அரசாங்க அறிக்கையில் ஏலியன் சார்ந்த தகவல்கள்.!?
பிரபஞ்சத்தில் மனித இனம் மட்டும் தான் உயிர் வாழ்ந்து வருகின்றதா, இல்லை வேறு யாரேனும் வாழ்ந்து வருகின்றனரா என்ற தகவலை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள உரிய உரிமை இருக்கின்றது, என உலகின் பல்வேறு நாட்டு அரசுகளும் நம்பத் துவங்கி விட்டன.
பல்வேறு ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் விண்வெளி வீரர்களும் ஏலியன் இருப்பது மற்றும் ஏலியன் விண்கலம் குறித்த தகவல்களை இதுவரை இல்லாதளவு தைரியமாக வெளிப்படையாகத் தெரிவிக்க முன் வருகின்றனர்.

அமெரிக்கா
மற்ற அரசுகளை விட அமெரிக்கா இது குறித்து உண்மைகளைத் தெரிவிக்க பல்வேறு தகவல்களை தன்னுள் மறைத்து வைத்திருப்பதாகப் பரவலான நம்பிக்கை நிலவுகின்றது.

வாக்குறுதி
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன், தான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் ஏலியன் மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சார்ந்த தகவல்களை முழுமையாக வெளிப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கின்றார்.

ஜான் போடெஸ்டா
அதிபர் பராக் ஒபாமாவின் வலது கை போன்றும் கிளின்டனின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றிய ஜான் போடெஸ்டா சர்ச்சைக்குரிய ட்வீட்களை பதிவு செய்தார். அதில் அவர் வெளியிடப்பட வேண்டிய யுஎஃப்ஒ தகவல்கள் இன்னும் வெளியாகாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது. இந்தத் தகவல்கள் மிக முக்கிய அதிகாரிகளுக்கு மட்டுமே தெிரியும்.

தகவல்
ஏலியன் சார்ந்த தகவல்களை வெளியிடுவது குறித்து பலமுறை முயற்சித்தும் அமெரிக்கா இன்றும் இது குறித்து மௌனம் காத்து வருகின்றது.

காரணம்
ஏலியன் சார்ந்த ரகசியங்கள் தொடர்ந்து மறைக்க முக்கிய காரணம் அரசாங்கம் என்றாலும், இதன் பின்னணியில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் இன்னும் பலர் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆர்வம்
யுஎஃப்ஒ நிகழ்வுகளில் ஆர்வம் இருப்பதை விவரிக்கும் வகையில், யுஎஃப்ஒ சார்ந்த தகவல்கள் அடங்கிய தரவுகளை பல்வேறு நாட்டைச் சேர்ந்த அரசாங்கங்களும் பலமுறை வெளியிட்டிருக்கின்றன. அரசாங்கம் இல்லாமல் எஃப்பிஐ, என்எஸ்ஏ மற்றும் சிஐஏ தரப்பிலும் அதிக ரகசியமான யுஎஃப்ஒ மற்றும் ஏலியன் வாழ்க்கை குறித்த தகவல்களை வழங்கியிருக்கின்றன.

தகவல்
யுஎஃப்ஒ சார்ந்த தகவல்கள் குறிப்பிட்ட ஆய்வாளர்கள், வானியல் மற்றும் ராணுல அதிகாரிகள் இதோடு சில பொது அதிகாரிகளுக்கும் முகவரியிடப்பட்டிருந்தது. யுஎஃப்ஒ மற்றும் ஏலியன்கள் சார்ந்த தகவல்கள் அடங்கிய இந்தக் கடிதம் சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இருந்து எஃப்பிஐ தலைவருக்கு அனுப்பப்பட்டது.

வெளியீடு
ஏலியன் வருகை குறித்த வரிவான தகவல்கள் அடங்கிய கோப்புகளில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டதில் இதுவும் ஒன்று ஆகும்.அந்த வகையில் வெளியிடப்பட்ட கோப்புகளை காண இங்கு கிளிக் செய்யவும்

மர்மம்
பல்வேறு தகவல்கள் மர்மம் நிறைந்தவையாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் கோப்புகள் ஏலியன்கள் குறித்து சில கேள்விகளை எழுப்புகின்றன.

எட்கர் மிட்செல்
"பூமியில் வேற்றுக்கிரக பறக்கும் தட்டு ஒன்றை விபத்தில் சிக்கியது உண்மை, அதில் இருந்து பல்வேறு உடல்கள் கைப்பற்றப்பட்டன. இந்தப் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை, அவை பல காலமாகப் பூமிக்கு வந்து செல்கின்றன", என அப்போலோ 14 விண்வெளி வீரர் டாக்டர் எட்கர் மிட்செல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications