உங்கள் AC-க்கான கரண்ட் பில் கம்மியாக வர வேண்டுமா? அப்போ இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

|

ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் ஆரம்பித்தவுடன், இந்த ஆண்டு கோடை வெப்பம் நம்மை எப்படி வாட்டி எடுக்கப் போகிறதோ என்று பலரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியிருக்கும். கோடைக் காலம் வருவதற்கு முன்பே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் ஏர் கூலர், ஏசி, கூலர் பேன் மற்றும் டேபிள் பேன் போன்ற சாதனங்களுக்குத் தள்ளுபடியை அறிவிக்கத் துவங்கிவிடும். இதனால் பலரும் புதிதாகக் குளிரூட்டும் சாதனங்களை வாங்கிட நினைப்பார்கள், குறிப்பாக ஏசி வாங்குவதற்கு முன்பு சில முக்கிய விஷயங்களைக் கவனித்து நீங்கள் புது ஏசி வாங்கினால், உங்களின் கரண்ட் பில் எப்படி கம்மியாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

AC பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

AC பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வெப்பத்தின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே போகும் இந்த காலகட்டத்தில், வீட்டுக்குத் தேவையான குளிரூட்டும் சாதனங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும், குளிரூட்டும் சாதனங்களின் தயாரிப்பும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, கோடைக்காலத்தில் மட்டும், டெல்லியில் இருக்கும் ஒரு மின் மயமாக்கப்பட்ட வீடு மாதத்திற்குச் சராசரியாக 250 முதல் 270 யூனிட் அல்லது கிலோவாட் மின்சாரம் வரை பயன்படுத்துகிறது என்று லாயிட் தலைமை நிர்வாக அதிகாரி சஷி அரோரா தெரிவித்திருக்கிறார்.

சரியான ஏர் கண்டிஷனரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

சரியான ஏர் கண்டிஷனரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மார்ச் மற்றும் மே மாதங்களில் இயல்பாகவே இந்தியா அதிகபட்ச வெப்பநிலையைக் காண்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் கூறியது. இதனால் ஏர் கண்டிஷனர்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று இது அறிவுறுத்துகிறது. ஏசி வாங்கிய பின்னர் நீங்கள் மின்சாரத்தைத் திறமையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த விரும்பினால், முதலில் நீங்கள் உங்களுக்கான சரியான ஏர் கண்டிஷனரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை நீங்கள் சரியாகச் செய்தால், உங்கள் மாதாந்திர மின்சார கட்டணங்களை நீங்கள் கணிசமாகக் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

புதுமையான அம்சங்களைக் கொண்ட ஏர் கண்டிஷனர்கள் வாங்குவது முக்கியமா?

புதுமையான அம்சங்களைக் கொண்ட ஏர் கண்டிஷனர்கள் வாங்குவது முக்கியமா?

இந்திய குடியிருப்பு ஏசி சந்தை ஆண்டுக்கு 7 முதல் 7.5 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இப்போது பலரும் வீட்டிலிருந்து தான் வேலை செய்கிறார்கள், அதிக நேரத்தை வீட்டிலேயே செலவிடுவதால், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் தங்கள் வாழ்க்கையைச் சிறப்பாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை இப்போது மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால், இந்த ஆண்டு இன்னும் அதிகப்படியான ஏசி யூனிட்கள் விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்வெர்ட்டர் ஏசி நல்லதா? இல்லை நார்மல் on /off ஏசி நல்லதா?

இன்வெர்ட்டர் ஏசி நல்லதா? இல்லை நார்மல் on /off ஏசி நல்லதா?

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காரணமாக, இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏசிகள் இப்போது சந்தையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இது உங்கள் அறையின் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுகின்றது. அதே நேரத்தில் இவை வெளிப்புற வெப்பக் காற்றிலிருந்து அறையின் தனிமைப்படுத்தலைப் பொறுத்துக் குறைந்த சக்தியைப் பயன்படுத்துகின்றது. மோட்டார் வேகம் மற்றும் கம்ப்ரெஸ்ஸரை கட்டுப்படுத்துவதன் மூலம் ஏர் கண்டிஷனர்களின் தேவையற்ற செயல்பாடுகளை இது அகற்ற உதவுகிறது. இதனால் மின்சாரம் மிச்சம்பிடிக்கிறது. நார்மல் on /off ஏசி உங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப மின்சாரத்தை பயன்படுத்துகிறது.

அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: யாருக்கெல்லாம் இ-பாஸ் கிடைக்கும்., விண்ணப்பிப்பது எப்படி?அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: யாருக்கெல்லாம் இ-பாஸ் கிடைக்கும்., விண்ணப்பிப்பது எப்படி?

அதிக ஸ்டார் மதிப்பீட்டுடன் இருக்கும் ஏசி தான் சிறந்ததா? இது மின்சார கட்டணத்தைக் குறைக்குமா?

அதிக ஸ்டார் மதிப்பீட்டுடன் இருக்கும் ஏசி தான் சிறந்ததா? இது மின்சார கட்டணத்தைக் குறைக்குமா?

