விண்வெளி சுற்றுலாவிற்கு தயாரா?அடுத்த வருடம் டிக்கெட் விற்பனை ஆரம்பம்!
எது எப்படியிருந்தாலும் இந்நிறுவனம் கண்டிப்பாக பயணிகள் விண்கலத்தை அனுப்பும் என கூறியநிலையில், அந்த புதிய விண்கலத்தின் அனிமேட்டேட் வீடியோவையும் மக்களுக்கு காட்டியுள்ளது.
பில்லியனர்களான ஜெப் பீசோஸ், இலான் மஸ்க் மற்றும் ரிச்சர்ட் ப்ரான்சன் இடையான போர், அடுத்த ஆண்டு விண்வெளியில் யார் முதல் பயணியை அனுப்புவது என்பதில் வெடித்துள்ளது.

அமேசான் வெப் சர்வீஸ் பொதுத்துறை கருத்தரங்கில் பேசிய ப்ளூ ஆரிஜீன் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ராப் மெயர்சன், "எங்களின் முதல் பரிசோதனை பயணியை விரைவில் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்" எனக் கூறினார்.

டிக்கெட் விற்பனை
அத்துடன் டிக்கெட் விற்பனையை 2019ல் துவங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும் அந்நிறுவனம் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.ஜெப் பீசோஸும் டிக்கெட் விலை எவ்வளவு என்பதை வெளியிட மறுத்துவிட்டார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்
"டிக்கெட்டின் விலை என்பது இன்னமும் எங்களுக்கு தெரியாது. இன்னும் முடிவு செய்யவில்லை" என மே 25ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த தேசிய விண்வெளி சமூகத்தின் சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
எது எப்படியிருந்தாலும் இந்நிறுவனம் கண்டிப்பாக பயணிகள் விண்கலத்தை அனுப்பும் என கூறியநிலையில், அந்த புதிய விண்கலத்தின் அனிமேட்டேட் வீடியோவையும் மக்களுக்கு காட்டியுள்ளது.
இந்த புதிய ஷப்பார்ட் வாகனங்கள் எட்டு முறை பறந்துள்ளது. சமீபத்தில் ஏப்ரல்29ல் பறந்தது மற்றும் அது ப்ளூ மூன் லூனார் லேண்டரில் செயல்பட்டு வருகிறது.

கோடைகாலத்தில்
அடுத்த பயணம் எப்போது திட்டமிடப்பட்டுள்ளது என ப்ளூ ஆரிஜின் நிறுவனம் வெளிப்படுத்தாத நிலையில், அதன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தலைவர் டீன் காஸ்மேன் கூறுகையில், 'கோடைகாலத்தில்' அடுத்த பயணம் இருக்கும் என கூறியுள்ளார்.
ஒப்பீட்டளவில் பார்த்தால், வெர்ஜின் கேலக்டிக் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே டிக்கெட் விற்பனையை துவங்கிய நிலையில், இன்னமும் ஸ்பேஸ்ஷிப்2 கட்டமைப்பின் துவக்க நிலையில் தான் உள்ளது. இந்நிறுவனத்திடம் சுமார் 700 வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பணத்தை டெபாசிட் செய்துள்ளனர்.
கடந்த மாதம் சுற்றுவட்டப்பாதைக்கு சுற்றுலா பயணிகளை அனுப்பிவைப்பதில் அடுத்த அடி எடுத்த வைத்தது போல ,சமீபத்திய பரிசோதனை விண்கலம் பாதிதூரத்தை கடந்து விண்வெளியின் எல்லையை தொட்டது.

எலன் மஸ்க்
ஒயிட்கினைட் 2 என்று அழைக்கப்படும் சுமந்துசெல்லும் கலம், யூனிட்டி விண்கலத்தை விண்வெளியில் செலுத்தும் முன்பு 45,600 அடி உயரத்தில் நிலைநிறுத்தியது.
யுனிட்டி விண்கலத்தை சுமக்கும் இரண்டாவது இராக்கெட், கலிபோர்னியா பாலைவனத்தில் உள்ள மொஜாவா ஏர் அண்ட் ஸ்பேஸ் போர்ட்டிலிருந்து செலுத்தப்பட்டு அங்கேயே தரையிறங்கியது.
பரிசோதனை விண்கலம், ஏப்ரல் மாத உயரத்தை முறியடித்து, 84,271அடி என்ற உச்சபட்ச உயரத்தை அடைந்தது.
எலன் மஸ்க்-ம் மனிதர் செல்லக்கூடிய டிராகன் கேப்சூலை விண்ணிலுள்ள சர்தேச விண்வெளி மையத்திற்கு நாசா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த ஆண்டு செலுத்தும் தேதியை வெகுவிரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து பணம் செலுத்தி சுற்றுலா பயணிகளையும்நிலவுக்கு அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

எப்படி செல்கிறது
மேற்கு டெக்சாஸில் உள்ள ப்ளூ ஆரிஜின் அமைப்பின் பரிசோதனை களத்தில் வெகு சமீபத்தில் கடந்த வாரம் ,தனித்துவ அம்சங்கள் மற்றும் மிகப்பெரிய ஜன்னல்களுடன் கூடிய விண்கலமான வெர்சன் 2.0 'க்ரூ கேப்சூல்' விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த பரிசோதனைகள் எப்படி செல்கிறது என்பதை பொறுத்து இன்னும் ஒரு ஆண்டில் மனிதர்கள் உள்ள விண்கலத்தை செலுத்த தயாராக உள்ளோம். எங்களது இணையதளத்தில் இன்னும் டிக்கெட் விற்பனையை துவங்கவில்லை.

ராக்கெட்
மனிதர்கள் பயணிக்கக்கூடிய வகையிலான ராக்கெட் மற்றும் கேப்சூல் அடுத்தாண்டு இறுதிக்குள் முழுவதும் பரிசோதித்து தயாரான பின்பு தான் டிக்கெட் விற்பனையை துவங்குவோம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
பரிசோதனை விண்கலத்தில் செல்லும் குழுவின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விண்கலத்தின் ஒவ்வொரு இருக்கையின் அருகிலும், பல அடுக்கு கொண்ட எளிதில் உடையாத பொருட்களால் செய்யப்பட்ட பெரிய ஜன்னல் இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications