Subscribe to Gizbot

நம்மை ஏமாற்றிய புகைப்படங்கள், உண்மை வெளியானது.!!

Written By:

இண்டர்நெட் உலகில் தினமும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதன் மூலம் நன்மை ஏற்பட்டாலும், தீமையும் இருக்க தான் செய்கின்றது. என்ன செய்வது நன்மை இருந்தால், தீமையும் இருக்க தானே செய்யும். இங்கு இண்டர்நெட் உலகில் நம்மை ஏமாற்றிய புகைப்படங்கள் மற்றும் அது குறித்த உண்மை கருத்துகளை தான் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டைம் டிராவலிங் ஹிப்ஸ்டெர்

1

1941 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் 2016 ஆம் ஆண்டில் வாழும் மனிதர் ஒருவர் இருக்கிறார், இவர் நிச்சயம் டைம் டிராவலர் தான் என இணையத்தில் செய்திகள் வெளியாகின.

காரணம்

2

இப்புகைப்படத்தில் காணப்பட்ட இந்த மனிதர் ப்ரின்ட் செய்யப்பட்ட டீ-சர்ட், கண் கண்ணாடி மற்றும் டிஜிட்டல் கேமராவை கொண்டிருந்ததால் இந்த செய்தி வேகமாக பரவியது.

உண்மை

3

டைம் டிராவலர் என கூறப்பட்ட இந்த மனிதர் அழகான ஆடையை அணிந்து கொண்டிருக்கின்றார். ஆங்கி டி லா நியூட் என்ற திரைப்படத்தின் ஒரு புகைப்படம் தான் இது. இதில் இம்மனிதர் அணிந்திருக்கும் டீ-சர்ட் மீண்ட்ரியல் மரூன்ஸ் ஹாக்கி அணிக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், இவர் கையில் வைத்திருக்கும் கேமரா கோடாக் 35 ரேன்ஜ்ஃபைன்டர், இது 1938 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஸ்லோவே ஸ்பேஸ்மேன்

4

1964 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஹெல்மெட் அணிந்த விண்வெளி மனிதர் இருப்பது தெரிகின்றது. பின்னணியில் இருக்கும் இந்த பெரிய உருவத்தினை புகைப்பட கலைஞர் படத்தை டெவலப் செய்த பின் தான் பார்த்தார்.

காரணம்

5

பின்னணியில் இருக்கும் உருவமானது பார்க்க விண்வெளி வீரர் போன்று காட்சியளிக்கின்றது. மேலும் இது ஏலியன் ஆக இருக்கலாம் என செய்திகள் உலா வந்தது.

உண்மை

6

புகைப்படம் எடுக்கப்பட்ட விதம், கோணம் போன்றவைகளை வைத்து பார்க்கும் போது புகைப்படம் இப்படி தான் இருக்கும். இதோடு படத்தை எடுத்தவர் பின்னணியில் யாரும் இல்லை என கூறுவதும் உண்மை தான். ஏனெனில் அவர் பயன்படுத்திய கேமராவின் வியூ ஃபைன்டர் 30% படத்தினை மறைத்திருக்கலாம். இதனால் படத்தை எடுத்தவருக்கு பின்னணியில் எதுவும் இல்லாதது போன்றே காட்சியளித்திருக்கும்.

லீவிடேட்டிங் மேன் (மிதக்கும் மனிதர்)

7

1930களில் வாழ்ந்த ஆன்மீகவாதி தான் காலின் எவான்ஸ், இவர் மக்கள் மத்தியில் காற்றில் மிதப்பது போன்ற காட்சிகள் அரங்கேறியது பிரபலமாக இருந்தது.

காரணம்

8

பெரும்பாலும் இருளில் மிதக்கும் காலினை புகைப்படம் எடுக்கும் போது ப்ளாஷ் பயன்படுத்தப்பட்டதால் புகைப்படத்தில் ஆவிகள் பதிவாகியது. இதில் இவர் ஆவிகளால் காற்றில் தூக்கப்படுவது தெளிவாக பதிவானது.

உண்மை

9

தனது சக்திகளை தொழில்நுட்ப உதவியோடு கச்சிதமாக செய்து வந்த காலின் தொழில்நுட்பம் மூலம் சிக்கி கொண்டார். இவர் காற்றில் மதிப்பது இன்று வரை இண்டர்நெட்டில் மர்மமாகவே இருக்கின்றது.

தி பேட்டில் ஆஃப் லாஸ் லாஸ் ஏஞ்சல்ஸ்

10

பிப்ரவரி 24, 1942 ஆம் ஆண்டு இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் வானத்தில் விசித்திரமாக ஏதோ நிகழ்ந்தது, இன்று வரை சர்ச்சையாகவே இருக்கின்றது. குறிப்பிட்ட இரவு வானத்தில் வினோதமாக ஏதோ பறந்து சென்றதாக செய்திகள் வெளியாகின.

காரணம்

11

பியர்ல் ஹார்பர் தாக்குதல்களுக்கு சரியக மூன்று மாதங்களுக்கு பின் நடந்த இந்த சம்பவம் பல்வேறு தவறான கணிப்புகளுக்கு வழி செய்தது. வானிலை கணிக்கும் பலூன்கள் தான் எதிரி போர் விமானமாக கருதப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின, எனினும் மக்கள் இதனினை நம்புவதாக இல்லை.

உண்மை

12

இச்சம்பவம் குறித்து வெளிான அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் பெரிய பறக்கும் தட்டு போன்ற பொருள் தெளிவாக காணப்பட்டது. அச்சிடும் முன் புகைப்படத்தின் வெளிச்சம் அதிகரிக்கப்பட்டது, இதன் காரணமாக படத்தில் நடுவே தட்டு வெளிவாக காணப்பட்டது.

பெரிய எலும்பு கூடுகள்

13

அடிக்கடி இணையத்தில் உலா வரும் இந்த புகைப்படம், பழைய கால மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். இதன் விசேஷமானது ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றார் போல் இந்த புகைப்படத்தை சுற்றி பல்வேறு கதைகள் இருப்பது தான்.

காரணம்

14

உலகில் பெரிய உருவம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் அதிகம். இவர்கள் இது போன்ற புகைப்படங்களை கொண்டு இவை கடவுளின் எலும்பு கூடுகள் என்ற நோக்கில் தகவல்களை இணையத்தில் வெளியிடுகின்றனர்.

உண்மை

15

உண்மையில் இந்த புகைப்படம் ஃபோட்டோஷாப் மென்பொருள் போட்டிக்காக உருவாக்கப்பட்டதாகும். இதனினை Worth1000.com என்ற இணையதளம் நடத்தியது. இந்த போட்டியின் நோக்கம் தொல்பொருள் புரளி ஆகும். இதற்காக உருவாக்கப்பட்ட ஃபோட்டோஷாப் புகைப்படம் தான் இது.

தி வெம் கோஸ்ட் கேல்

16

1995 ஆம் ஆண்டு வெம் டவுன் ஹால் தீ பிடித்து எரிந்தது. அச்சமயம் புகைப்பட கலைஞர் ஒருவர் இதனினை புகைப்படம் எடுத்தார், பின் படத்தை டெவலப் செய்ததும் டவுன் ஹால் கட்டிடத்தின் கதவருகே ஒரு சிறுமி நின்று கொண்டிருந்ததை பார்த்தார்.

காரணம்

17

எரியும் தீயிலும் எவ்வித தயக்குமும், பயமும் இன்றி நின்று கொண்டிருந்த சிறுமி 1677 ஆம் ஆண்டு தீ விபத்தில் இறந்தவர் என்றும், இந்த புகைப்படம் பேய் இருப்பதற்கான ஆதாரம் என்றும் கூறப்பட்டது.

உண்மை

18

2010 ஆம் ஆண்டு புகைப்படத்தை எடுத்தவர் மரணித்ததும், வெம் டவுன் ஹாலில் கடிதம் ஒன்றில் புகைப்படத்தில் காணப்பட்ட சிறுமியின் புகைப்படம் காணப்பட்டது. அதன் பின் இந்த புகைப்படம் போலியானது என தெரிவிக்கப்பட்டது.

நெஸ்ஸி அட்லாஸ்ட்

19

ஸ்காட்லாந்தின் லாச் நெஸ் ஏரியில் எடுக்கப்பட்ட போட்டோவில் நெஸ்ஸி தெரிந்ததாக கூறப்பட்டு தற்சமயம் போலியான படம் என கூறப்பட்டு விட்டது.

காரணம்

20

குறிப்பிட்ட புகைப்படமானது சுறா போன்ற தலை கொண்ட ராட்சத உருவம் ஒன்றை வெளிப்படுத்தியதால் அதிகம் பிரபலமானது. இதே போன்ற படம் கூகுள் மேப்ஸ் மூலம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

உண்மை

21

உண்மையில் இந்த புகைப்படத்தில் இருப்பது ஜாகோபைட் குயின் என்ற படகின் பிரதிபலிப்பு தான் என கூறப்பட்டு விட்டது. இந்த படகு சுற்றுலா பயன்பாட்டிற்காக லாச் பகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

எல்ஃபீல்டு வேதாளம்

22

பேய் குறித்த தேடல்களில் கிடைத்த மர்மமான புகைப்படங்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் 70களில் என்ஃபீல்டு ஹான்டிங்ஸ் என்ற பெயரில் பிரபலமாக இருந்தது.

காரணம்

23

பேய் நம்பிக்கை அதிகம் இருந்த அச்சமயத்தில் வெளியான இந்த புகைப்படத்தில் 11 வயது சிறுமி கட்டிலில் இருந்து பறப்பதை போன்ற படம் அக்காலத்தில் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தயதோடு பிரபலமாகியும் விட்டது.

உண்மை

24

பல்வேறு விசராணைகளுக்கு பின் இந்த புகைப்படத்தில் பறக்கும் நிலையில் காணப்பட்ட சிறுமி யோகா மூலம் காற்றில் மிதக்கும் பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Famous Paranormal Photographs Debunked Tamil.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot