இது செவ்வாய் கிரகம் இல்லை.. நம்முடைய பூமி தான்.! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த இடம் எங்கிருக்கிறது தெரியுமா?

|

அண்மையில் செவ்வாய் கிரகம் பற்றிய செய்திகள் அதிகமாக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்ததும், இந்த செய்தியும் செவ்வாய் கிரகம் பற்றி எதோ ஒரு தகவலைத் தான் தரப்போகிறது என்று நீங்கள் தவறாகக் கருதியிருக்கலாம். ஆனால், இந்த செய்தியும், இந்த புகைப்படமும் செவ்வாய் கிரகத்தைப் பற்றியது இல்லை, நாம் வாழும் நம் பூமியைப் பற்றியது.

இது செவ்வாய் கிரகம் இல்லை, நம்முடைய பூமி தான்

இது செவ்வாய் கிரகம் இல்லை, நம்முடைய பூமி தான்

ஆம், அந்த புகைப்படத்தில் இருப்பது செவ்வாய் கிரகம் இல்லை, நம்முடைய பூமி தான். செவ்வாய் கிரகம் போல் தோற்றமளிக்கும் இந்த இடம் பூமியில் எங்கு உள்ளது என்று பார்க்கலாம்.

ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், அதன் நிறத்தை ஆக்சிடைஸ்டு செய்யப்பட்ட துருப்பிடித்த மண்ணின் நிறத்தில் இருந்து பெறுகிறது. அதேபோல், நமது பூமியானது பச்சை மற்றும் நீல நிறத்தில் நீர் ஆதாரத்துடன் தோற்றமளிக்கிறது.

சூரியக் குடும்பத்தில் உயிர்களின் அடையாளம் இருக்கும் ஒரே கிரகம்

சூரியக் குடும்பத்தில் உயிர்களின் அடையாளம் இருக்கும் ஒரே கிரகம்

நமது சூரியக் குடும்பத்தில் உயிர்களின் அடையாளம் இருக்கும் ஒரே கிரகமாக நமது பூமி மட்டுமே பார்க்கப்படுகிறது. இருப்பினும் நமது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான அடையாளங்களைத் தேடி வருகிறது. இது மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறது.

சரி, விஷயத்திற்கு வருவோம். நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் இந்த மாத தொடக்கத்தில் படம்பிடித்துள்ளார்.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

நம்பமுடியாத அளவிற்கு செவ்வாயுடன் ஒற்றுமையை காட்டிய பூமி

நம்பமுடியாத அளவிற்கு செவ்வாயுடன் ஒற்றுமையை காட்டிய பூமி

நம்ப முடியாத பூமியின் இந்த தோற்றத்தைப் புகைப்படம் எடுக்கும்போது, பூமி செவ்வாய் கிரகம் போலத் தோற்றமளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கிரகங்களும் நம்பமுடியாத அளவிற்கு ஒத்ததாக தோற்றமளித்துள்ளது என்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணம் செய்யும் அந்த வீரர் குறிப்பிட்டுள்ளார்.

" சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்த காட்சியைக் கண்டதும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வருவதாக நினைத்தேன்.!" இந்த அண்டக் கலவைக்கும், இதன் தோற்றத்திற்கும் ஒரு எளிய விளக்கம் உள்ளது.

பூமியில் இது எந்த இடம் என்று தெரியுமா?

பூமியில் இது எந்த இடம் என்று தெரியுமா?

இந்த புகைப்படத்தில் செவ்வாய்க் கிரகம் போல் நாம் பார்ப்பது, பூமியில் இருக்கும் ஒரு பாலைவனத்தின் சமமான சிவப்பு மண் பரப்பாகும். துரதிர்ஷ்டவசமாக, இதை அடையாளம் காண்பது சற்று கடினமாக இருந்துள்ளது. இருப்பினும், இருண்ட மலைத்தொடர்களைப் பார்த்தால் இது திபெஸ்டி மலைகள் என்பது தெரிகிறது.

இது வட ஆபிரிக்காவில் சாட் மற்றும் லிபியாவில் அமைந்துள்ளது.

இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்

பூமியின் மிகப் பெரிய பாலைவனம்

பூமியின் மிகப் பெரிய பாலைவனம்

இந்த மலைகள் சஹாராவின் ஒரு பகுதியாகும், இது ஆப்பிரிக்காவின் முழு கண்டத்திலும் 31 சதவிகிதத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு மிகப் பெரிய பாலைவனமாகும். மேலும், இது பூமியில் காணப்படும் அழகிய ஆரஞ்சு மணலுக்கு நன்கு அறியப்பட்ட ஒரு இடமாகும். இருப்பினும், 'இந்த புகைப்படம் பூமியா அல்லது செவ்வாய் கிரகமா?' என்று சந்தேகமடைய வைக்கிறது. இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் மற்றொரு வேறுபாடும் புகைப்படத்தில் நமக்குத் தெரிகிறது.

அழகான தெளிவான நீல நிறத்தில் வளிமண்டலம்

அழகான தெளிவான நீல நிறத்தில் வளிமண்டலம்

பூமியின் வளிமண்டலம் ஒரு அழகான தெளிவான நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்தை விட இது மிகவும் நீலமான நிறத்தை உடையது. பெஸ்கெட்டின் படம் பூமியின் கையொப்பம் நீல நிற ஸ்மியர் சிவப்பு மண்ணை உள்ளடக்கியது. அப்படியிருந்தும், பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் சராசரியாக 225 மில்லியன் கிலோமீட்டர் (140 மில்லியன் மைல்கள்) இருந்தபோதிலும் , சில நேரங்களில் இந்த இரண்டு உலகங்களும் நாம் நினைப்பதை விட ஒத்தவை என்பதை நினைவூட்டலாக இந்த படம் செயல்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
European Space Agency astronaut Thomas Pesquet Captured photo of Earth looking like Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X