பதற வைக்கும் பேய் போட்டோ உருவானது இப்படித்தான்!

By Meganathan
|

கேமரா தொழில்நுட்பம் உருவாகத் துவங்கியதும், ஆவிகளைப் படமாக்குதல் பிரபலமானதோடு அவை ஸ்மார்ட்போன் புகைப்படங்களிலும் தெரிய துவங்கி விட்டன.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனின் ஹாம்ப்டன் கோர்ட் அரண்மனை வளாகத்தில் 12 வயதான ஹாம்ஷையர் தன் ஐபோன் மூலம் உறவினர் ப்ரூக்'இனை புகைப்படம் எடுத்தார். மறுநாள் தான் எடுத்த புகைப்படங்களில் ப்ரூக் தனியாக இல்லாததைப் பார்த்து ஹாம்ப்ஷையர் அதிர்ந்து போனார்.

பதற வைக்கும் பேய் போட்டோ உருவானது இப்படித்தான்!

ஹாம்ஷையர் எடுத்த முதல் புகைப்படத்தில் விசித்திர உருவம் பதிவாகி இருந்தது, அடுத்த புகைப்படத்தில் விசித்திர உருவம் காணப்படவில்லை. இந்தப் புகைப்படம் சில நாட்கள் இணையத்தில் வைரலாகி பின் மறைந்து விட்டது.

கேமரா

கேமரா

கேமரா உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து பல்வேறு புகைப்படங்களில் இது போன்ற உருவம் பதிவாகியுள்ளது. துவக்கம் முதல் இன்று வரை கேமரா தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புகைப்படங்களில் பேய் அல்லது ஆவிகள் விதவிதமாக பதிவாகியுள்ளன.

துவக்கம்

துவக்கம்

பேய் புகைப்படங்களின் துவக்கம் 19 ஆம் நூற்றாண்டில் துவங்கியது. 1950 மற்றும் 1960களில் பல்வேறு புகைப்பட கலைஞர்களும் டபுள் எக்ஸ்போஷர் போன்ற அம்சங்களைப் பயன்படுத்தினர். இருந்தும் சிலர் இந்த அம்சங்கள் லாப நோக்கத்திற்காகத் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதை உணர்ந்தனர்.

அமெரிக்கர்

அமெரிக்கர்

அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் வில்லியம் மும்லர் என்பவர் 1860களின் துவக்கத்தில் முதன் முதலாக ஆவியைப் படமாக்கினார்.

உறவினர்

உறவினர்

வில்லியம் எடுத்த புகைப்படத்தில் அவரது உறவினரின் ஆவி தோன்றியது. உண்மையில் இது பேய் போட்டோ தானா என்பதையும் தாண்டி, மரணித்தவர்களின் உடலைப் படமாக்குவதில் வில்லியம் பிரபலமானார்.

போலி

போலி

துவக்கத்தில் வில்லியம் எடுத்த பேய் புகைப்படங்களில் ஆவி அல்லது பேய் இல்லாததை வல்லுநர்களால் உறுதி செய்ய இயலவில்லை. பின் இவர் புகைப்பட கலைஞராகப் புகழ் பெற்று அமெரிக்க உள்நாட்டுப் போரில் மரணித்தவர்களைப் புகைப்படம் எடுக்கத் துவங்கினார்.

உண்மை

உண்மை

பின் பேய் போட்டோ எடுக்க வில்லியம் பயன்படுத்திய வழிமுறை கண்டறியப்பட்டது. அதன் படி கண்ணாடி தட்டு ஒன்றை கேமராவின் முன் வைத்து படமாக்கியது தெரியவந்தது. அதாவது டபுள் எக்ஸ்போஷர் மூலம் கேமரா முன் இருப்பவர் மற்றும் கேமரா லென்ஸ் முன் இருக்கும் கண்ணாடி உருவம் சேர்ந்து பதிவாகும்.

ஆப்ரகாம் லிங்கன்

ஆப்ரகாம் லிங்கன்

வில்லியம் எடுத்த புகைப்படங்களில் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் அவரது மனைவி மேரி டாட் லிங்கன் புகைப்படமும் அடங்கும். இதே போல் வில்லியம் பலரை படமாக்கியுள்ளார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

மும்லர் எடுத்த புகைப்படங்களை எடுக்க ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் சென்று மரணித்தவர்களின் பழைய புகைப்படங்களைத் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது, இதனாலேயே பல புகைப்படங்களில் ஆவிகள் தெளிவாக பதிவாகின என்றும் கூறப்பட்டது.

