஸ்ட்" மற்றும் "கிம்பால்" என்று பின்னர் அறியப்பட்டது.

தனித்துவமான இறக்கைகள்

தனித்துவமான இறக்கைகள்

அந்த விண்கலன்கள் "எந்த தனித்துவமான இறக்கைகள், தனித்துவமான வால், எந்த தனித்துவமான வளைவு ப்ளூம்" கொண்டிருக்கவில்லை என 2014 ஆம் ஆண்டு முதல் யுஎஃப்ஒ பற்றி கூறும் கடற்படை விமானிகளில் ஒருவரான டேனி அக்காய்ன் கூறியுள்ளார்.

எச்சரிக்கை என நினைக்கலாம்

எச்சரிக்கை என நினைக்கலாம்

"நாம் இருப்பது அவர்களுக்கு தெரிந்திருப்பதால் தான் அவை நம்மைச் சுற்றி தொடர்ந்து பயணித்து வருகின்றன" என்கிறார் டேனி. மேலும் அவர் கூறுகையில், " ஒரு வித்தியாசமான ரீடிங்கை முதல் முறையாக ராடார் காண்பிக்கும் நிகழ்வை தவறான எச்சரிக்கை என நினைக்கலாம். ஆனால் பல்வேறு சென்சார் ரீடிங்களை ஒரே மாதிரியாக பெற ஆரம்பிக்கும் போது நிச்சயம் அதில் ஏதேனும் ஒரு விசித்திரமான நிகழ்வு இருக்கும்"என்கிறார்.

ரேடார் மற்றும் இன்ப்ராரெட் கேமராக்கள்

ரேடார் மற்றும் இன்ப்ராரெட் கேமராக்கள்

சில நாட்கள் இடைவெளியில் அவர் இருமுறை ஏலியன் விண்கலன்களை எதிர்கொண்டுள்ளார். அவரது விமானத்தில் உள்ள கண்காணிப்பு சாதனங்கள், ரேடார் மற்றும் இன்ப்ராரெட் கேமராக்கள் இருமுறையும் அந்த ஏலியன் விண்கலங்களை கண்டறிந்த போதிலும், அவற்றை அவரது ஹெல்மெட் கேமராவில் படம்பிடிக்க முடியவில்லை.

வழிமுறைகள்

வழிமுறைகள்

யுஎப்ஓகளை கண்ட விமானிகள் தங்களுக்குள் யூகித்துக்கொண்டு அந்த மர்ம பறக்கும் பொருட்கள் நமக்கு தெரியாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இரகசிய ட்ரோன் திட்டத்தை சேர்ந்தவை என்றும், அவர்கள் அவற்றை வேற்றுகிரகத்தை சேர்ந்தவை என கருதவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


2015ல் இந்த மர்ம பறக்கும் பொருட்கள் தென்படுவது அதிகரித்துக்கொண்டே இருந்ததால், அமெரிக்க கடற்படை தனது அதிகாரிகளுக்கு இந்த ஏலியன் விண்கலன்கள் தென்படும்போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் கூறு விதிமுறைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Fleet of UFOs' Followed US Aircraft, Navy Pilot Says : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X