ஏறக்குறைய ஒவ்வொரு பிராண்டட் ஏர் கண்டிஷனரும் 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரை ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. வழக்கமான ஏசிகள் அல்லது உள்நாட்டில் கூடியிருக்கும் ஏ.சி.க்களுடன் ஒப்பிடும்போது, அதிக ஸ்டார் மதிப்பீடுகளைக் கொண்ட ஏர் கண்டிஷனர்கள் குறைந்த சக்தியைப் பயன்படுத்துகின்றது என்பதே உண்மை. இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வரும் ஏசி வழக்கமான ஏர் கண்டிஷனரை விட 30 முதல் 35 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய மாடலுடன் செல்வது எப்போதும் நல்லது

புதிய மாடலுடன் செல்வது எப்போதும் நல்லது

மின் நுகர்வு சேமிப்பதைத் தவிர, இன்வெர்ட்டர் ஏ.சிக்கள் கம்ப்ரெஸ்ஸரின் வேகத்துடன் ஒத்திசைக்குப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுகின்றது. இதனால் உங்களுக்கு மின்சார செலவு குறைக்கப்படுகிறது. நீங்கள் வாங்கும் ஏசியின் சிறந்த நீண்ட ஆயுளுக்கு அதிக ஸ்டார் மதிப்பீடு பெற்ற ஏசியை தேர்வு செய்யுங்கள். அதேபோல், சமீபத்திய தொழில்நுட்பத்துடன் வெளிவரும் புதிய மாடல்களை செலக்ட் செய்ய தயக்கம் கொள்ளாதீர்கள். எப்போதும் நீங்கள் புதிய மாடலுடன் செல்வது, உங்களுக்கு இன்னும் அதிகப்படியான நன்மை வழங்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்

ஏசி வாங்கிய பின்னர் 24 ° C வெப்பநிலையை வைத்திருப்பது மின்சாரத்தை மிச்சப்படுத்துமா?

ஏசி வாங்கிய பின்னர் 24 ° C வெப்பநிலையை வைத்திருப்பது மின்சாரத்தை மிச்சப்படுத்துமா?

கம்ப்ரெஸ்ஸரின் செயல்பாடு, வெப்பநிலை பராமரிப்பு மற்றும் ஏசியின் ஆற்றல் நுகர்வு ஆகியவற்றைக் குறைப்பதற்கு நீங்கள் பெரும்பாலும் உங்களின் ஏசி வெப்பநிலையை 24 ° C ஆக வைத்திருப்பது மிகவும் நல்லது. நீங்கள் உங்கள் ஏசியை 24 ° C வெப்பநிலையில் பயன்படுத்தும் போது, உங்கள் அறையில் உள்ள வெப்பம் நீக்கப்படும். ஆனால், சில் என்ற சூப்பர் கூலிங் அனுபவம் உங்களுக்குக் கிடைக்காது. ஆனால், குளிரான சூழலை வெப்பம் இல்லாமல் நீங்கள் ஆனந்தமாக அனுபவிக்க முடியும். இது உங்களின் மின்சார பயன்பாட்டை குறைக்க உதவும்.

ஏசியை வைப்பதற்கான சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம்

ஏசியை வைப்பதற்கான சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம்

ஏ.சி.யை வாங்குவதற்கு முன், மின் நுகர்வு குறைக்க இது மேலும் உதவுவதால் அதன் பொருத்தத்தைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம். உங்களின் அறை அளவிற்கு ஏற்ற ஏசியை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் இருக்கும் இருப்பிடத்திற்கு ஏற்ப சரியான ஏ.சி.யை வாங்குவது ஏசியின் செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். வெறுமனே, 150 சதுர அடி அறைக்கு 1.50 டன் திறன் கொண்ட ஏர் கண்டிஷனர் தேவை, அந்த அறை சூரிய ஒளியால் நேரடியாகத் தாக்கப்படவில்லை அல்லது மேலே மாடிகளைக் கொண்டிருக்கவில்லை என்றால் கூட இது போதுமானது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வது சேவை செலவைக் குறைக்கிறது

சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வது சேவை செலவைக் குறைக்கிறது

ஒரு ஏர் கண்டிஷனரில் 3000க்கும் மேற்பட்ட பாகங்கள் உள்ளன, எனவே, சரியான நேரத்தில் அதைத் தொடர்ந்து சர்வீஸ் செய்து பராமரிப்பது மிக முக்கியமானது. இதனால், நுகர்வோர் விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கும் பிராண்டுகளை நீங்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும். இயந்திரத்தின் தடையற்ற செயல்பாட்டிற்கான வழக்கமான சோதனை மிக முக்கியமானது. ஏ.சி.யின் நீண்ட ஆயுளை அதிகரிக்க ஏர் பில்டர்களை 7-15 நாட்கள் இடைவெளியில் சுத்தம் செய்வதற்கும், கழுவவும் பரிந்துரைக்கப்படுகிறது. இதை எல்லாம் சரியாகச் செய்து வந்தால் நிச்சயம் உங்களின் கரண்ட் பில் இல் மாற்றத்தை நீங்கள் பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
Five ways to lower electricity bill when youre using air conditioner at home : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X