அகுலா-கிளாஸ் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலும் கெத்து காட்டும் இந்திய கடற்படையும்!

|

கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்தியக் கடற்படையின் உயர் மட்டத் தூதுக்குழுவை சேர்ந்த மற்றும் இந்திய கடற்படைத் தளபதி ஆன அட்மிரல் சுனில் லன்பா - இரண்டு அகுலா- 2 கிளாஸ் எஸ்.எஸ்.என்'களை (அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை) பார்வையிட மற்றும் பரிசோதிக்க, பிரிட்டெக் மற்றும் சமாரா என்னும் இரண்டு ரஷ்யா பிரதேசங்களுக்கு விஜயம் செய்து இருந்தார். அதனை தொடர்ந்து இந்தியா-ரஷ்ய கூட்டு தயாரிப்புத் திட்டம் ஒன்றின் கீழ் (இந்திய ராணுவத்திற்கான) ஏகே -203 தாக்குதல் துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான திறப்பு விழாவும் முடிவடைந்தது.

பெருங்கடல்களை ஆளப்போகும் இந்தியா; கைகொடுக்கும் ரஷ்யா; பின்னணி என்ன?

இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான தொடர்ச்சியான ராணுவ பாதுகாப்பு நிகழ்வுகளை தொடர்ந்து தற்போது சுமார் 3.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.அந்த ஒப்பந்தம் ஆனது, ரஷ்யாவிடம் இருந்து அகுலா-கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களை குத்தகைக்கு வாங்கும் ஒரு ஒப்பந்தம் ஆகும். சுவாரசியம் என்னவெனில், இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரவிருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆனது இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ற மாற்றங்களை கொண்டிருக்குமாம்.

அகுலா- 2 நீர்மூழ்கிக் கப்பல்

அகுலா- 2 நீர்மூழ்கிக் கப்பல்

முன்னதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸில் வெளியான தகவலின் படி, அகுலா- 2 நீர்மூழ்கிக் கப்பல் ஆனது இந்திய கடற்படைக்குள் நுழையும் பட்சத்தில், அது ஐ.என்.எஸ் சக்ராவின் இடத்தை ஆக்கிரமிக்கும். ஐ.என்.எஸ் சக்ரா கப்பல் ஆனது கடந்த 2011 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்ட கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக செய்யப்பட்ட செலவு 2.5 பில்லியன் டாலர்கள் ஆகும் என்பதும், அந்த குத்தகை ஆனது வருகிற 2022 ஆம் ஆண்டில் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தளபதி அட்மிரல் சுனில் லன்பா

தளபதி அட்மிரல் சுனில் லன்பா

கடந்த 2018 ஆம் ஆண்டில், கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டதற்கு பின்னர் இரு நாடுகளும், நிகழும் ஒப்பந்தங்களின் விலை மற்றும் அம்சங்களுக்கான பேச்சுவார்த்தைகள் சார்ந்த ஒரு அரசாங்க ஒப்பந்தத்தை கையெழுத்திட்டன.

இந்திய கடற்படை

இந்திய கடற்படை

இந்திய கடற்படையிடம் ஏற்கனவே ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட இரண்டு அகுலா வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியா தனது தாக்குதல் திறனை மட்டுமல்லாமல் இந்திய பெருங்கடலில் தனது இருப்பை விரிவுபடுத்தவும் முடியும். மேலும் இந்த கப்பல் ஆனது நீருக்கடியில் நீண்ட காலத்திற்கு, கண்டறியப்படாமல் நீடிக்கக்கூடிய திறனையும் கொண்டுள்ளது.

 ஐ.என்.எஸ் சக்ரா

ஐ.என்.எஸ் சக்ரா

ஒரு வருடத்திற்கு முன்பு, ஐஎன்எஸ் சக்ரா கப்பல் ஆனது ஒரு பெரிய விபத்தில் சிக்கியது, அந்த விபத்தில் அதன் சோனார் குவிமாடத்தை உள்ளடக்கிய சில பேனல்கள் பாதிப்பு அடைந்தது. அதனை தொடர்ந்து அது தனது செயல்பாட்டினை நிறுத்தி வைத்து இருந்தது. சில வாரம் முன்னதாக, அட்மிரல் லன்பாவிடம் இதை பற்றி கேட்டபோது, ஐ.என்.எஸ் சக்ரா மீண்டும் சேவையில் ஈடுபட்டிருப்பதாக கூறினார்.

 குத்தகை ஒப்பந்தம்

குத்தகை ஒப்பந்தம்

இந்நிலைப்பாட்டில் அகுலா 2 நீர்மூழ்கி கப்பலும் இந்திய சேவையின் கீழ் வரும் பட்சத்தில், இந்தியா பெருங்கடல்களை ஆட்சி செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான குத்தகை ஒப்பந்தம் ஆனது வெற்றிகரமான முடிந்ததின் விளைவாக, 2018-19 ஆம் நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவ வர்த்தகம் 11 பில்லியன் டாலர்களை தொட்டு விட்டது.

 சக்ரா 3

சக்ரா 3

சரி அகுலா வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் என்றால் என்ன? அதன் செயல் திறன்கள் தான் என்னென்ன? இது ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்படும் மூன்றாவது அகுலா வகை நீர்மூழ்கி கப்பல் ஆகும் ஆகும். ரஷ்யாவில் இருந்து பெறப்பட்டாலும் கூட, இது இந்தியாவில் சக்ரா 3 என்கிற பெயரின் கீழே அழைக்கப்படும் மற்றும் இது வருகிற 2025 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் கைகளுக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே முதன்மையான நீர்மூழ்கி கப்பல்

உலகிலேயே முதன்மையான நீர்மூழ்கி கப்பல்

இந்த கப்பல் இந்திய கடற்படையின் ஸ்டீல்த் (உளவு) மற்றும் உளவு தொடர்பான திறன்களை அடிப்படையையே மாற்றி அமைத்து, மாபெரும் ஊக்கத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகை (கிளாஸ்) நீர்மூழ்கி கப்பல் தான் உலகிலேயே முதன்மையான நீர்மூழ்கி கப்பல்களாக அறியப்படுகிறது. இது இந்தியாவின் தடுப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 2022 ஆம் ஆண்டில் காலாவதியாகும் சக்ரா 2

2022 ஆம் ஆண்டில் காலாவதியாகும் சக்ரா 2

இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆனது எந்த விதமான ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறனை மட்டும் கொண்டு வரவில்லை. உடன் அணு ஆயுதங்களைக் (ஏவுகணைகளை) ஏந்திச் செல்லும் திறனையும் கொண்டு இருக்கிறது. இந்த இரு நாடுகளும் 2022 ஆம் ஆண்டில் காலாவதியாகும் சக்ரா 2 கப்பலின் குத்தகை காலத்தை நீடிக்கும் வேலைகளுக்கும் ஈடுபட்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
First Nuclear Deterrence Patrol Marks Major Step for Indian Submarine Force: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X