சினிமா பாணியில் வெறும் 4 நாட்களில் 3000 குழந்தைகளை மீட்டது எப்படி.?

நம்பினால் நம்புங்கள் வெறும் 4 நாட்களில், இதுவரை காணாமல் போன சுமார் 3000 குழந்தைகளை, பேஷியல் சாப்ட்வேர் உதவியுடன், தில்லி போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

|

சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றாகிப்போன பேஷியல் ரிகக்னைசேஷன் சாப்ட்வேர் ஆனது முகங்களை அங்கீகரித்து ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்வதை விட, இன்னும் சிறந்த காரியங்களை செய்யும் திறன் கொண்டது என்பதற்கு ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு தான் - டெல்லியில் நடந்துள்ள ஒரு சம்பவம்.

சினிமா பாணியில் வெறும் 4 நாட்களில் 3000 குழந்தைகளை மீட்டது எப்படி.?

பேஷியல் ரிகக்னைசேஷன் சாப்ட்வேர் மூலம் காணாமற்போன குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களை தத்தம் குடும்பங்களுடன் சேர்க்கவும் முடியும் என்பதை தில்லி போலீசார் நிரூபித்துள்ளனர். நம்பினால் நம்புங்கள் வெறும் 4 நாட்களில், இதுவரை காணாமல் போன சுமார் 3000 குழந்தைகளை, பேஷியல் சாப்ட்வேர் உதவியுடன், தில்லி போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

சுமார் 45,000 குழந்தைகளின் முகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டது.!

சுமார் 45,000 குழந்தைகளின் முகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டது.!

இந்த விசாரணையில் எப்ஆர்எஸ் எனப்படும் பேஷியல் ரிகக்னைசேஷன் சிஸ்டம் (FRS) எனும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அறிமுகமான இந்த எப்ஆர்எஸ் மென்பொருளின் உதவியுடன், தேசிய தலைநகர் ஆன தில்லியில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் சுமார் 45,000 குழந்தைகளின் முகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டது.

குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் பணி.!

குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் பணி.!

ஸ்கேன் செய்யப்பட்ட குழந்தைகளின் அடையான்களில் இருந்து, அதில் 2,930 குழந்தைகள் காணமல் போனோர்களின் பட்டியலில் உள்ளதென்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது காணாமற்போன குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் பணிகளில் தில்லி போலீசார் ஈடுபட்டுள்ளன.

பொருந்தும் பட்சத்தில்.!

பொருந்தும் பட்சத்தில்.!

எப்ஆர்எஸ் (FRS) மென்பொருளானது அதன் நினைவகத்தில் ஒரு குழந்தையின் முக அம்சங்களை சேமித்து வைத்திருக்கும் திறன் கொண்டது. அது காணாமற்போன குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் ட்ராக் சைட் போர்ட்டில் கிடைக்கின்ற மற்ற தரவுத்தளங்களுடன் பொருந்தும் பட்சத்தில், ஒரு குழந்தை காணாமல் போன பட்டியலில் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த எப்ஆர்எஸ் மென்பொருள் ஆனது காணாமற் போன குழந்தைகளை உள்ளடக்கிய வழக்குகளை தீர்ப்பதற்கான செயல்முறையை மிக மிக எளிமையாக்கும் என்பது வெளிப்படை.!

அடுத்த நாளே விசாரணை தொடங்கியது.!

அடுத்த நாளே விசாரணை தொடங்கியது.!

டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் கீழ் தான், இந்த விசாரணை தொடங்கியது என்பதும், காணாமல் போன ஏழு லட்சம் குழந்தைகளின் புகைப்படம் மற்றும் தரவுகளை, மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து தில்லி காவல்துறைக்கு பகிரப்பட்ட அடுத்த நாளே விசாரணை தொடங்கியது என்பதும், அதன் விளைவாகத்தான், முதற்கட்டமாக சுமார் 3000 குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை அடைய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facial recognition system helps trace 3,000 missing children in Delhi in just 4 days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X