Home
Scitech

நிலவில் விபத்திற்குள்ளான ஏலியன் விண்கலத்தை மீட்க வலியுறுத்தும் எலன் மஸ்க்!

"வெளிப்படையாக பார்த்தால் எலன் மஸ்க் இதை கவனம்செலுத்துவதஹ்கான நல்ல யோசனை என்று பல மக்கள் எண்ணுகின்றனர்.

வேற்றுகிரக விண்கலன்களுக்கான தேடுதலில் ஈடுபட்டு வரும் ஸ்காட் சி வாரிங் என்பவர், சந்திரனின் பள்ளத்தாக்கு பகுதியில் 10 மைல் நீளமான விண்கலத்தை கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி ஏலியன் விண்கலமான அதில், தகவல் புதையல் மற்றும் இரகசிய தொழில்நுட்பங்கள் இருக்கலாம். யுஎப்ஓ சைட்டிங்ஸ் டெய்லி என்ற சதிகோட்பாடு தளத்தை நடத்திவரும் வாரிங், அந்த விண்கலத்தை மீட்பதற்கான முயற்சியில் எலன் மஸ்க்-ஐ தொடர்புகொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " நான் எலன் மஸ்க்க்கு டிவீட் செய்தேன். அதற்கு மக்கள் செய்த ரீடிவீட்களை பார்த்து வியந்தேன்" என கூறியுள்ளார்.

விபத்திற்குள்ளான ஏலியன் விண்கலத்தை மீட்க வலியுறுத்தும் எலன் மஸ்க்!

"வெளிப்படையாக பார்த்தால் எலன் மஸ்க் இதை கவனம்செலுத்துவதஹ்கான நல்ல யோசனை என்று பல மக்கள் எண்ணுகின்றனர். "நான் கண்டுபிடித்த 10 மைல் நீளமுள்ள ஏலியன் விண்கலனை பற்றி எலன் மஸ்க்க்கு தெரிய வைத்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். இந்த குறிப்பிட்ட விண்கலனானது பூமியின் நிலவில் உள்ள வாட்டர்மன் பள்ளத்தாக்கில் உள்ளது" என்கிறார் ஸ்காட் வாரிங்.

வாரிங்

வாரிங்

"" சுமார் 10 முதல் 11 மைல் நீளம் கொண்ட உயர் தொழில்நுட்ப விண்கலனை பற்றி அவருக்கு தெரிவித்தால், அவர் அதை மீட்பதற்கான முயற்சியில் ஆர்வம் காட்டுவார் என்று நினைத்தேன் " என்கிறார் வாரிங்.

சூரிய குடும்பம்

சூரிய குடும்பம்

இந்த ஏலியன் விண்கலத்தை மீட்பதன் மூலம் சூரிய குடும்பம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள உலகங்களில் மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தும் விருப்பத்தை அதிகரிக்க முடியும் என வாதாடுகிறார் வாரிங். ஏலியன் விண்கல நிபுணரான இவர், அந்த விண்கலம் இன்னமும் இயங்கும் நிலையில் இருக்கலாம் எனவும், உரிமையாளர்களால் கைவிடப்பட்டிருக்கலாம் எனவும் விளக்குகிறார்.

10 மைல் நீளமுள்ள விண்கலத்தில் எத்தனை பேர் பயணிக்கமுடியும்

10 மைல் நீளமுள்ள விண்கலத்தில் எத்தனை பேர் பயணிக்கமுடியும்

மேலும் அவர் கூறுகையில் "இயக்கத்தில் இருக்கும் என கூறுவதற்கான அர்த்தம் என்னவெனில், உங்கள் கைபேசி எப்படி சில ஆண்டுகளில் காலாவதியானது என தெரிந்தால், அதை வாங்குவீர்களா?இல்லை தானே. அதற்கு பதிலாக புதிய மாடல் ஒன்றை வாங்குவீர்கள். எனவே 10 மைல் நீளமுள்ள விண்கலத்தில் எத்தனை பேர் பயணிக்கமுடியும் என எண்ணிப்பாருங்கள்.மற்ற கிரகங்களில் புதிய காலனிகளை தொடங்குவதற்கு போதுமானதாக இருக்கும். " என்கிறார் ஸ்காட் வாரிங்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

திரு மஸ்க் மற்றும் அவரது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவிற்கு போடப்பட்ட ட்வீட்டில், வாரிங் தென்னாப்பிரிக்க பில்லியனரை இதில் பயன்படுக்கூடிய தொழில்நுட்பம் பற்றி யோசிக்க ஊக்குவித்ததுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில்"அந்த விண்கலத்தை பூமிக்கு மீட்டுவந்தால், அதன் மூலம் பிரபஞ்சத்தில் முழுவதும் மனிதர்கள் பயணிக்கலாம். டெஸ்லா லோகோவை அந்த விண்கலத்தில் பதிப்பது ஒட்டுமொத்த கிரகத்தையும் மாற்றும்." என்கிறார்.

ஏலியன் தளத்தை கண்டறிந்த பின்னரே

ஏலியன் தளத்தை கண்டறிந்த பின்னரே

வாரிங் நிலவில் ஏலியன் தளத்தை கண்டறிந்த பின்னரே இதுபோன்ற வியக்கத்தக்க ஏலியன் விண்கலங்கள் பற்றி கூறிவருகிறார். இந்த மாதத்தின் துவக்கத்தில் இவர் நிலவில் வேற்றுகிரகவாசிகளின் தளத்தை கண்டறிந்ததாகவும், இது சூரிய குடும்பத்தில் வேற்றுகிரகவாசிகளின் செயல்பாடுகள் இருப்பதற்கான 100% ஆதாரம் எனவும் கூறினார்.

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

வாரிங் கூறும் வினோதமான ஏலியன் விண்கலன்கள் உண்மையோ இல்லையா, மஸ்கின் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எதிர்காலத்தில்கட்டாயமாக நிலவுக்கு பயணிக்கும். 2023ல் நிலவிற்கான முதல் சுற்று பயணத்தில் ஜப்பானிய கலை சேகரிப்பாளரும், பில்லியனருமான யூசகூ மயாசாவா-ஐ நிலவுக்கு அனுப்பவுள்ளது ஸ்பேஸ் எக்ஸ்.

சந்திரனுக்கு தனிப்பட்ட பயணங்கள்

சந்திரனுக்கு தனிப்பட்ட பயணங்கள்

சந்திரனுக்கு தனிப்பட்ட பயணங்கள் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு, ஸ்பேஸ் எக்ஸ் எதிர்காலத்தில் ஆழமான விண்வெளி ஆய்வு பணிகள் மேற்கொள்ளும். தற்போது , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அமெரிக்க விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக அனுப்புவதில் கவனம் செலுத்திவரும் எலன் மஸ்க், பொதுவெளியில் இன்னும் வாரிங்கின் டிவீட்டிற்கு பதிலளிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Elon Musk urged to recover 'crashed ALIEN spaceship’ on the Moon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X