இது வெறும் ஆரம்பம் தான்! சீறிப்பாய காத்திருக்கும் விக்ரம்-எஸ்! இது ஏன் ஸ்பெஷல்?

|

இந்தியாவில் முதல்முறையாக ஒரு தனியார் நிறுவனம் ராக்கெட் ஒன்றை விண்ணில் ஏவ உள்ளது. குறிப்பாக இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இதுசார்ந்த தகவலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்

அதாவது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற நிறுவனம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் வணிக ரீதியில் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Mobile வழியாக OTT திரைப்படங்களை பார்ப்பீங்களா? அப்போ Mobile வழியாக OTT திரைப்படங்களை பார்ப்பீங்களா? அப்போ "இதை" தெரிஞ்சுகிட்டா நல்லது!

இஸ்ரோ..

இஸ்ரோ..

தற்போது இந்நிறுவனம் தயாரித்துள்ள விக்ரம்-S எனும் ராக்கெட்டை தான் விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. அதேபோல இந்த ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என அந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Realme 10 லுக்க பார்த்து மயங்கிடாதீங்க.! இதில 1 முக்கியமான அம்சம் மிஸ்ஸிங்.! அது என்ன தெரியுமா?Realme 10 லுக்க பார்த்து மயங்கிடாதீங்க.! இதில 1 முக்கியமான அம்சம் மிஸ்ஸிங்.! அது என்ன தெரியுமா?

 நவம்பர் 16

நவம்பர் 16

மேலும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனத்தின் இந்த முதல் திட்டத்திற்கு 'பிரரம்ப்' (ஆரம்பம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 12-ம் தேதியில் இருந்து நவம்பர் 16-ம் தேதிக்குள் விக்ரம்-S ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை நாளா தெரியாம போச்சே! யாருக்கும் தெரியாமல் WhatsApp இல் இதை செய்யலாமா? இனி குஷிதான்!இத்தனை நாளா தெரியாம போச்சே! யாருக்கும் தெரியாமல் WhatsApp இல் இதை செய்யலாமா? இனி குஷிதான்!

பவன் குமார் சந்தனா

இதுகுறித்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் பவன் குமார் சந்தனா கூறியது என்னவென்றால், நாங்கள் தயாரித்துள்ள இந்த ராக்கெட் வரும் 12 முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். காலநிலையைப் பொறுத்து ஏவப்படும் தேதிஉறுதி செய்யப்படும்.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

முதல் தனியார் நிறுவனம்

முதல் தனியார் நிறுவனம்

வர்த்தகரீதியாக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது ஸ்கைரூட் நிறுவனம், அதற்கான முதல் படி தான் இது என்றார் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. குறிப்பாக இந்தியாவில் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழிந்தது முகமூடி! ஒவ்வொரு Jio, Airtel யூசரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.. போட்டு உடைத்த OOKLA!கிழிந்தது முகமூடி! ஒவ்வொரு Jio, Airtel யூசரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.. போட்டு உடைத்த OOKLA!

விக்ரம்

அதேபோல் இந்த தனியார் நிறுவனம் அனுப்ப இருக்கும் சிங்கிள் ஸ்டோரேஜ் ராக்கெட்டில் 3 வாடிக்கையாளர் பெலோட் (customer payloads) இடம்பெற இருக்கிறது. பின்பு இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாய்க்கு நன்றி தெரிவிக்கும்வகையில் ஸ்கைரூட்டின் இந்த ராக்கெட்டிற்கு விக்ரம் என்று பெயரிட்டுள்ளது அந்நிறுவனம்.

எல்லாரும் சாமிகிட்ட வேண்டிக்கோங்க! ISRO மட்டும் இதை செஞ்சிட்டா.. இனி நாம தான் கெத்து!எல்லாரும் சாமிகிட்ட வேண்டிக்கோங்க! ISRO மட்டும் இதை செஞ்சிட்டா.. இனி நாம தான் கெத்து!

2020-ம் ஆண்டு

கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆய்வு மற்றும் ராக்கெட் ஏவுதலை மேற்கொள்ளலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனது முதல் ராக்கெட்டை விண்வெளிக்கு இஸ்ரோவுடன் துணையுடன் ஏவக் காத்திருக்கிறது தனியார் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம். குறிப்பாக அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது விக்ரம்-S ராக்கெட்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo credit: Skyroot Aerospace, indiatoday.in

Best Mobiles in India

English summary
First time in India A private rocket called Vikram S to launch in between November 12th and 16th: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X