நிலவை ஜூம் செய்து பார்த்தால்.. புழுக்கள் நடமாடியது போன்ற வழித்தடங்கள்! என்னது அது?

|

உங்களில் எத்தனை பேருக்கு.. நாம் வாழும் பூமி கிரகத்திற்கும், தினமும் நாம் பார்த்து ரசிக்கும் சந்திர கிரகத்திற்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு என்று தெரியும்?

பார்க்க பக்கத்தில் இருப்பது போல தோன்றும் நிலவு, நம்மிடம் இருந்து 384,400 கிமீ தூரத்தில் உள்ளது என்று கூறினால், டக்கென்று நம்பும்படியாக இருக்காது; ஆனால் அதுதான் உண்மை!

அதுமட்டுமல்ல!

அதுமட்டுமல்ல!

சந்திர கிரகத்தின் தூரம் மட்டுமல்ல, அது தொடர்பான பல விஷயங்கள் நம்மையும், நம் கண்களையும் குழப்பும்படி உள்ளன!

எடுத்துக்காட்டிற்கு, பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும் சந்திரனும் ஒரே அளவில் இருப்பது போல் தோன்றும் ஆனால், சந்திரன் சூரியனை விட மிக மிக சிறியது. இந்த "மாயைக்கு" காரணம் தூரமே ஆகும்!

மங்கள்யான் மர்மம்: திடீர்னு எப்படி பேட்டரி காலி ஆகும்? மறைக்கப்படும் உண்மை?மங்கள்யான் மர்மம்: திடீர்னு எப்படி பேட்டரி காலி ஆகும்? மறைக்கப்படும் உண்மை?

நிலவின் முதுகு!

நிலவின் முதுகு!

நிலவின் முதுகையும் (அதாவது பின் பக்கத்தையும்) நம்மால் பார்க்கவே முடியாது.

அதாவது பூமியிலிருந்து, நாம் எப்போதும் சந்திரனின் ஒரே பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும். அந்த பக்கம் 'நியர் சைட்' (Near side) என்று அழைக்கப்படுகிறது.

பூமியிலிருந்து சந்திரனின் மறுபக்கத்தை அதாவது ஃபார் சைட்-ஐ (Far Side) நாம் ஒருபோதும் பார்க்க முடியாது!

இப்படி நிலவு தொடர்பான ஆச்சரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!

வெறும் 384,400 கிமீ இப்படி குழப்புகிறது என்றால்.. 594.36 மில்லியன் கிமீ?

வெறும் 384,400 கிமீ இப்படி குழப்புகிறது என்றால்.. 594.36 மில்லியன் கிமீ?

பூமியின் "இயற்கையான செயற்கைகோள்" (நேச்சுரல் சாட்டிலைட்) என்று அழைக்கப்படும்; பூமிக்கு அருகில் இருக்கும் நமக்கான சந்திர கிரகமே இவ்வளவு ஆச்சரியங்களால் நிறைந்துள்ளது என்றால்...

பூமியில் இருந்து சுமார் 594.36 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள ஒரு நிலவில் எவ்வளவு ஆச்சரியங்கள் நிறைந்து இருக்கும்? எவ்வளவு ரகசியங்கள் புதைந்து இருக்கும்?

செவ்வாய் கிரகத்தில் செவ்வாய் கிரகத்தில் "சிக்கிய" விசித்திர பொருள்.. காற்றில் பறந்து வந்து மாட்டி கொண்டது!

அதென்ன நிலவு?

அதென்ன நிலவு?

அது யூரோபா (Europa) என்கிற நிலவு ஆகும். இது ஜூப்பிட்டர் கிரகத்தின் பல நிலவுகளில் ஒன்றாகும். அறியதோர்களுக்கு ஜூப்பிட்டர் கிரகத்திற்கு மொத்தம் 79 (உறுதி செய்யப்பட்ட) நிலவுகள் உள்ளன!

அவைகளில் மிகவும் விசித்திரமான நிலவுகளில் ஒன்று தான் - இந்த யூரோபா! எவ்வளவு விசித்திரம் என்று.. அதை ஜூம் செய்து பார்த்த போது தான் தெரிந்தது!

செப்டம்பர் 29, 2022 அன்று..!

செப்டம்பர் 29, 2022 அன்று..!

கடந்த செப்.29 ஆம் தேதியன்று, ஜூப்பிட்டர் கிரகத்தை ஆய்வு செய்யும் நாசாவின் ஜூனோ விண்கலம் ஆனது, யூரோபா நிலவின் ஹை-ரெசல்யூஷன் புகைப்படம் ஒன்று எடுத்தது.

அந்த புகைப்படத்தை எடுக்கும் போது, ஜூனோ விண்கலத்திற்கும், ஜூப்பிட்டர் கிரகத்திற்கும் இடையே இருந்த தூரம் வெறும் - 352 கிலோமீட்டர் மட்டுமே ஆகும்.

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால்..?

அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால்..?

மிகவும் அருகில் இருந்து எடுக்கப்பட்டதால், ஜூனோ பதிவு செய்த யூரோபாவின் புகைப்படம் முன்னெப்போதும் கண்டிராத விரிவான காட்சியை வழங்குகிறது என்றே கூறலாம்!

அந்த புகைப்படத்தின் வழியாக, யூரோபாவில் "அங்குமிங்கும் புழுக்கள் நடமாடியதை போன்ற" நேர்த்தியான கோடுகளின் வலையமைப்பை தெளிவாக காண முடிகிறது.

அதென்ன கோடுகள்?

அதென்ன கோடுகள்?

உண்மையில் அது கோடுகள் அல்ல; அவைகள் க்ரூவ்ஸ் (Grooves) ஆகும். அதாவது நீளமான வரிப்பள்ளங்கள் அல்லது ஆழ்தடங்கள் ஆகும்.

யூரோபாவில் குறுக்கும் நெடுக்குமாய் இருக்கும் அந்த பள்ளங்கள் உருவாக காரணம் - புழுக்களோ அல்லது ஏதோவொரு உயிரினமோ அல்ல!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

அதற்கு காரணம்?

அதற்கு காரணம்?

அந்த பள்ளங்களுக்கு காரணம் - யூரோபாவின் பலவீனமே ஆகும்!

ஆம்! யூரோபா நிலவின் பனி மேலோட்டத்திற்குள் இருக்கும் பலவீனமான கோடுகளை குறிக்கும் விரிசல்கள் மற்றும் முகடுகளே.. புழுக்கள் நடமாடியதை போன்ற வடிவத்தை நமக்கு காட்டுகிறது!

உறுதியாக.. இது இயற்கையாக உருவான கோடுகள் தானா.. அல்லது?

உறுதியாக.. இது இயற்கையாக உருவான கோடுகள் தானா.. அல்லது?

யூரோபாவின் இந்த விசித்திரமான கோடுகளை பார்க்கும் எவருமே.. அங்கே உயிர்கள் வாழும் சாத்தியம் இருப்பதாகவும், அங்கே உயிர் வாழ முடியும் என்றே நினைப்பார்கள்!

விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் கூட அது தொடர்பான தேடலில் தான் உள்ளனர்.

அதாவது ஜூப்பிட்டர் நிலவில் ஏலியன்கள் இருக்கிறதா என்று தேடவில்லை; மாறாக அங்கே உயிர்கள் வாழ சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பதை தேடுகிறார்கள்!

ஏதாவது ஆதாரம் கிடைத்ததா?

ஏதாவது ஆதாரம் கிடைத்ததா?

நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் நிலவுகளிலேயே ஆறாவது பெரிய சந்திரன் - யூரோபா ஆகும். யூரோபாவின் அடர்த்தியான பனிக்கட்டிக்கு கீழே உப்புக் கடல் இருப்பதாக நம்பப்படுகிறது.

அது உண்மையா இல்லையா என்பது 2030 ஆம் ஆண்டில் தெரிந்து விடும். ஏனென்றால், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் யூரோபா க்ளிப்பர் (Europa Clipper) விண்கலமானது 2030 களின் முற்பகுதியில் யூரோபாவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
First Time NASA Juno Spacecraft Captures High Resolution Photo Of Jupiter Moon Europa

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X