இரண்டாம் உலக போரில் நாஜி தலைவர்கள் பயன்படுத்திய எனிக்மா இயந்திரம் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு..

|

இரண்டாம் உலகப் போரின்போது குறியிடப்பட்ட செய்திகளை அனுப்ப நாஜிக்கள் பயன்படுத்திய எனிக்மா குறியாக்க இயந்திரம் (Enigma encryption machine) பால்டிக் பெருங்கடல் பகுதியிலிருந்து மீன் பிடிக்க சென்ற ஜேர்மன் டைவர்ஸ்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை அந்த டைவர்கள் தற்பொழுது அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளனர். இது பற்றிய பல சுவாரசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

மீன்பிடி வலையில் சிக்கிய 'டைப்ரைட்டர்'

மீன்பிடி வலையில் சிக்கிய 'டைப்ரைட்டர்'

வடகிழக்கு ஜெர்மனியில் உள்ள கெல்டிங் விரிகுடாவில் கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளைத் தேடியபோது, ​​இந்த புகழ்பெற்ற எனிக்மா குறியாக்க இயந்திரம் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய 'டைப்ரைட்டர்' உடன் வலை சிக்கி இருக்கிறது" என்று முன்னணி டைவர் கருதியுள்ளார். ஆனால், இது ஒரு வரலாற்று கலைப்பொருளை தாங்கள் கண்டறிந்துள்ளனர் என்பதை உணர்ந்ததும் குழு விரைவாக உரிய அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.

உப்பிலிருந்து மீட்டெடுக்க்கும் பணி துவக்கம்

உப்பிலிருந்து மீட்டெடுக்க்கும் பணி துவக்கம்

ஜெர்மனியின் ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் பிராந்தியத்தில் உள்ள மாநில தொல்பொருள் அலுவலகத்தின் தலைவர் உல்ஃப் இக்கரோட், இந்த இயந்திரத்தை மாநில தொல்பொருள் அருங்காட்சியகத்தின் நிபுணர்களால் மீட்டெடுக்கப்படும் (restored) என்றார்.

ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!

உப்பு கரைய ஒரு வருடம் ஆகுமா?!

உப்பு கரைய ஒரு வருடம் ஆகுமா?!

பால்டிக் கடற்பரப்பில் ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த எனிக்மா இயந்திரத்தில் உள்ள முழுமையான உப்பு நீக்கம் செயல்முறை (desalination) முழுமையாக நிறைவடைய "ஒரு வருடம் ஆகும்" என்று அவர் கூறியுள்ளார்.

ஜெர்மன் போர்க்கப்பலிலிருந்து எனிக்மா இயந்திரம் வீசப்பட்டிருக்கலாம்

ஜெர்மன் போர்க்கப்பலிலிருந்து எனிக்மா இயந்திரம் வீசப்பட்டிருக்கலாம்

அதன் பிறகு, எனிக்மா இயந்திரம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் கடற்படைக் கழகத்தைச் சேர்ந்த கடற்படை வரலாற்றாசிரியர் ஜான் விட், இந்த எனிக்மா இயந்திரத்தில் மூன்று ரோட்டர்கள் இருக்கலாம் என்றும், இரண்டாம் உலக போரின் இறுதி நாட்களில் ஜெர்மன் போர்க்கப்பலிலிருந்து இந்த எனிக்மா இயந்திரம் வீசப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.

கலிபோர்னியாவில் தோன்றிய மர்மமான மூன்றாவது மோனோலித் உருவம்.! ஏலியன் செயலா? அல்லது ரசிகர்களின் செயலா?கலிபோர்னியாவில் தோன்றிய மர்மமான மூன்றாவது மோனோலித் உருவம்.! ஏலியன் செயலா? அல்லது ரசிகர்களின் செயலா?

அடோல்ஃப் ஹிட்லரின் யு-படகில் இருந்த எனிக்மா இயந்திரமா?

அடோல்ஃப் ஹிட்லரின் யு-படகில் இருந்த எனிக்மா இயந்திரமா?

அடோல்ஃப் ஹிட்லரின் யு-படகுகள் மிகவும் சிக்கலான நான்கு-ரோட்டார் எனிக்மா இயந்திரங்களைப் பயன்படுத்தியதால், இது ஒரு நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வந்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. எனிக்மா இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட குறியீடுகளை டிக்ரிப்ட் செய்ய நேச நாட்டுப் படைகள் அயராது உழைத்தன, ஒவ்வொரு எனிக்மா தகவல்களும் 24 மணி நேரத்திற்கும் ஒரு முறை மாற்றப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1941 இல் எனிக்மா குறியீட்டை உடைத்த குழு எது?

1941 இல் எனிக்மா குறியீட்டை உடைத்த குழு எது?

நவீன கணிதவியலின் தந்தையாகக் கருதப்படும் பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஆலன் டூரிங், பிரிட்டனின் பிளெட்ச்லி பூங்காவில் ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கினார், இக்குழு 1941 இல் எனிக்மா குறியீட்டை உடைத்து சாதனை படைத்தது. ஜேர்மன் இராணுவ இயக்கங்கள் பற்றிய முக்கியமான வானொலி செய்திகளை நேச நாடுகள் புரிந்துகொள்ள இந்த எனிக்மா முன்னேற்றம் உதவியது. எனிக்மா தகவல்கள் புரியாமல் சில குழப்பங்களும் இரண்டாம் போரின் போது நிகழ்ந்துள்ளது.

தி இமிட்டேஷன் கேம்

தி இமிட்டேஷன் கேம்

எனிக்மா குறியீட்டை உடைத்து, இரண்டாம் போரை சுமார் இரண்டு ஆண்டுகள் குறைத்து என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இந்த கதை 2014 ஆம் ஆண்டில் "தி இமிட்டேஷன் கேம்" (The Imitation Game) என்ற திரைப்படம் வழியாக வெளி உலகிற்கு வெளிவந்தது. இதில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரிட்டிஷ் நடிகர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் டூரிங் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Enigma Code Machine Used by Nazi Leaders During World War II Found in Baltic Sea By German Divers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X