மூளையின் மூலம் எதையும் கட்டுப்படுத்தும் எலன் மஸ்க்கின் புரட்சிகர தொழில்நுட்பம்!

மனிதர்கள் நேரடியாக கணினிகளுடன் தொடர்புகொள்ள வைக்கக்கூடிய ஒரு இடைமுகத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

|

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் பல்வேறு செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அவற்றில் ஒன்று அவர் நிறுவிய நியூராலிங்க் (Neuralink) என்று அழைக்கப்படும் நிறுவனமாகும்.

மூளையின் மூலம் எதையும் கட்டுப்படுத்தும் எலன் மஸ்க்கின் தொழில்நுட்பம்!

மனிதர்கள் நேரடியாக கணினிகளுடன் தொடர்புகொள்ள வைக்கக்கூடிய ஒரு இடைமுகத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. மேலும் இம்முயற்சியில் அந்நிறுவனம் வெற்றி பெற்றிருக்கலாம் என தெரிகிறது.

மூளை-கணினி இடைமுகம்

மூளை-கணினி இடைமுகம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மஸ்க், மூளை-கணினி இடைமுகம் ( brain-computer interface )பற்றிய சாத்தியமான எதிர்கால அறிவிப்பு பற்றி சிறுகுறிப்பை மறைமுகமாக தெரிவித்தார். நியூராலிங்க் தொடர்பாக ஏதேனும் புதிய தகவல்கள் உள்ளதாக என ட்விட்டரில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு விடையளிக்கையில் "விரைவில் வருகிறது" என்று சுருக்கமாக குறிப்பிட்டார்.

நியூராலிங்க்

நியூராலிங்க்

முன்னதாக மஸ்க் நியூராலிங்க் செய்துவரும் பணிகுறித்து விவரிக்கையில் "நேரடி உடற்கூறியல் இடைமுகம்" என தெரிவித்தார். இதன் யோசனை என்பது, மனிதர்கள் உள்ளீடு மற்றும் வெளியீட்டு சாதனங்களைப் பயன்படுத்தி ஒரு கணினியின் செயலாக்க சக்தியை பெறுவதற்கு பதிலாக, நம் மூளை மற்றும் கணினியின் செயலிகளிடையே உள்ள இடைவெளியை நேரடியாக இணைக்கும் ஒரு சாதனம் சிறந்ததாக இருக்க முடியும்.இதன்மூலம் நம் சொந்த மூளையை கணினியின் கணிப்பு சக்தி மூலம் மேலும் விஸ்தரித்து , நம்மை நமது மேம்பட்ட பதிப்புகளாக மாற்றிடமுடியும்.

 டிரான்ஸ்ஹியுமனிஸ்ட்

டிரான்ஸ்ஹியுமனிஸ்ட்

நியூராலிங்க் சில வகையான டிரான்ஸ்ஹியுமனிஸ்ட் (transhumanist )புரட்சியை செய்யவுள்ளதா அல்லது வணிகரீதியான சாதனத்தின் ஒரு புதிய வகையாக இருக்க விரும்புகிறதா என்பது இன்னும் தெளிவாக இல்லை. இந்நிறுவனத்தின் அனைத்து ஆராய்ச்சிகளும் இன்னும் இரகசயமாக வைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இதுவரை பார்த்த ஒரே விளைவு, ஐந்து வெவ்வேறு ஆராய்ச்சியாளர்கள் நியூரோலிங்க் உடன் இணைந்து எழுதி இன்னும் வெளியிடப்படாத விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரையின் ஒரு அறிக்கை மட்டுமே.

சமிக்ஞை

சமிக்ஞை

மூளையின் சமிக்ஞை களை படித்து புரிந்து கொள்ளும் திறன் கொண்ட நெகிழ்வான பாலிமர் எலக்ரோட்-ஐ எலியின் மூளைக்குள் செலுத்தும் ஒரு ஊசி போன்ற சாதனத்தை பரிசோதனை செய்வதை அந்த ஆய்வுக்கட்டுரை விவரிக்கிறது. நிச்சயமாக அது சரியாக என்ன செய்யும் திறன் கொண்டது என்பதை அறிந்தாலும் கூட, அச்சாதனத்தை மனிதர்களை கொண்டு பரிசோதனை செய்ய இன்னும் பல வருடங்கள் ஆகலாம்.

Best Mobiles in India

English summary
Elon Musk Will Soon Let You Control Anything With Your Brain With This Revolutionary Technology: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X