Just In
Don't Miss
- Sports
இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா? ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி!
- News
உள்ளாட்சி தேர்தல்.. திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவது ஏன்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி
- Movies
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனது பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் தான் படித்தேன்: இப்படிக்கு இஸ்ரோ “ராக்கெட் மேன்” சிவன்.!
ஜீலை 15-ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்த சந்திரயான்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்வு கடைசிநேரத்தில் சிறிய தொழில்நுட்ப காரணமாக நிறுத்தப்பட்டது, பின்பு உடனடியாக உயர்மட்ட குழு ஒன்றை அமைத்த சிவன் தொழில்நுட்ப கோளாரை 24 மணிநேரத்திற்க்குள்ளாக சரி செய்தார்.

புவியின் நான்காவது வட்டப்பாதை
மேலும் விரைந்து செயல்பட்டதால்; ஜீலை 22-ம் தேதி செயற்கைகோளை விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது சிவன் தலைமையிலான வல்லுநர்கள் குழு. பின்பு நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள
சந்திரயான் 2 விண்கலம், தற்போது புவியின் நான்காவது வட்டப்பாதையை வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் வழிக்கல்வி
குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சி உலகை இந்தியா மீது திரும்ப வைத்ததற்கு இவரும் ஒரு முக்கியமான காரணம். எனினும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் சிவன், படித்ததெல்லாம் அரசுப்பள்ளியில் தான். அதிலும் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர் தான் சிவன்.
அமேசான் ஓரமா போ: பிளிப்கார்ட் அள்ளிக்கொடுக்குது செம ஆஃபர்.!

ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங்
பின்பு எஸ்டி ஹிந்து கல்லூரியில் பிஎஸ்சி கணிதத்தில் பட்டம் பெற்ற சிவன், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் இஞ்சினியரிங் படிப்பை 1980ல் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இஞ்சினியரிங் படிப்பை இந்திய அறிவியல் கல்லூரியில் 1982ல்
முடித்தார். அதோடு, ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படிப்பில் பி.ஹெச்டி பட்டத்தை மும்பை ஐஐடி-யில் பெற்றார்.

அணிந்துகொள்ள செருப்பு கூட இல்லை
நான் பள்ளியில் படிக்கும்போது அணிந்துகொள்ள செருப்பு கூட இல்லை என்றும், தான் முதலில் பேண்ட் அணிந்தது தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த பின்புதான் என்று ஒருமுறை சிவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மற்றும் புனே இடையே முதல் ஹைப்பர்லூப் திட்டம்! புதிய சோதனை பாதைக்கு ஒப்புதல்!

குடும்பத்தில் முதல் பட்டதாரி
சிவன் அவருடைய குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். சிவன் அவர்களின் இரண்டு சகோதரிகளும், சகோதரர் ஒருவரும் வறுமையின் காரணமாக உயர்கல்வியை கூட படிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்பு கல்லூரியில் படித்த போது அவரது தந்தைக்கு விவசாயம் செய்ய உதவியதாகவும், அதன் காரணமாகவே அவரது தந்தை அருகில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.

செயற்கைகோள் ஏவும் வாகனம்
சிவன் இளங்களை அறிவியல் கணிதவியல் படிப்பில் 100சதவிகிதம் மதிப்பெண் பெற்றதால் மனம் மாறிய அவரது தந்தை மேற்படிப்பு படிக்க அனுமதித்துள்ளார். 1982-ம் ஆண்டு இஸ்ரோவின் சிவனுக்கு வேலை கிடைத்தது, அதுமுதல் கிட்டத்தட்ட 37 ஆண்டுகாலம் இஸ்ரோவில் பணியாற்றிய சிவன் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, க்ரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கம், மீண்டும் பயன்படுத்தும் வகையிலான செயற்கைகோள் ஏவும் வாகனம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.
வைரல் வீடியோ: குடியிருப்பு பகுதிக்குள் நாயைத் தாக்கிய முதலை! அதிகரிக்கும் முதலை நடமாட்டம்!

ராக்கெட் மேன்
மேலும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக கடந்த ஜனவரி 2018-ம் நியமனம் செய்யப்பட்ட சிவன் இஸ்ரோவின் அனைத்துவிதமான ராக்கெட் ஏவும் நிகழ்ச்சிகளிலும் பங்குவகித்தவர் என்பதால் "ராக்கெட் மேன்" என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய தமிழ் பாடல்கள்
இஸ்ரோவில் சிவன் செய்த முக்கிய சாதனைகளில் ஒன்று 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி 104 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய உலக சாதனையை முன்னின்று நடத்தியது சிவன் தான். மேலும்
சிவனுக்கு பழைய தமிழ் பாடல்கள் கேட்பது என்றால் மிகவும் பிடித்தமானது. கூடவே தோட்டவேலைகள் செய்வதும் அவருக்கு பிடிக்குமாம்.

பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்
அன்மையில் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தொழில்நுட்பக் கோளாறை உடனடியாக சரிசெய்து ஏழு நாட்களுக்குள் செயற்கைக்கோளை விண்வெளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியதற்காக சிவன் உட்பட பல விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090