Subscribe to Gizbot

மெல்ல மெல்ல அவிழும் பிரபஞ்சத்தின் மர்ம முடிச்சுகள்.!

Written By:

முதலில் அறிவியலுக்கும், அதன் வழியே உருவாக்கம் பெற்ற விண்கலம், அதனூடே நிகழும் விண்வெளி சார்ந்த ஆய்வுகளுக்கு நன்றி. இல்லையெனில் தினசரி அடிப்படையில், இந்த பிரபஞ்சம் மற்றும் பூமி சார்ந்த மர்மமான மற்றும் சுவாரசியமான தகவல்களை நம்மால் கண்டறியவே முடிந்திருக்காது.

மெல்ல மெல்ல அவிழும் பிரபஞ்சத்தின் மர்ம முடிச்சுகள்.!

வீட்டுக்குள் உட்காந்து கொண்டு ஜன்னல் வழியாக, கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை தெரிவதில்லை - இந்த அண்டம். அளக்கவே முடியாத, அறிந்துகொள்ளவே முடியாத பல எல்லைகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளது தான் - இந்த விண்வெளி.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நாமெல்லாம் எம்மாத்திரம்.??

நாமெல்லாம் எம்மாத்திரம்.??

ஏன் விண்வெளி இவ்வளவு சுவாரசியமான ஒன்றாக உள்ளதென்று தெரியுமா.? ஏனெனில், அதன் பிரம்மாண்டம் நம்மையும், இந்த உலகின் மீதான நமது இருப்பையும், அதனால் விளையும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் மிக மிக மிகச்சிறிதாக மாற்றுகிறது என்பதால் தான். சில நூறு ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து பார்க்கும் போதே பூமி ஒரு சிறிய புள்ளிதான் என்கிற போது, அதில் வாழும் நாமெல்லாம் எம்மாத்திரம்.?? நமது பிரச்னைகளெல்லாம் எம்மாத்திரம்.?? ஒரு எறும்பின் அளவின் 100000000-ல் ஒரு பங்கு கூட இல்லை.

மர்மத்தை கட்டவிழ்க்க உதவும்

மர்மத்தை கட்டவிழ்க்க உதவும்

அப்படியாக, பிரபஞ்சத்தைப் பற்றிய நமக்கெல்லாம் ஒன்றுமே தெரியாது என்பதை உணர்த்தும் சமீபத்திய வானியல் துறையில் நிகழ்ந்த சில சுவாரசியமான கண்டுபிடிப்புகளை பற்றிய தொகுப்பு இதோ. இந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நாம் வாழும் இந்த பூமியும், அதில் நாமும் எப்படி உருவானோம் என்ற மர்மத்தையும் கட்டவிழ்க்க உதவும், உடன் கிரக படைப்புகள் மீதான தெளிவுதனை அடைய வழிவகை செய்யுமென்பதில் சந்தேகமேயில்லை.

நாம் எங்கு, எப்படி இருக்கிறோம்.?

நாம் எங்கு, எப்படி இருக்கிறோம்.?

பிரபஞ்சத்தின் (கண்டுபிடிக்கப்பட்ட) மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒன்றான வி வ்வை கேனில் மேஜாரிஸ்-ன் (VY Canis Majoris) விட்டமானது நமது சூரியனை விட 2000 மடங்கு பெரியது மற்றும் நமது பூமி கிரகத்தை விட சுமார் 155,000 முறை பெரியது.

வியாழன் மற்றும் நெப்டியூன் கிரகங்கள் வால் நட்சத்திரங்களை கொண்டு பூமியை தாக்கிகொண்டே இருக்கின்றன.!

வியாழன் மற்றும் நெப்டியூன் கிரகங்கள் வால் நட்சத்திரங்களை கொண்டு பூமியை தாக்கிகொண்டே இருக்கின்றன.!

20 ஆண்டுகளாக, வியாழனின் சக்திவாய்ந்த ஈர்ப்பு விசையால் சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திர மீன்கள் மற்றும் வால்மீன்கள் ஈர்க்கப்பட்டு வருகின்றது என்று விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவொன்று வியாழன் மற்றும் நெப்டியூன் கிரகங்கள் விண் பொருள்களை, சூரிய மண்டலத்தின் உள்ளே "எறிந்துவிடுகின்றன" என்று கூறுகிறது. அவைகள், எதிர்காலத்தில் நமது பூமியையும் தாக்கும் வாய்ப்புகள் உண்டு.

ஒருகாலத்தில் வீனஸ் கிரகம் வாழ்விடமாக இருந்தது.!

ஒருகாலத்தில் வீனஸ் கிரகம் வாழ்விடமாக இருந்தது.!

வீனஸ் - இன்று சூரிய குடும்பத்தில் ஒரு சூடான கிரகமாக உள்ளது. ஆனால் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 2 பில்லியன் ஆண்டுகளுக்கு நீடித்திருந்த திரவப் பெருங்கடல்கள் இருந்துள்ளன. ஆக வீண்சா ஒருகாலத்தில் வாழ்க்கையை ஆதரித்துள்ளது என்பது முற்றிலும் வெளிப்படை.

சனிக்கோளின் மோதிரங்கள், இயற்கையான செயற்கைகோள்கள் - டைனோசர்களை விட வயதில் சிறியவைகளாகும்.!

சனிக்கோளின் மோதிரங்கள், இயற்கையான செயற்கைகோள்கள் - டைனோசர்களை விட வயதில் சிறியவைகளாகும்.!

சனிக்கோள் ஆனது மொத்தம் 62 இயற்கையான செயற்கைக்கோள்கள் மற்றும் பல மோதிரங்களை கொண்டுள்ளது. இந்த கிரகத்தின் வளையங்கள் (சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) ஒரே நேரத்தில் உருவாக்கப்படவில்லை என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சனி கிரகத்தின் பெரும்பாலான செயற்கைக்கோள்களும் அதன் வளையங்களும், பூமியில் டைனோசர்கள் வாழ தொடங்கிய காலத்திற்கு பின்னரே தோன்றியுள்ளன என்றும் நம்பப்படுகிறது.

சூரியக்குடும்பத்தின் 9-ஆம் கிரகம் இருக்கிறது.!

சூரியக்குடும்பத்தின் 9-ஆம் கிரகம் இருக்கிறது.!

சமீபத்திய கணித மாதிரியானது, நெப்டியூன் கிரகத்திற்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளியை காட்டிலும் 20 மடங்கு அதிக தொலைவில் சூரியக்குடும்பத்தின் ஒன்பதாவது கிரகம் இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. மேலும் அந்த ஒன்பதாவது கிரகம் பூமியின் அளவை விட 10 மடங்கு பெரியதாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. அதன் இருப்பிடம் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அது ஒரு பெயரை பெறும்.

கருந்துளைகளின் இருப்பை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரம்.!

கருந்துளைகளின் இருப்பை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரம்.!

கடந்த பிப்ரவரி 2016-ல், விஞ்ஞானிகள் ஈர்ப்பு விசைகளின் ஆதாரத்தை கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பானது பிளாக் ஹோல்ஸ் எனப்படும் கருப்பு ஓட்டைகள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதனை மூலமாக கொண்டு, பிக் பேங் (Big Bang) விளைவாக உருவாகிய அலைகளை ஆய்வு செய்யும் பட்சத்தில் இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு வழிவகுத்த வழிமுறையை நம்மால் தீர்மானிக்கமுடியும்.

மழைப்போல் பாறைகள் பொழியும் எரிமலை கிரகம் - கொரோட் -7 பி.!

மழைப்போல் பாறைகள் பொழியும் எரிமலை கிரகம் - கொரோட் -7 பி.!

இந்த விண்கிரகம் அதன் நட்சத்திரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. காற்றை விட்டு வெளியேறும் கற்கள் மற்றும் கூழாங்கற்களை ஆவியாக்க போதுமான அளவு மேற்பரப்பு வெப்பம் நிலவுகிறது. அது பாறைகளை உருக்கி மழையாய் பொழிந்து எரிமலை ஏரிகளை உருவாக்குகிறது.

ப்ளூட்டோவில் திரவ நீர் உள்ளது.!

ப்ளூட்டோவில் திரவ நீர் உள்ளது.!

நாசாவின் நியூ ஹாரிசோன்ஸ் ஆய்வுகளின் தரவரிசைப்படி, புளுட்டோவின் 300- கிலோமீட்டர் தடித்த மேற்பரப்பில் உள்ள பனிப்பகுதியின், 100 கிமீ ஆழத்தில் ஒரு கடல் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கடல் உப்புத்தன்மை சுமார் 30% இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதாவது இது பூமியில் உள்ள டெட் சி (Dead Sea) போன்றது.!

ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்திலும் உயிர்கள் பிழைத்திருக்கலாம்.!

ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்திலும் உயிர்கள் பிழைத்திருக்கலாம்.!

மிகவும் சுறுசுறுப்பான மார்ஸ் ரோவர் ஆன - க்யூரியாசிட்டி, செவ்வாய் கிரகத்தின் சில பாறைகளின் உள்ளே போரோன் (boron) தடயங்களை கண்டுபிடித்துள்ளது. இந்த கூறுகளின் இருப்பின் மூலம், செவ்வாயின் மேற்பரப்பில் ஒருகாலத்தில் தண்ணீர் இருந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது.?

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது.?

காலப்போக்கில் பின்னோக்கி பயணம் செய்தோம் என்றால் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம் மற்றும் அது நீல நிறமாக இல்லாமல் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக இருப்பதையும் காணலாம். பூமி மற்றும் தியாவிற்கு (Thiea) இடையில் ஏற்பட்ட மோதல் பூமியின் மேற்பரப்பில் சிதைவுகளை ஏற்படுத்தியது, பின்னர் அது நிலவாக உருவாகியது. அப்போதைய சந்திர கிரகமானது தற்போதுள்ள சூரியனை போல பிரகாசமாகவும், நமது கிரகத்தின் மீது 25 மடங்கு அதிக ஈர்ப்பையும் நிகழ்த்தியுள்ளது. அம்மாதிரியான நிலவின் செல்வாக்கு பூமியில் பெரிய எரிமலைக்குழம்பு அலைகளை விளைவித்தது மட்டுமின்றி பூமி கிரகம் வெறும் 6 மணி நேரத்தில் அதன் அச்சில் ஒரு முறையை சுற்றிமுடிக்கவும் செய்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Facts That Prove We Really Know Nothing About the Universe. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot