சாட்டிலைட் மூலம் இலவச இண்டர்நெட்: எலன் மாஸ்க் அதிசய திட்டம்

ஸ்டார்லிங் என்ற பெயருடைய இந்த திட்டத்தின் மூலம் 4425 பிராட்பேண்ட் இண்டர்நெட் சாட்டிலைட்டுகளை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

|

இண்டர்நெட் என்பது இன்றைய காலகட்டத்தில் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் உலகில் உள்ள அனைவருக்கும் அதிவேக இண்டர்நெட் கிடைக்கும் வகையில் எலன் மாஸ்க் என்பவர் இரண்டு சிறிய வகை சாட்டிலைட்டுகளை விண்ணில் நிறுவ திட்டமிட்டுள்ளார்.

சாட்டிலைட் மூலம் இலவச இண்டர்நெட்: எலன் மாஸ்க் அதிசய திட்டம்

ஸ்டார்லிங் என்ற பெயருடைய இந்த திட்டத்தின் மூலம் 4425 பிராட்பேண்ட் இண்டர்நெட் சாட்டிலைட்டுகளை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணில் இந்த 4425 பிராட்பேண்ட் இண்டர்நெட் சாட்டிலைட்டுக்களை நிறுவும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் பூமியில் இருந்து 700 முதல் 800 கிமீ உயரத்தில் நிறுத்தப்படும் இந்த சாட்டிலைட்டுகளால் உலகில் உள்ள அனைவரும் அதிவேக இண்டர்நெட்டை பெற முடியும். அதேபோல் 7500 லோயர் ஆர்பிட் சாட்டிலைட்டுக்களையும் அனுப்ப இவர் திட்டமிட்டுள்ளார். எனவே மொத்தம் சுமார் 12 ஆயிரம் சாட்டிலைட்டுகளால் இண்டர்நெட் உலகில் புதிய புரட்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

2015ஆம் ஆண்டில்

2015ஆம் ஆண்டில்

கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து இந்த முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் எடுத்து வந்தபோதிலும் இந்த திட்டம் முழுவதையும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இதுகுறித்து ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களில் இருந்து எலன் மஸ்க் இந்த திட்டத்திற்காக பெடரல் கம்யூனிகேசன்ஸ் கமிஷனின் ஒப்புதலை பெற்றுவிட்டதாக தெரிகிறது.

 மைக்ரோசாட் 2ஏ, மைக்ரோசாட் 2பி

மைக்ரோசாட் 2ஏ, மைக்ரோசாட் 2பி

இந்த ஒப்புதலை அடுத்து ஸ்பேஸ் எக்ஸ் மைக்ரோசாட் 2ஏ, மைக்ரோசாட் 2பி ஆகிய இரண்டு சாட்டிலைட்டுக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இந்த இரண்டு சாட்டிலைட்டுகள் இண்டர்நெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாட்டிலைட் ஃபால்கான் 9

சாட்டிலைட் ஃபால்கான் 9

கடந்த புதன்கிழமை இந்த சாட்டிலைட் ஃபால்கான் 9 என்ற ராக்கெட் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை காரணமாக இந்த சட்டிலைட் வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து எலன் மாஸ்க் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

இந்த சாட்டிலைட் ஒருமுறை அனுப்புதல் மட்டுமின்றி மீண்டும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடக்கத்தில் ஃபால்கான் 9எஸ் முதல் கட்டத்தை மீட்க முயற்சிப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் கூறியது. இந்த பாஸ் செயற்கைக்கோள் 11 நிமிடங்களுக்குள் ஏவுதளத்திற்கு அனுப்பப்பட வேண்டும், ஆனால் சிறிய செயற்கைக்கோள்களின் கால அளவைப் பற்றி எதுவும் இல்லை.

Best Mobiles in India

English summary
Elon Musk Will Bring Free Internet To The Whole World: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X