வால்ட்–தி ரோபோ: கட்டடங்களுக்கு வேகமாவும் சிறப்பாகவும் வர்ணம் பூசும் தோழன்.!

|

ஒரு வீடு கட்டி முடிப்பதற்கு எவ்வளவு சிரமங்கள் உள்ளதோ அதற்கு ஈடான சிரமங்கள் கட்டிய வீட்டிற்குப் பெயின்ட் பூசி முடிப்பதிலும் உண்டு. உரிய நேரத்தில், தகுந்த ஆட்களை வைத்து, மனதிற்குப் பிடித்தமாதிரி, குறைகள் இல்லாமல் பெயின்ட் பூசி முடிப்பது என்பது மிகப் பெரும் வேலை. பெயின்ட் பூசும் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஏற்ற இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் பயன்பாடு அதிக அளவில் இல்லை. இக்குறையைப் போக்கும் வகையில் 24 வயது நிரம்பிய நான்கு இளைஞர்கள் ஒன்று கூடி யோசித்தனர். இவர்கள், என்ட்லெஸ் ரோபோடிக்ஸ் (Endless Robotics) என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தனர்.

வால்ட்: கட்டடங்களுக்கு  வேகமாவும் சிறப்பாகவும் வர்ணம் பூசும் தோழன்.!

இந்நிறுவனத்தின் வழியாக வால்ட் (WALT) என்னும் பெயரில் சுவருக்கு வண்ணம் பூசும் ரோபோவைக் கண்டுபிடித்து விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளனர். ஸ்ரீகர் ரெட்டி, புனீத் பன்டிகட்லா, அகில் வர்மா, நிதிஷ் பாய்னியா ஆகிய நான்கு இளைஞர்களும் இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் நான்கு பேரும் பிலானியில் அமைந்துள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனத்தில் (BITS Pilani ) பொறியியல் பட்டம் பெற்றவர்கள். இவர்களுடைய என்ட்லெஸ் ரோபோடிக்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.

“அலங்கார பெயின்டுக்கான சந்தை இந்தியாவில் 2 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. வர்ணம் பூசுவதற்காகப் பெயின்ட் போன்ற பொருட்களுக்கான செலவு மற்றும் அதனைப் பூசும் வேலைக்கான செலவு ஆகியவை ஏறக்குறைய 1:1 என்னும் விகிதத்தில் உள்ளது. எனவே, எங்களுடைய தயாரிப்புக்கான வரவேற்பு பிரகாசமாக இருக்கும்” என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இந்நிறுவனத்தின் உரிரைமயாளர்கள்.

வால்ட் : வர்ணம் பூசும் ரோபோ

வால்ட் : வர்ணம் பூசும் ரோபோ

வர்ணம் பூசுவதற்காக இவர்கள் தயாரித்துள்ள வால்ட் என்னும் ரோபோ மனிதா்களைக் காட்டிலும் 30 மடங்கு வேகமாக வேலை செய்யும் திறனுடையது. இந்த இயந்திரத்தை வடிவமைக்கும் பொழுது இரண்டு முக்கியமான விசயங்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தினோம். வேகம் மற்றும் இடையீடு அற்ற வகையில் நிலையாக வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் எங்களுடைய ரோபோ அமைய வேண்டும் என விரும்பினோம். அதற்கேற்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினோம். எங்களுடைய இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு 4800 சதுர அடி பரப்பிற்கு (sqft/min) வர்ணம் பூசும் திறன் பெற்றது. பிரஸ் அல்லது ரோலரைப் பயன்படுத்தி ஒருவர் வரணம் பூசுவதைக் காட்டிலும் 30 மடங்கு வேகத்தில் இது வேலை செய்கிறது. இதனுடைய பணிகளை ஒருங்கிணைக்கவும் சுவருக்கும் ரோபோவுக்கும் இடையே தகுந்த இடைவெளியை மேலாண்மை செய்வும் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மனிதர்களின் சிந்தனை… இயந்திரத்தின் வேகம் …

மனிதர்களின் சிந்தனை… இயந்திரத்தின் வேகம் …

வால்ட் ஒர் இயந்திரமாக இருந்தாலும் அறிவு நுட்பத்துடன் செயல்படக் கூடியது. எப்பொழுதும் சீரான இடைவெளியில், ஒரே மாதிரியான வேகத்தில் சுவரில் வா்ணத்தைத் பரப்பி பூசும் ஆற்றலுடையது. பிரைமைர், பட்டி போன்றவற்றையும் இதன் வழியாகப் பூச முடியும். சுவரில் உள்ள ஜன்னல், கதவு, சுவிட்ச் போர்டு போன்றவற்றைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பிற இடங்களில் மட்டும் பூசும் திறன்பெற்றது.

எளிமையாக இயக்கலாம்

எளிமையாக இயக்கலாம்

ஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு போன் மூலமாக வால்ட் ரோபோவைக் கட்டுப்படுத்தும் வகையில் பயன்பாட்டுச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, தானாக இயங்கும் வகையிலும், மனிதர்கள் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்ணம் பூச வேண்டிய சுவரின் பகுதி மற்றும் கூரையின் உயரம் ஆகியவற்ற சரியாக நிர்ணயம் செய்துவிட்டால் போதும் வால்ட் தன்னுடைய வேலையைத் திறம்படச் செய்து முடித்தவிடும்.

