மனித மூளையை இண்டர்நெட் உடன் இணைக்க விரும்பும் எலன் மஸ்க்!
எலன் மஸ்க்-ன் நியூரோடெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனமான நியூராலிங், அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெகுவிரைவில் மனித மூளையில் சாதனங்களை பொருத்த முடியும் என நம்புவதாக கடந்த செவ்வாயன்று அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ...
"அடுத்த ஆண்டு இறுதிக்குள் இதை ஒரு மனித நோயாளிக்கு பொறுத்துவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளோம். அது வெகு தொலைவில் இல்லை" என்று கடந்த செவ்வாயன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த புதிய கண்டுபிடிப்பில் ஏற்படும் முன்னேற்றங்கள் தொடர்பான அப்டேட்களை கூறும்போது தெரிவித்தார் மஸ்க்.

நியூயோர்க் டைம்ஸ்
நியூயோர்க் டைம்ஸ் தகவலின் படி, 2014 ஆம் ஆண்டில் இந்த இரகசிய நிறுவனம் நிறுவப்பட்டதில் இருந்து சுமார் 100மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளார் மஸ்க். உலகின் சில முன்னணி நியூரோ விஞ்ஞானிகளை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள அதன் ஆய்வகத்தில் ஒருங்கிணைத்துள்ளது நியூராலிங்க் நிறுவனம்.

செயற்கை நுண்ணறிவுடன் கூட்டுவாழ்வு
மூளை-இயந்திர இடைமுகம் (brain-machine interface) என குறிப்பிடப்படும் ஒரு சிறிய சிப்-ஐ விருப்பப்படுபவர்களின் மூளையில் பொருத்த நியூராலிங் சிஸ்டம் அனுமதிக்கும் எனவும், இதன் மூலம் மனிதர்கள் "செயற்கை நுண்ணறிவுடன் கூட்டுவாழ்வு"-ஐ வெற்றிகரமாக அடையமுடியும் எனவும் கூறுகிறார் மஸ்க்.

நியூரான்கள் அல்லது நரம்புசெல்
அதிகபட்சமாக 4 மிமீ × 4 மி.மீ. என்ற அளவில் இந்த சிறிய சிப்கள் நெகிழ்வுத்தன்மை கொண்ட சிறு எலக்ரோடு இழைகளை பயன்படுத்தி,மனித மூளையில் உள்ள நியூரான்கள் அல்லது நரம்புசெல்களை தூண்டுவதன் மூலம் மற்ற செல்களை தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எலக்ட்ரோட் இழையும் துல்லிய ரோபோட்-ஐ பயன்படுத்தி, LASIK கண் அறுவைசிகிச்சை போல பாதுகாப்பான மற்றும் வலியில்லா செயல்முறை மூலம் உட்செலுத்தப்படும் என்கிறார் மஸ்க்.

அறுவைசிகிச்சை போல இல்லை
"இது ஒரு பெரிய அறுவைசிகிச்சை போல இல்லை . லேசிக் வகை சிகிச்சைக்கு சமமானதாகும்" என்று அவர் கூறினார். இந்த எதிர்கால அமைப்பிற்கான ஒப்புதலை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திலிருந்து பெற அதிகநேரம் எடுக்கும் என ஒப்புக்கொள்கிறார் மஸ்க்.

எலக்ட்ரோட் சிமுலேட்டிங் சிஸ்டம்
அல்ஜீமர் அல்லது பார்கின்சன் நோய் போன்ற மூளை கோளாறுகளை சரிசெய்ய இந்த கருவியை பயன்படுத்தப்படலாம் என்று கூறும் மஸ்க், இதன்மூலம் மூளை செயல்பாடுகளை பாதுகாப்பதுடன் மேம்படுத்தவும் முடியும் என்கிறார். மற்ற எலக்ட்ரோட் சிமுலேட்டிங் சிஸ்டம்களை காட்டிலும் நியூராலிங்க் சிப்கள் 1,000 மடங்கு அதிக திறனுடையதாக இருக்கும் என்கிறார்.

கம்பியில்லா சாதனம்
நியூராலிங் தலைவர் மேக்ஸ் ஹோடாக் கூறுகையில், இந்த கருவியானது கம்பியில்லா சாதனம் என்றும், ஆண்டுகளில் இருந்து தசாப்தங்களுக்கு நீடித்துநிலைத்து செயல்படும் எனவும் கூறியுள்ளார்.
அடுத்த தலைமுறைக்கான மூளை-கணினி இணைப்பை உருவாக்கும் மஸ்க்-ன் முயற்சிகளை சிலர் பாராட்டியிருந்தாலும், சிக்கலான அமைப்பைச் சுற்றியுள்ள மிகைப்படுத்தல்கள் இன்னும் நியாயப்படுத்தப்படாமல் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூளை பாதிப்பு
கடந்த ஆண்டு இதுபோன்ற அமைப்புகள் மூளை பாதிப்பு, வீக்கம் மற்றும் வடு உள்ளிட்ட ஆபத்துகளுடன் வெளிவந்தன என்கிறார் நியூரோஃபீட்பேக் நியூரோபூஸ்டை நிறுவிய மருத்துவர் பிலிப் ஹெய்லர்.

தொடுதிரைகள் அல்லது அலெக்ஸா
"தொடுதிரைகள் அல்லது அலெக்ஸா உள்ளிட்ட மொழி உதவியாளர்கள் போன்ற பிற இடைமுகங்களை விட இதில் என்ன நன்மை இருக்கிறது என்று நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்" என்கிறார் ஹெய்லர்.


Click it and Unblock the Notifications