Home
Scitech

'அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்' விவசாயி நிலத்தில் கிடைத்த விண்கல்.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த அறிய வகை விண்கல்லின் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்குமென்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மிச்சிகன்: அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரத்தில் அறிய வகை விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல், உலகின் ஆறாவது மிகப் பெரிய விண்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிய வகை விண்கல்லின் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்குமென்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிய வகை விண்கல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மேற்கட்ட ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

விவசாயி நிலத்தில் விண்கல்

விவசாயி நிலத்தில் விண்கல்

மிச்சிகன் பகுதியில் வசிக்கும் டேவிட் மாசுரேக் என்ற விவசாயின் நிலத்தில் தான் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டேவிட் மாசுரேக், இந்த நிலத்தை விவசாயத்திற்காக 1988 இல் வாங்கியதாகத் தெரிவித்திருக்கிறார்.

 30 ஆண்டு

30 ஆண்டு

இந்த விண்கல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக டேவிட் இன் வாசல் படி அருகே, வெறும் தடுப்பு கல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் கூடுதல் சுவாரசியம். சிறு தினங்களுக்கு முன்பு தான் தோட்ட வேலைக்காகக் கற்களை இடம் மற்றும் பொது இதன் வடிவம் வித்தியாசமாக இருப்பை உணர்த்த டேவிட் அருகில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

74 லட்சம் விண்கல்

74 லட்சம் விண்கல்

23 பவுண்ட் எடை கொண்ட விண்கல்லை, மிச்சிகன் பல்கலைக்கழத்தில் உள்ள புவியியலாளர் மோனா சர்பிஸ்கு ஆய்வு செய்து, அது உண்மையான விண்கல் என்பதை உறுதி செய்து டேவிட் இடம் தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

1930ஆம் ஆண்டு பூமிக்கு வந்துள்ள விண்கல்

1930ஆம் ஆண்டு பூமிக்கு வந்துள்ள விண்கல்

இந்த அறிய வகை விண்கல்லில் இரும்பு மற்றும் நிக்கல் துகள்கள் அதிகம் உள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விண்கல் 1930ஆம் ஆண்டில் பூமிக்கு வந்துள்ளது என்ற தகவல்களுடன் அடுத்த கட்ட ஆய்வுகளில் ஏதேனும் அறிய வகை புது கூறுகள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை

மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை

டேவிட் இந்த விண்கல்லை விற்று, அதில் வரும் பணத்தில் பாதியை மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Farmer learns doorstop rock he’s been using for 30 years is actually a meteorite worth Rs 74 lakh : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X