பெயின்டர்களுக்குப் பயிற்சி பற்றும் பணி வாய்ப்பு

பெயின்டர்களுக்குப் பயிற்சி பற்றும் பணி வாய்ப்பு

என்ட்லஸ் ரோபோடிக் நிறுவனம், வால்ட் ரோபோவோடு அதனை இயக்குவதற்கு ஏற்ற நன்கு பயிற்சி பெற்றவர்களையும் வழங்குகிறது. 60 முதல் 65 சதவிகிதம் வரையிலான பணியை லால்ட் ரோபோ செய்துவிடும். வர்ணம் பூசும் பணியை நூறு சதவிகிதம் முழுமையாகவும் மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கேற்ற தொழில்நுட்பத்தை வழங்குவதை இந்நிறுவனம் தன்னுடைய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், ஹைதராபதத்தில் அமைந்துள்ள தேசியக் கட்டுமான நிறுவனத்துடன் (National Academy of Construction) இணைந்து பயிற்சி வகுப்புகளையும் இந்நிறுவனம் நடத்துகிறது. "வால்ட் ரோபோவை எவ்வாறு பயன்படுத்துவது, வா்ணங்களைத் தெளிக்கும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது போன்றவை குறித்து பெயின்டர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வகையில் பயிற்சி வகுப்புகளை எங்கள் நிறுவனம் நடத்துகிறது. பயிற்சி பெறும் பொழுது வேலைக்கான வாய்ப்புகளையும், பயிற்சி முடித்த பிறகு எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்குகிறோம்" என்கினறனர் நிறுவன உரிமையாளர்கள்.

பெரும் கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்பு

பெரும் கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்பு

ஹைதராபாத்தைச் சேர்ந்த மீனாக்சி குழுமம், கல்பதரு குழுமம் போன்ற எட்டு பெரிய கட்டுமான நிறுவனங்களிடமிருந்து வர்ணம் பூசும் பணியைப் பெற்று அதனை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்ட்லெஸ் ரோபோடிக் நிறுவனத்தினர். புனே மற்றும் பெங்களுரு போன்ற நகரங்களில் உள்ள பெரும் கட்டுமான நிறுவனங்களின் பணிகளையும் முடிக்கக் காத்திருக்கின்றனர். "ரியல் எஸ்டேட் துறையினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். மிக விரைவாகவும் செலவு குறைவாகவும் அவர்களுடைய பணியை முடித்துத் தருகிறோம். வால்ட் ரோபோவோடு சேர்ந்து, வர்ணம் பூசும் பணிக்குத் தேவையான கருவிகள், வர்ணம் தெளிக்கும் இயந்திரம், பயிற்சி பெற்ற திறன்மிகு பணியாளர்களையும் வழங்குகிறோம்." என்கிறார் ஸ்ரீகர் ரெட்டி. நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டாளர்களை ஈா்ப்பதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.

உற்பத்தி மற்றும் விற்பனை

உற்பத்தி மற்றும் விற்பனை

வால்ட் ரோபோ தற்போதைக்கு, தேவைப்படுவோர் கட்டணம் செலுத்திச் சேவையைப் பெறும் வகையில் இயக்கப்படுகிறது. வரும் காலங்களில் வாடகை மற்றும் விற்பனைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும். வால்ட் ரோபோவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் பணியை என்ட்லெஸ் ரோபோடிக் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் 5 அல்லது 6 இயந்திரங்களை உற்பத்தி செய்து வாடகைக்கு விடுவதற்கு நிறுவனம் தயாராக உள்ளது.

சர்வதேச கட்டுமான நிறுவனங்கள், 10 முதல் 12 வரையிலான வால்ட் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீகர் ரெட்டி கூறுகிறார். விற்பனைக்குப் பிறகான சேவையின் மூலமாகவும் வருமானத்தை ஈட்டவுள்ளதாக இவர் தெரிவிக்கிறார்.

இறக்குமதி செய்யப்படும் இயந்திரத்துக்கான பாகங்கள்

இறக்குமதி செய்யப்படும் இயந்திரத்துக்கான பாகங்கள்

"எங்களைப் போன்று ஹார்டுவேர் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. வால்ட் இயந்திரத் தயாரிப்புக்குத் தேவையான சில பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. வால்ட் இயந்திரத்தின் பெரும் பகுதியை இரண்டு வாரங்களுக்குள் உருவாக்கி விடலாம். ஆனால் அதற்குத் தேவையான முக்கிய பாகங்களை இறக்குமதி செய்வதற்கு 6 முதல் 8 வாரங்கள் ஆகின்றன." எனத் தங்களுடைய இடர்ப்பாடுகள் குறித்துக் கூறுகிறார் ஸ்ரீகர் ரெட்டி. தற்போது இந்நிறுவனம் வெளிப்புறச் சுவருக்கு வர்ணம் பூசும் வகையிலான இயந்திரத் தயாரிப்புப் பணி குறித்து தீவிரமாகச் சிந்தித்து வருகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Faster cleaner cheaper Tell this robot to paint your walls : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more