விடைபெற்றார் மயில்சாமி அண்ணாதுரை: இஸ்ரோவை உயர்த்தி காட்டிய பங்கு.!
தொடர்ந்த சந்திராயன்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த சந்திராயன் 1 திட்டம் வெற்றி மூலம் இந்திய அரசும் விண்வெளி துறையை ஊக்க படுத்தி வருகிறது.
மயில்சாமி அண்ணா துரை என்றால் யாராலும் மறக்க முடியாது. இவர் சந்திராயன் திட்ட இயக்குனர். உலகத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழர். மேலும் சந்திரனில் வெற்றிகரமாக சந்திராயனை தரையிறக்கினார். நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் கண்டு பிடித்து கூறியதால் உலகமே இந்தியாவின் விண்வெளித்துறையை பார்த்து வியந்தது.

இந்த திட்டம் வெற்றி வெற்றதாக இஸ்ரோ அறிவித்தது. தொடர்ந்த சந்திராயன்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த சந்திராயன் 1 திட்டம் வெற்றி மூலம் இந்திய அரசும் விண்வெளி துறையை ஊக்க படுத்தி வருகிறது.

மயில்சாமி அண்ணாதுறைக்கு பாராட்டு விழா:
இந்நிலையில் இஸ்ரோ செயற்கை கோள் மையத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுறை செவ்வாய் கிழமை ஓய்வு பெற்றார். இதையொட்டி நேற்று பெங்களூர் இஸ்ரோ அலுவலகத்தில் மயில்சாமி அண்ணாதுறைக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான இஸ்ரோ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

கண்ணீர் மல்க பிரியா விடையளித்தனர்
இதைத்தொடர்ந்து, அவருக்கு சந்திராயன் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தப்பட்டத்திற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் அவருக்கு கண்ணீர் மல்க பிரியா விடையளித்தனர். மேலும் இந்த விழாவையொட்டி அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அப்துல் கலாமை மறக்க முடியாது:
நிகழ்ச்சியில் மயிச்சாமி அண்ணா துறை கூறியதாவது: இஸ்ரோவில் பணியாற்றிய அனுவம் மிகவும் சிற்பானது. இந்தியா விண்கலம் செலுத்துவதிலும், விண்வெளி ஆராய்ச்சிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

மேலும் சாதனைகளை படைக்க வேண்டும்
இந்திய விண்வெளித்துறை மேலும் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றியது மறக்க முடியாது இவ்வாறு மயில்சாமி கூறினார்.


Click it and Unblock the Notifications