முடிவு

முடிவு

பின் குற்றச்சாட்டுகள் வலுத்ததோடு சரியான ஆதாரங்களுடன் மும்லர் மேற்கொண்ட வழிமுறைகள் நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேய் புகைப்பட நிபுணராக மும்லர் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

உதயம்

உதயம்

1800களில் மும்லர் கையாண்ட சில வழிமுறைகளைக் கொண்டு மீண்டும் பேய் புகைப்பட கலைஞர்களின் வருகை அதிகரித்தாலும் இதன் மீதான குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்தது.

ஆய்வு

ஆய்வு

1875 ஆம் ஆண்டு வில்லியம் ஸ்டெயின்டன் மோசஸ் என்பவர் சுமார் 600க்கும் அதிகமான பேய் புகைப்படங்களை ஆய்வு செய்து அவற்றில் அதிகபட்சம் 12 புகைப்படங்கள் மட்டுமே விசித்திரமானவை என்பதைக் கண்டறிந்தார்.

கருத்து

கருத்து

வெறும் துடைப்பம் மற்றும் காகித்தை மட்டும் பார்த்து பேய் இது தான் எனக் கூறுபவர்கள் அதிகம் என்றும் மோசஸ் கருத்து தெரிவித்தார்.

கேமரா

கேமரா

மேலும் 1880களில் கேமரா பயன்பாடு எளிமையானதும், பேய் போட்டோக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. இது மக்களின் உணர்வுகளோடு விளையாடுபவர்களுக்குச் சாதகமாக அமைந்தது.

பேய் போட்டோ

பேய் போட்டோ

1891 ஆம் ஆண்டு செஷைர் பகுதியின் நூலகம் ஒன்றில் புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. இதில் புகைப்படம் எடுக்க சில தினங்களுக்கு முன் மரணித்த லார்டு காம்பர்மெரியின் உருவம் பதிவாகியிருந்தது. இப்புகைப்படம் பேய் புகைப்படங்களில் பிரபலமான ஒன்றாக அமைந்தது.

ஆதரவு

ஆதரவு

முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் பேய் போட்டோகிராப்பிக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் துவங்கியது. பின் வில்லியம் ஹோப் என்பவர் பேய் போட்டோ எடுப்பதில் பிரபலமானார்.

போலி

போலி

மும்லர் போன்று போலி வழிமுறைகளைப் பயன்படுத்தியதாக வில்லியம் ஹோப் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு 1922களில் ஹோப் போலி புகைப்பட கலைஞராக அறிவிக்கப்பட்டார்.

டிஜிட்டல்

டிஜிட்டல்

இன்றைய டிஜிட்டல் கேமராக்களில் பேய் போட்டோ உருவாக்குவது மிகவும் எளிய விஷயம் தான். முன்னதாக ஹாம்ப்டன் அரண்மனையில் எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இதற்கு எடுத்துக்காட்டு எனலாம்.

அனலாக்

அனலாக்

அனலாக் ஃபிலிம்களை போன்றே டிஜிட்டல் கேமராக்களும் புகைப்படம் எடுக்க சில காலம் எடுத்துக் கொள்ளும். அதுவும் இருளில் போட்டோ எடுக்கும் போதும் அதிகமாகவும். இவ்வாறு கேமரா சென்சார் புகைப்படங்களை உருவாக்கும் போது இடையே செல்லும் அனைத்தும் சிதைந்தது போல் காட்சியளிக்கும்.

மீம்ஸ்

மீம்ஸ்

இன்றைய இண்டர்நெட் யுகத்தில் போலி பேய் புகைப்படங்கள் மீம்ஸ் போன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது. எனினும் இன்றளவும் சிலர் பேய் போட்டோக்களை நம்புகின்றனர் என சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

உண்மையில் பேய் இருப்பது அவரவர் விருப்பம் ஆகும். கடவுள் மற்றும் பேய் இருப்பது இன்றளவும் 100 சதவீதம் துல்லியமாக நிரூபிக்கப்படவில்லை.!

Best Mobiles in India

English summary
Exciting history of ghost photography Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X