ஏலியன்கள் இங்கே இருக்கலாம் - பொசுக்கென்று உண்மையை போட்டுடைத்த ஆய்வு!
நிகழ்த்தப்பட்ட ஆய்வானது, நமது சூரிய மண்டலத்திற்கு வெளியில் உள்ள கிரகங்களின் சுற்றுப்பாதைகளில் உள்ள நிலவுகளில் தேவையான திரவ நீர் இருக்கலாம் என்கிறது.
சூரிய மண்டலத்தில் நமது பூமி கிரகத்தினால் பிழைக்க முடிகிறது, அதன் வழியாக உயிர்களை (நம்மை) வளர்க்க முடிகிறது என்றால், வேறு எதோ ஒரு மண்டலத்திலும் இது சாத்தியம் தான் என்கிற எளிமையான கோட்பாட்டை முன்வைத்தே பெரும்பாலான வேற்றுகிரகவாசிகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்கின்றன.

அவ்வாறாக, பறந்து விரிந்த பால்வெளி மண்டலங்களில், ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் எங்கே இருக்கலாம் என்று நிகழ்த்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று, "இங்கே" இருக்கலாம் என்று கூறியுள்ளது. அது எங்கே? அது சாத்தியமாக கூறப்படும் காரணங்கள் என்ன என்பதை பற்றி விரிவாக காண்போம்.

எக்ஸோபிளானட்ஸ் என்றால் என்ன?
முதலில் எக்ஸோபிளானட் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது நல்லது. நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் கிரகங்கள் ஆனது எக்ஸோபிளான்ட்ஸ் என்றும், அவைகளை சார்ந்த நிலவுகள் ஆனது எக்ஸோமூன்ஸ் அழைக்கப்படுகின்றன.

சரி, ஏலியன்ஸ் எங்கே இருக்கலாம்?
நிகழ்த்தப்பட்ட ஆய்வானது, நமது சூரிய மண்டலத்திற்கு வெளியில் உள்ள கிரகங்களின் சுற்றுப்பாதைகளில் உள்ள நிலவுகளில் தேவையான திரவ நீர் இருக்கலாம் என்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 4,000 க்கும் மேற்பட்ட எக்ஸோபிளான்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இங்கிலாந்தில் உள்ள லிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில் உயிர் ஆதாரம் சாத்தியமா?
அவைகளில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான எக்ஸோபிளானட்களில் மட்டுமே உயிர்வாழ்வதற்கான மண்டலங்களும், உயிர்க்காலத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதாம். இருப்பினும், சில கிரகங்கள், குறிப்பாக பெரிய வாயு ராட்ச கிரகங்களின் நிலவுகள் ஆனது திரவ நீரைக் கொண்டிருக்கும் நிலப்பரப்பைக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதெப்படி சாத்தியம்?
குறிப்பிட்ட நிலவுகள் ஆனது தான் சுற்றி வரும் கிரகங்களின் புவியீர்ப்பு விசையின் விளைவினால் உட்புறமாக சூடேற்றப்படும். அதன் விளைவாக அதனுள் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியமும், அவ்வண்ணமே பூமியை போன்றே உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கவும் வாய்ப்புள்ளது" என்கிறார் லிங்கன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆன ஜே சுட்டான். நாம் அவற்றை (நீர் ஆதாரம் கொண்ட எக்ஸோமூன்ஸ்) கண்டுபிடித்துவிட்டால், அங்கே ஏலியன் வாழ்க்கைகாண உறுதியான ஆதாரங்களையும் நாம் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்புவதாகவும் சுட்டன் கூறி உள்ளார்.

ஜே1407பி எனும் எக்ஸோபிளான்ட்!
ராயல் வானியல் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்புகள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வானது, ஜே1407பி எனும் எக்ஸோபிளான்ட்டையும், அதன் சந்திர கிரகத்தையும் நாம் முழுமையாக ஆய்வு செய்யும் பட்சத்தில் அதன் நீர் ஆதாரம் மற்றும் அதை தொடர்ந்து ஏலியன் ஆதாரங்களை சேகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள எக்ஸோபிளான்ட்டின் அளவு மற்றும் தூரம் காரணமாக, அவைகளின் வெளிப்புறம் சார்ந்த எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆராய்வது கடினமென்றால் எப்படி கண்டுபிடிக்கபட்டது?
இதுமாதிரியான கோள்களை சுற்றியுள்ள விண்வெளி பொருட்களின் (எடுத்துக்காட்டுக்கு புதன் கிரகம் கொண்டிருக்கும் மோதிரத்தை கூறலாம்) மீது ஏற்படும் தாக்கத்தை வைத்தே இவைகள் கண்டறியப்படும். ஜே1407பி கிரகத்தை பொறுத்தவரை புதன் கிரகத்தை 200 மடங்கு பெரிய அளவிலான மோதிரங்கள் உள்ளன. ஒருவேளை இந்த குறிப்பிட்ட கிரகம் கூர்ந்து ஆராயும் பட்சத்தில், ஏலியன் சார்ந்த ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஏலியன்கள் பூமிக்கு இறங்கு வருவதற்கு முன்னர் நாம் அவைகளை கண்டுபிடிக்கிறோமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications